சீதாப்பழ பாயசம்

தேவையானவை: பால் - 1 லிட்டர், சீதாப்பழம் (நன்கு பழுத்தது) - 2, சர்க்கரை - ருசிக்கேற்ப, ஏலக்காய்தூள்- அரை டீஸ்பூன்.
செய்முறை: பாலைக் காய்ச்சி சர்க்கரை சேருங்கள். மேலும் 10-15 நிமிடங்கள் நடுத்தர தீயில் கொதிக்கவிடுங்கள். சீதாப்பழத்தை இரண்டாக உடைத்து சதை பகுதியை தனியே எடுங்கள். கையால் நன்குபிசையுங்கள். பாலை அடுப்பில் இருந்து இறக்கி ஏலக்காய்தூள், சீதாப்பழம் சேர்த்து கிளறி பரிமாறுங்கள். குளிரவைத்துப் பருகினால், சுவை ஜோர்!
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீதாப்பழ பாயசம், 30 வகையான பழ உணவுகள், 30 Type Fruit Dishes, , Recipies, சமையல் செய்முறை