கடி ஜோக்ஸ் 1 - கடி ஜோக்ஸ் :: பகுதி 2

அந்த மேஜை ரொம்ப வெட்கப்படுது..
ஏன்?
அதற்கு டிராயர் இல்லை.
-***-
தந்தை: எக்ஸாம் ஹாலிலே தூங்கிட்டு வரேன்னு சொல்றியே, வெக்கமாயில்லை.
மகன்: நீங்கதானேப்பா கேள்விகளுக்கு விடை தெரியலைன்னு முழிச்சுட்டு இருக்காதேன்னு சொன்னீங்க.
-***-
உங்க பையன் கோவிலுக்குப் போனா அதிகமா பொய் பேசறானே, ஏன்?
கோவிலுக்குள்ளே போனதும் அவன் மெய் மறந்துடுவான்.
-***-
ரீகனைத் தூங்குன்னு சொன்னால் தூங்கமாட்டார்.
ஏன்?
அவருக்குத் தமிழ் தெரியாது.
-***-
அந்த மரம் ஒரு கிராஜூவேட்.
அப்படியா
ஆமாம். அது பட்ட மரம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 1 - கடி ஜோக்ஸ் :: பகுதி 2, ஜோக்ஸ்,