கடி ஜோக்ஸ் 15 - கடி ஜோக்ஸ் :: பகுதி 2

சீப்புக்கும் வாழைப்பழத்து தோலுக்கும் ஓர் ஒற்றுமை. அது என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்!
தெரியாது!
சீப்பு தலை வாரும்; வாழைப்பழத் தோல் காலை வாரும்.
-***-
அது ஓர் அழுகை சினிமா. படம் பார்க்கும் போது அழுதுவிட்டேன்!
எந்த இடத்தில்?
உட்கார்ந்து கொண்டு படம் பார்த்த அதே இடத்தில் தான்.
-***-
நம்ப டைப்பிஸ்டை நிமிர்ந்து பார்க்காதவன் புதுசா வந்த கிளார்க்தான்!
அதிசயமாயிருக்கே!
காரணம். அவன்தான் அவ புருஷன்.
-***-
இண்டர்வியூவில்: என்னப்பா! நாற்காலியை எடுத்துக்கிட்டுப் போறே?
நீங்கதானே சார், டேக் யுவர் சீட்னு சொன்னீங்க!
-***-
அவன் ஏன் நீலநிறச் சட்டை போட்டுக் கொண்டிருக்கிறான் தெரியுமா?
தெரியலையே!
வெறும் பனியனை மட்டும் போட்டுக் கொண்டு ஆபீசுக்கு வரக்கூடாது என்று தான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 13 | 14 | 15 | 16 | 17 | ... | 17 | 18 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 15 - கடி ஜோக்ஸ் :: பகுதி 2, ஜோக்ஸ்,