கற்பூர வாழை டாஃபி
தேவையானவை: கற்பூர வாழைப்பழ கூழ் - 1 கப், சர்க்கரை - முக்கால் கப், குளுகோஸ் - 4 டீஸ்பூன்,வெண்ணெய் - 50 கிராம், பால் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: கற்பூர வாழைப்பழங்கள் மூன்றை தோலுரித்து துண்டுகளாக்கி, கால் கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு ஆறியவுடன் மிக்ஸியில் அடித்து கூழ் எடுத்துக்கொள்ளுங்கள். பழக்கூழுடன் சர்க்கரை, குளுகோஸ்சேர்த்து அடுப்பில் வைத்து கிளறுங்கள். பொன்னிறமாக நிறம் மாறியதும் வெண்ணெய், பால்பவுடர் (சிறிதுதண்ணீரில் கரைத்து சேர்க்கவும்) சேர்த்து நன்கு ஒட்டாமல் வரும் பதத்தில் கிளறி, ஒரு நெய் தடவிய ட்ரேயில்கொட்டி சற்று ஆறியவுடன் துண்டுகள் போடுங்கள். குழந்தைகளுக்கு பயமில்லாமல் கொடுக்கக்கூடிய சத்தானடாஃபி.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 18 | 19 | 20 | 21 | 22 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கற்பூர வாழை டாஃபி, 30 வகையான பழ உணவுகள், 30 Type Fruit Dishes, , Recipies, சமையல் செய்முறை