ஆரஞ்சு பிஸ்கட்

தேவையானவை: மைதா - 1 கப், வெண்ணெய் - 75 கிராம், சர்க்கரை - கால் கப், ஆரஞ்சு எசன்ஸ் - 2டீஸ்பூன், பேக்கிங் பவுடர் - கால் டீஸ்பூன், ஆரஞ்சு ஜூஸ் - கால் கப்.
செய்முறை: பேக்கிங் பவுடர், மைதா இரண்டையும் ஒன்றாக சலித்துக்கொள்ளுங்கள். சர்க்கரை, வெண்ணெய்இரண்டையும் ஒன்றாக சேர்த்து நன்கு குழையுங்கள். அதனுடன் மைதா சேர்த்து பிசறுங்கள். கடைசியில் ஆரஞ்சுஜூஸ் சேர்த்து நன்கு பிசைந்து, சற்று கனமான சப்பாத்திகளாக இடுங்கள்.சப்பாத்திகளை பிஸ்கட் கட்டரால் வெட்டி, வெண்ணெய் தடவி, மைதா தூவிய ட்ரேயில் அடுக்கி, ‘கேக் அவன்’இருப்பவர்கள் 160 டிகிரி சென்டிகிரேடில் பேக் செய்யுங்கள்.‘அவன்’ இல்லாதவர்கள், ‘ஆப்பிள் பை’ செய்முறையில் குறிப்பிட்டுள்ளது போல் ‘பேக்’ செய்யுங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரஞ்சு பிஸ்கட், 30 வகையான பழ உணவுகள், 30 Type Fruit Dishes, மைதா, சேர்த்து, கால், Recipies, சமையல் செய்முறை