தக்காளிப்பழ தொக்கு
தேவையானவை: நன்கு பழுத்த தக்காளி - 1 கிலோ, காய்ந்த மிளகாய் - 25, புளி - சிறிய எலுமிச்சம்பழஅளவு, உப்பு - ருசிக்கேற்ப, பூண்டு - 5 பல்.வறுத்துப் பொடிக்க: வெந்தயம் - அரை டீஸ்பூன், பெருங்காயம் - அரை டீஸ்பூன்.தாளிக்க: கடுகு - 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, நல்லெண்ணெய் - அரை கப், கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை: தக்காளியைக் கழுவி, துடைத்து புளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரையுங்கள். மிளகாயை காம்புநீக்கி, கொதிக்கும் நீரில் 15 நிமிடம் ஊறவையுங்கள். பின்பு மிளகாயை அரைத்து, தக்காளியுடன் சேருங்கள்.வெந்தயம், பெருங்காயம் இரண்டையும் பொன்னிறமாக வறுத்து பொடியுங்கள். பூண்டை தோலுரித்துப்பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, மிளகாய், தாளித்து, பூண்டைச் சேர்த்துபொன்னிறமாகும் வரை வதக்குங்கள். அத்துடன் தக்காளி விழுதைச் சேருங்கள். பச்சை வாசனை போகக்கொதித்த பின்னர், வெந்தயம், பெருங்காயம் பொடித்த பொடியை சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 24 | 25 | 26 | 27 | 28 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தக்காளிப்பழ தொக்கு, 30 வகையான பழ உணவுகள், 30 Type Fruit Dishes, பெருங்காயம், டீஸ்பூன், வெந்தயம், மிளகாய், Recipies, சமையல் செய்முறை