கடி ஜோக்ஸ் 17 - கடி ஜோக்ஸ் :: பகுதி 2

பாரதி : என்னை அவமானப்படுத்திட்டே, அவமானப்படுவதற்காக நான் இங்கே வரலே.
மாலதி : அப்படியா? அவமானப்பட வழக்கமா எங்கே போவாய்?
-***-
பாலு : படகுல ஏறி பார்க்கலாமா?
வேலு : முடியாதே! ஏரியிலதான் படகைப் பார்க்கலாம்.
-***-
ஆசிரியர் : எங்கே ஆங்கில எழுத்துகளை வரிசையாய் சொல்லு.
மாணவன் : பி, சி, டி, இ, எப்,....
ஆசிரியர் : டேய்! ஏன் முதல் எழுத்து ஏ-ஐ விட்டுட்டே.
மாணவன் : அது வயது வந்தவங்களுக்கு மட்டும் தான் சார்.
-***-
அப்பு : டேய்! நான் காட்டுல சிங்கத்தைப் பார்த்தேன். அது மேலே எச்சில் துப்பினேன். பயந்து ஓடிப் போயிடுச்சு.
சுப்பு : அட நானும் காட்டில சிங்கத்தைப் பார்த்தேன். அதோட முதுகுல தடவினப்ப ஈரமா இருந்துச்சு. அது நீ செஞ்ச வேலைதானா?
-***-
டாக்டர் : நாய் கடிச்சா தொப்புளைச் சுத்தி 14 ஊசி போடணும்.
நோயாளி : முடியாது டாக்டர். நாய் ஓடிப் போயிடுச்சு.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 17 - கடி ஜோக்ஸ் :: பகுதி 2, ஜோக்ஸ்,