நேந்திரம் பழம் பொரிச்சு
தேவையானவை: நேந்திரம்பழம் - 2 (கெட்டியான பழம்), மைதா - ஒன்றரை கப், தேங்காய்ப்பால் - அரைகப், சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, மஞ்சள் கலர் (விருப்பப்பட்டால்) - ஒரு சிட்டிகை,எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: நேந்திரம்பழத்தை பஜ்ஜிக்கு நறுக்குவது போல் நீளவாக்கில் சற்று கனமாக நறுக்கிக்கொள்ளுங்கள்.தேவையான பொருட்களில் எண்ணெய் நீங்கலாக மற்ற அனைத்தையும் தண்ணீர் சேர்த்து, பஜ்ஜி மாவு பதத்தில்கரைத்துக்கொள்ளுங்கள்.எண்ணெயைக் காய வைத்து பழத்துண்டுகளை மாவில் அமிழ்த்தி எடுத்து, காயும் எண்ணெயில்பொரித்தெடுங்கள். கேரளாவின் பிரபலமான அயிட்டம் இந்த ‘பழம் பொரிச்சு’.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நேந்திரம் பழம் பொரிச்சு, 30 வகையான பழ உணவுகள், 30 Type Fruit Dishes, , Recipies, சமையல் செய்முறை