பலாப்பழ கொழுக்கட்டை
தேவையானவை: பலாச் சுளைகள் - 10, வெல்லம் - முக்கால் கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் -அரை டீஸ்பூன், பச்சரிசி - 1 கப், உப்பு - ஒரு சிட்டிகை, தண்ணீர் - ஒன்றரை கப், நெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: அரிசியை 1 மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி நிழலில் உலர்த்துங்கள். சற்று ஈரம்இருக்கும்போதே நைஸாக அரைத்து சலியுங்கள். தண்ணீருடன் உப்பு, நெய் சேர்த்து கொதிக்க வைத்து மாவுசேர்த்து நன்கு கிளறுங்கள். இறக்கி, சற்று ஆறியதும் நன்கு பிசைந்து ஈரத்துணி கொண்டு மூடி வையுங்கள்.பலாப்பழ சுளைகளை பொடியாக நறுக்குங்கள். நெய்யைக் காய வைத்து சுளைகளை சேர்த்து குறைவான தீயில்நன்கு கிளறுங்கள். பழம் சற்று வெந்ததும் நன்கு மசித்து கொள்ளுங்கள். வெல்லத்துடன் கால் கப் தண்ணீர்சேர்த்து கொதிக்கவிட்டு, வடிகட்டி பலாப்பழ மசியலுடன் சேர்த்து அடுப்பில் வைத்து கிளறுங்கள். சற்றுகெட்டியானதும் ஏலக்காய்தூள் சேர்த்து இறக்குங்கள். ஒரு வாழை இலையில் சிறிது மாவை எடுத்து வைத்துமற்றொரு இலையில் மூடி ஒரு கிண்ணத்தால் அழுத்தவும். (இது சிறிய தோசை போலிருக்கும்) மேலே உள்ளஇலையை எடுத்து விட்டு அழுத்திய மாவின் மேல் பழக்கலவையை சிறிது வைத்து இலையை மடித்து மூடி,ஆவியில் வேக வையுங்கள். சாப்பிடும்பொழுது கொழுக்கட்டையை உரித்து எடுத்து பரிமாறுங்கள்.பலாப்பழமும் வெல்லமும் சேர்ந்து மணக்க மணக்க விருந்து படைக்கும்குறிப்பு: சுளைகளின் அளவுக்கேற்ப வெல்லத்தைக் கூட்டி, குறைத்து போடலாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 19 | 20 | 21 | 22 | 23 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பலாப்பழ கொழுக்கட்டை, 30 வகையான பழ உணவுகள், 30 Type Fruit Dishes, வைத்து, சேர்த்து, மூடி, எடுத்து, கிளறுங்கள், நன்கு, நெய், சற்று, Recipies, சமையல் செய்முறை