முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் » முதலாம் எலிசபெத் அரசி (கி.பி.1533 - கி.பி.1603)
முதலாம் எலிசபெத் அரசி (கி.பி.1533 - கி.பி.1603)

முதலாம் எலிசபெத் அரசி இங்கிலாந்தின் வரலாற்றில் மிகச் சிறப்பு வாய்ந்த ஆட்சியாளராகக் கருதப்படுகிறார். அவருடைய 45 ஆண்டு ஆட்சியில் பொருளாதாரச் செழிப்பும், இலக்கிய மலர்ச்சியும் ஏற்பட்டன; இங்கிலாந்து உலகக் கடலாதிக்க நாடுகளுள் தலையாய இடத்தைப் பெற்றது. ஆங்கிலேய அரசர்கள் வெறும் பொம்மையாக இராமல், உண்மையான அதிகாரம் செலுத்தி வந்த அந்நாளில், இங்கிலாந்தின் பொற்காலச் சாதனைகளுக்கு எலிசபெத் அரசியும் முக்கிய காரணமாவார் என்பதில் ஐயமில்லை.
எலிசபெத் 1533-இல் இங்கிலாந்திலுள்ள கிரீன்விட்சில் பிறந்தார். அவருடைய தந்தையார் இங்கிலாந்தில் மதச் சீர்திருத்தத்தை நடத்திய எட்டாம் ஹென்றி மன்னராவார். எலிசபெத்தின் அன்னை ஹென்றியின் இரண்டாம் மனைவியான ஆன்பொலின், 1536-இல் ஆன் தூக்குத்தண்டனை பெற்றாள், சில மாதங்கள் கழித்து பாராளுமன்றம், அப்போது 3 வயதாக இருந்த எலிசபெத்தை திருமணத்திற்குப் புறம்பாகப் பிறந்த பிள்ளையென்று அறிவித்தது (ஆங்கிலேய கத்ததோலிக்கர் பலர் அவ்வாறே கருதினர்). நாடளுமன்றம் இவ்வாறு ஒதுக்கி வைத்த போதிலும், எலிசபெத் அரண்மனையிலேயே வளர்ந்து, சிறந்த கல்வி பெற்று வந்தார்.
எட்டாம் ஹென்றி 1547-இல் இறந்தார். அப்போது எலிசபெத்திற்கு 13 வயது, அடுத்த 11 ஆண்டுகளாக செய்த ஆங்கிலேய மனனர்கள் சிறப்புற ஆட்சி செய்யவில்லை. எலிசபெத்தின் சகோதரர் ஆறாம் எட்வர்டு 1547 முதல் 1533 வரை ஆட்சி செய்தார். அவராட்சியில் அரசாங்கம் புரோட்டஸ்டன்டு சமயம் எனப்படும் மறுப்புச் சமயத்தையே பெரிதும் ஆதரித்து வந்தது. அடுத்த ஐந்தாண்டுகள் ஆட்சி புரிந்த முதலாம் மேரி அரசி போப்பாண்டவரின் மேலாண்மையை ஆதரித்து, ரோமன் கத்தோலிக்க சமயத்தை முந்திய நிலைக்கு உயர்த்த முயன்றார். அவரது ஆட்சியில் ஆங்கிலேய மறுப்புச் சமயத்தார் நசுக்கப்பட்டனர். அவர்களுள் ஏறக்குறைய 300 பேர் கொல்லப்பட்டனர். (இதனால்தான் அரசிக்கு 'இரத்த வெறியுள்ள மேரி' எனும வசைப் பெயர் வந்தது). எலிசபெத் கைது செய்யப்பட்டு அரசு சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு அவர் விடுதலையான போதிலும், கொஞ்ச காலம் அவர் உயிருக்கு ஆபத்து இருந்து வந்தது. மேரி (1588இல்) இறந்ததும், 25 வயதுள்ள எலிசபெத் அரியணையேறினார். அப்போது இங்கிலாந்து மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
அப்போது இளம் அரசியைப் பல பிரச்சினைகள் எதிநோக்கி நின்றன. பிரான்சுடன் போர், ஸ்காட்லாந்து, ஸ்பெயின் ஆகிய பகுதிகளுடன் பிணக்கு, எல்லாவற்றிற்கும் மேலாக இங்கிலாந்தில் நிலவிய சமயப் பிளவுகள் போன்ற பல பிரச்சினைகளை அவர் சந்திக்க நேரிட்டது.
