கடி ஜோக்ஸ் 5 - கடி ஜோக்ஸ் :: பகுதி 2
ஒருவர் : ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி என்னோட வாட்ச் காவேரியிலே விழுந்துடுச்சு. ஆனா இன்னும் ஓடிக் கிட்டிருக்கு!
மற்றவர் : அதே வாட்சா?
ஒருவர் : இல்லே, காவேரி.
-***-
காதலி : இனிமையாக ஏதாவது சொல்லுங்களேன் !
காதலன் : லட்டு, ஜிலேபி.
-***-
ஒருவர் : வாங்க, வாங்க!
மற்றவர் : உங்கள் வீட்டில் ஒரு போர்ஷன் காலியாக இருக்கிறதாமே!
ஒருவர் : இந்தச் சாக்கிலாவது என்னைப் பார்க்க வந்தீர்களே!
மற்றவர் : சாக்கில் வரவில்லை! ஆட்டோவில் தான் வந்தேன்!
-***-
பஸ் கண்டக்டர் : பாட்டி, எங்கே போகணும்?
பாட்டி: எங்க வீட்டுக்கு!
-***-
ஒருவர் : ஏன் இத்தனை அவசரம் அவசரமாகப் பெயிண்ட் அடிக்கிறாய்?
மற்றவர் : பெயிண்ட் தீர்ந்து விடுவதற்குள் அடித்துவிட வேண்டும் என்பதற்காகத்தான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 17 | 18 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 5 - கடி ஜோக்ஸ் :: பகுதி 2, ஜோக்ஸ், ஒருவர், மற்றவர்