கடி ஜோக்ஸ் 3 - கடி ஜோக்ஸ் :: பகுதி 2
ஆசிரியர் : பூமி தன்னைத்தானே சுத்தி சூரியனைச் சுத்துமா? இல்ல சூரியன் தன்னைத்தானே சுத்தி பூமியைச் சுத்துமா?
மாணவன் : எனக்குத் தலையைச் சுத்துது சார்.
-***-
ராஜா : பக்கத்து வீட்டுக்காரன் ஓசிப் பேப்பர் கேட்கறான்னு பேப்பரை நிறுத்தியது தப்பாப் போச்சு.
காஜா : ஏன்?
ராஜா : இப்ப நியூஸ் கேட்டுட்டுத் தாரேன்னு டி.வி.ஐ ஓசி கேட்கிறான்பா.
-***-
வக்கீல் : கொலை எங்கே நடந்தது?
சாட்சி : திருப்பதியிலே சார்.
வக்கீல் : இப்படி மொட்டையா சொன்னா எப்படி?
-***-
பெரியசாமி : எங்க தலைவர் ஒரு திறந்த புத்தகம் மாதிரி.
சின்னசாமி : ஓ! அதுதான் நேத்து ரோட்டிலே போட்டு ஆளாளுக்குப் புரட்டி எடுத்தாங்களா?
-***-
ரமேஷ் : எத்தனை பெரிய ஆபத்து வந்தாலும் யானை, குதிரை எல்லாம் கத்தாது.
சுரேஷ் : ஏன்?
ரமேஷ் : யானை பிளிறும்! குதிரை கனைக்குமே!
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 17 | 18 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 3 - கடி ஜோக்ஸ் :: பகுதி 2, ஜோக்ஸ்,