ஃப்ரூட் அண்ட் நட் புலவு
தேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப், ஆப்பிள், திராட்சை, பைனாப்பிள் (மூன்றும் பொடியாக நறுக்கிய)கலவை - 1 கப், பாதாம், முந்திரி (பொடியாக நறுக்கியது) - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.தாளிக்க: பட்டை - 2 துண்டு, லவங்கம் - 3, ஏலக்காய் - 3, பச்சை மிளகாய் - 5, நெய் - 3 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: பாசுமதி அரிசியை சிறிது உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள். நெய்யை காய வைத்துபட்டை, லவங்கம், ஏலக்காய், கீறிய மிளகாய், பாதாம், முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுத்து, பழங்களைசேருங்கள். 2 நிமிடம் வதக்கி சாதத்தையும் சேருங்கள். நன்கு கிளறி இறக்குங்கள். சூடாக பரிமாறுங்கள். படு‘கிராண்டா’ன அயிட்டம் இது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 11 | 12 | 13 | 14 | 15 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஃப்ரூட் அண்ட் நட் புலவு, 30 வகையான பழ உணவுகள், 30 Type Fruit Dishes, , Recipies, சமையல் செய்முறை