கொய்யாப் பழ ஜூஸ்
தேவையானவை: கொய்யாப்பழம் - 4, எலுமிச்சம்பழச் சாறு - 1 டேபிள்ஸ்பூன், புதினா இலை அல்லது துளசிஇலை - 10, சர்க்கரை - 3-4 டேபிள்ஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, மிளகு தூள் - கால் டீஸ்பூன்.
செய்முறை: கொய்யாப்பழங்களை கழுவி துடைத்து சிறு துண்டுகளாக நறுக்குங்கள். மிக்ஸியில் கொய்யாதுண்டுகள், எலுமிச்சம்பழச் சாறு, சர்க்கரை, உப்பு, மிளகுதூள், தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துவடிகட்டி, குளிர வையுங்கள். பொடியாக நறுக்கிய புதினா அல்லது துளசி இலை சேர்த்து பரிமாறுங்கள்.இதுவரை பருகியிராத ருசியில் அசத்தல் ஜூஸ்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கொய்யாப் பழ ஜூஸ், 30 வகையான பழ உணவுகள், 30 Type Fruit Dishes, , Recipies, சமையல் செய்முறை