கடி ஜோக்ஸ் 4 - கடி ஜோக்ஸ் :: பகுதி 2

கிராமத்து ஆள்: இந்த ரூமுக்குத் தலைக்கு ஐம்பது ரூபாய் வாடகையா, சார்!
லாட்ஜ் மானேஜர்: ஒரு தலைக்கும் அதே வாடகை தான்: இராவணன் வந்து தங்கினாலும் அதே வாடகை தான்.
-***-
கோபு : வெளியிலே வெயில்லே வந்தா உருகிடற மனுஷர் யாரு?
பாபு: தெரியாதே!
கோபு: பெருமாள் கோவில் பட்டர்.
-***-
கமலா: டெலிவிஷன்லே ஷோபனாரவி எப்பவும் சேலைத் தலைப்பைப்போர்த்திக்கிட்டு தான் செய்தி வாசிப்பாங்க. ஏன் அப்படீ?
விமலா: தெரியாதே!
கமலா: அவங்க வாசிக்கிறது தலைப்பு செய்தியாச்சே!
-***-
இந்திய ஜனத்தொகை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகிறதே, எதனால் தெரியுமா?
ஏனாம்?
தீப கர்ப்பமா இருக்கிறதுனால.
-***-
நம்ம தமிழ் வாத்தியாரை யாரோ அடிச்சுட்டாங்களாமே?
யாரோ இங்கே தமிழாசிரியர் யாரு ன்னு இவரைக் கேட்டதுக்கு அடியேன் அடியேன்னு சொல்லியிருக்காரு.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 17 | 18 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 4 - கடி ஜோக்ஸ் :: பகுதி 2, ஜோக்ஸ், தான்