இறுதியாக கூறப்பட்டதையே அவர் முதலில் தீர்க்க முயன்றார். எலிசபெத் பதவியேற்றதும் விரைவில் மேலாண்மைச் சட்டமும், ஒரு வழிபாட்டுச் சட்டமும் (1559) நிறைவேற்றப்பட்டன. இவை ஆங்கிலிக்க சமயத்தை இங்கிலாந்தின் அரசுச் சமயமாக நிறுவின. இதனால் மிதவாத மறுப்புச் சமயத்தினர் உளநிறைவடைந்தனர். ஆனால், பியூரிட்டான்கள் எனப்படும் தூய்மைச் சமயத்தினர் இன்னும் தீவிரமான சீர்திருத்தத்தை விரும்பினர். ஒருபுறம் பியூரிட்டான்களும் மறுபுறம் கத்தோலிக்கர்களும் எதிர்த்த போதிலும், எலிசபெத் தமது ஆட்சி முழுவதும் 1559-இல் ஏற்படுத்திய சமரச இணக்கத்தை உறுதியாக நிலைநாட்டிவந்தார்.
ஸ்காட்லாந்து மேரி அரசியின் நிலை சமயச் சூழலைச் சிக்கலாக்கியது. ஸ்காட்லாந்தை விட்டு வெளியேற்றப்பட்ட மேரி இங்கிலாந்தில் அடைக்கலம் புகுந்திருந்தாள். விரைவில் எலிசபெத் அவளைச் சிறைப்படுத்தினார். எலிசபெத்தின் செயல் எதேச்சாதிகாரமான செயலன்று. மேரி ஒரு கத்தோலிக்கர். மேலும் எலிசபெத்திற்குப் பின் இங்கிலாந்தின் அரியணைþறும் உரிமையுடையவர். ஒரு புரட்சி அலலது அரசியல் கொலை நிகழுமென்றால், இஙகிலாந்தில் திரும்பவும் கத்தோலிக்க அரசி பதவியேற்க நேரிடும். மேரி சிறையிலிருந்த 19 ஆண்டுகளில் எலிசபெத்திற்கு எதிராகப் பல சூழ்ச்சிகள் செய்யப்பட்டன. அவற்றிற்கு மேரியும் உடந்தையாக இருந்ததாகப் போதிய சான்றுகள் இருந்தன. ஆகவே, இறுதியில் 1887 -இல் மேரி கொல்லப்பட்டாள். எலிசபெத் விருப்பமின்றி மேரியின் கொலைத் தண்டனை ஆணையில் கையொப்பமிட்டார். எலிசபெத்தின் அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் பலரும் மேரி விரைவில் தூக்குத் தண்டனை பெற வேண்டுமென விரும்பினர்.
சமயப் பூசலினால் எலிசபெத்திற்கு ஆபத்துகள் ஏற்பட்டன. 1570-இல் ஐந்தாம் பயஸ் போப்பாண்டவர் எலிசபெத்தைக் கத்தோலிக்கச் சமயத்திலிருந்து விலக்கி, அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக ஆணையிட்டார். 1596-இல் 13 ஆம் கிரிகோரி போப்பாண்டவர் எலிசபெத்தை கொலை செய்தல் பாவமன்று என்று அறிவித்தார். ஆயினும் அச்சூழ்நிலையினால் எலிசபெத்திற்கு நன்மைகள் ஏறபட்டன. கத்தோலிக்க முடியாட்சி திரும்பவும் இங்கிலாந்தில் ஏற்படக்கூடுமென்று மறுப்புச் சமயத்தினர் அஞ்சினர். அவ்வாறு நிகழாதவாறு தடுக்கும் சிறந்த அரணாக எலிசபெத் விளங்கினார். ஆங்கிலேய மறுப்புச் சமயத்தினருள் பெருந்திரளானோர் அவரை ஆதரித்ததற்கு இது முக்கிய காரணமாக இருந்தது.
