கடி ஜோக்ஸ் 2 - கடி ஜோக்ஸ் :: பகுதி 2
உங்கள் மகனை ஏன் மண்ணெண்ணெய் ஊற்றிக் குளிக்க வைக்கிறீர்கள்?
அவன் மிகவும் துரு துரு வென்று இருக்கான்.
-***-
எதுக்காக சார் இப்படி வேகமாகப் படிக்கட்டு வழியாக இறங்குறீங்க?
என் கடிகாரம் மாடியிலிருந்து விழுந்துவிட்டது, சார்.
இந்நேரம் விழுந்திருக்குமே சார்?
இன்னும் விழுந்திருக்காது, சார். அது அஞ்சு நிமிஷம் ஸ்லோ!
-***-
நீங்கள் எப்பொழுதுமே இப்படித் தான் திக்குவீர்களா?
எப்பொழுதும் இல்லை. டாக்டர் பே.... பே..சு..ம் பொழுது ம.... மட்..டு...ந்தான்.
-***-
உங்களிடம் உதை வாங்குவதற்காக நான் இங்கே வரவில்லை.
அப்படியானால் நீங்கள் வழக்கமாக எங்கே போவீர்கள்?
-***-
உங்க வேலைக்காரி துணி துவைக்கும் போது கூலிங் கிளாஸ் போட்டுக்கிறாளே!
அதுவா அவ உபயோகப்படுத்தறது ஸன்லைட் சோப்பாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 17 | 18 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 2 - கடி ஜோக்ஸ் :: பகுதி 2, ஜோக்ஸ், சார்