கடி ஜோக்ஸ் 12 - கடி ஜோக்ஸ் :: பகுதி 2

லெட்டர்லே நிற்க நிற்கன்னு எழுதாதீங்க.
ஏன்?
படிக்கிறவங்களுக்குக் கால் வலிக்கும்.
-***-
நீ எந்தச் சிகரெட்டைப் பிடிப்பாய்.
மற்றவர்கள் கொடுப்பதை!
-***-
இண்டர்வியூவில்: என்னப்பா! நாற்காலியை எடுத்துக்கிட்டுப் போறே?
நீங்கதானே சார், டேக் யுவர் சீட்னு சொன்னீங்க!
-***-
அவன் ஏன் நீலநிறச் சட்டை போட்டுக் கொண்டிருக்கிறான் தெரியுமா?
தெரியலையே!
வெறும் பனியனை மட்டும் போட்டுக் கொண்டு ஆபீசுக்கு வரக்கூடாது என்று தான்.
-***-
ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி என்னோட வாட்ச் காவேரியிலே விழுந்துடுச்சு. ஆனா இன்னும் ஓடிக் கிட்டிருக்கு!
அதே வாட்சா?
இல்லே, காவேரி.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | ... | 17 | 18 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 12 - கடி ஜோக்ஸ் :: பகுதி 2, ஜோக்ஸ்,