கடி ஜோக்ஸ் 18 - கடி ஜோக்ஸ் :: பகுதி 2

குப்பு : உங்க பையன் பேரென்ன?
சுப்பு : ராஜ மார்த்தாண்ட வீரபாண்டிய ராம சுப்பிரமணியம்.
குப்பு : பேர் ஆசை பெரு நஷ்டம் - ன்னு சொல்லுவாங்க தெரியுமா?
-***-
ஆசிரியர் : மாலா, ஆறில் பத்து போகுமா?
மாலா : போகும் சார்!
ஆசிரியர் : எப்படி?
மாலா : எங்க வீடு ஆத்துக்குப் பக்கத்திலேதான் சார் இருக்கு. எங்கம்மா தினமும், பத்துப் பாத்திரத்தை அங்கே தான் தேய்ப்பாங்க
-***-
ராமு : யானைக்கு உடம்புக்குச் சரியில்லைன்னு ஆஸ்பத்திரிக்குப் போச்சுது. எறும்பு நானும் வரேன்னு சொல்லி கூடவே போச்சுது. ஏன்?
சோமு : தெரியலையே?
ராமு : யானைக்கு ரத்தம் தேவைப்பட்டால் கொடுக்கத்தான்
சோமு : ???????
-***-
பாபு : உன் மனைவி யாருக்கு ஓட்டுப் போடுவாங்க?
கோபு: நான் யாருக்கு ஓட்டுப் போடுவேனோ, அவருக்குத்தான்
பாபு : யார் அவர்?
கோபு: அதை இன்னும் என் மனைவி முடிவு செய்யவில்லையே!
-***-
ஆசிரியர் : ஷாஜகான் என்ன கட்டினார்?
மாணவன் : லுங்கி கட்டினார்.
ஆசிரியர் : !!
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 18 - கடி ஜோக்ஸ் :: பகுதி 2, ஜோக்ஸ், ஆசிரியர், மாலா