எலிசபெத் அயல்நாட்டுக் கொள்கையைத் தூதாண்மைத் திறத்துடன் கையாண்டு வந்தார். அவர் 1560-லேயே எடின்பரோ உடன்படிக்கையைச் செய்தார். அதனால் ஸ்காட்லாந்துடன் அமைதி ஏற்பட்டது. பிரான்சுடன் நிகழ்ந்து வந்த போரும் நிறுத்தப்பட்டது. இரு நாடுகளுக்குமிடையே நல்லுறவு வளர்ந்தது. ஆயினும் நாளடைவில் இங்கிலாந்து ஸ்பெயினுடன் போரிட நேர்ந்தது. எலிசபெத் போரைத் தவிர்க்க முயன்றார். 16 ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்க நாடான ஸ்பெயின் போரார்வமுள்ளதாக இருந்ததால், ஸ்பெயினுக்கும் மறுப்புச் சமய நாடான இங்கிலாந்துக்கும் போர் நிகழ்வது தடுக்க முடியாததாக இருந்தது. நெதர்லாந்தில் போர் நிகழ்வது தடுக்க முடியாததாக இருந்தது. நெதர்லாந்தில் ஸ்பெதியின் ஆட்சிக்கு எதிராக ஏற்பட்ட கிளர்ச்சி அதற்கு ஒரு காரணமாக இருந்தது. டச்சு கிளர்ச்சியைத் தொடங்கியவர்கள் பெரும்பாலோர் மறுப்புச் சமயத்தவர்; ஆகவே ஸ்பெயின் அக்கிளர்ச்சியை நசுக் முயன்றபோது எலிசபெத் டச்சுக்காரருக்கு உதவியளித்தார். எலிசபெத் போரை விரும்பவில்லையெனினும், ஆங்கிலேய மக்கள் பலரும், அரசியின் அமைச்சர்களும், நாடாளுமன்றமும் அவரைவிட மிகுதியாகப் போரார்வம் காட்டின. ஆகவே, 1580-இல் ஸ்பெயினுடன் போர் தொடங்கவே, எலிசபெத் ஆங்கிலேய மக்களின் பேராதரவை பெற முடிந்தது.
பல ஆண்டுகளாக எலிசபெத் இங்கிலாந்தின் கடற்படையை வலுப்படுத்தி வந்தார். ஆயினும் ஸ்பெயின் மன்னரான 2 ஆம் பிலிப் இங்கிலாந்தின் மேல் படையெடுப்பதற்காக விரைவில், ஒரு பெரும் கப்பற்படையை உருவாக்கினார். 'ஆர்மெடா' எனப்படும் இக்கப்பற்படையில் இங்கிலாந்திடமிருந்த அளவிற்குக் கப்பல்கள் இருந்தன. ஆயினும் அதில் கப்பலோட்டிகளின் எண்ணிக்கை குறைவு. மேலும், ஆங்கிலேய கப்பலோட்டிகள் சிறந்த பயிற்சி பெற்றவர்கள்; அவர்களுடைய கப்பல்களும் தரத்திலும், போர்த்தாக்குதலிலும் உயர்ந்தவை. 1588-இல் நடைபெற்ற பெரும் கடற்போரில் ஸ்பானிய 'ஆர்மெடா' முற்றிலும் முறியடிக்கப்பட்டது. அந்த வெற்றியின் பயனாக, இங்கிலாந்து உலகில் மிகச் சிறந்த கடலாதிக்க நாடாக உயர்ந்தது. 20 ஆம் நூற்றாண்டு வரை இங்கிலாந்து இவ்வுயர் நிலையிலேயே இருந்தது.
எலிசபெத் எப்போதும் நிதிநிலை பற்றிக் கவனமாக இருந்தார். அவரது ஆட்சியின் தொடக்கத்தில் பிரிட்டிஷ் முடியரசின் நிதிநிலை நன்றாக இருந்தது. ஆனால், ஸ்பெயினுடன் நடந்த போரினால் பெரும் செலவு ஏற்பட்டது. ஆகவே, அவருடைய ஆட்சியின் இறுதி ஆண்டுகளில் கருவூல நிலை மோசமாக இருந்தது. ஆயினும், அரசாங்கம் வறுமையுற்ற போதிலும், நாடு, அரசியார் பதவியேற்றபோது இருந்ததைவிட மிகச் செழிப்பாக இருந்தது.
எலிசபெத்தின் 45 ஆண்டு ஆட்சிக் காலம் (1587-1603) இங்கிலாந்தின் பொற்காலம் எனப்படும். வில்லியம் ஷேக்ஸ்பியர் உட்பட இங்கிலாந்தின் புகழ்மிக்க எழுத்தாளர் சிலர் அக்காலத்தில் வாழ்ந்தனர். இதன் பெருமை ஓரளவு எலிசபெத்தைச் சாரும். லண்டன் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் எலிசபெத் ஷேக்ஸ்பியரின் நாடகங்களை ஆதரித்தார். ஆயினும், அக்காலத்தில் இலக்கியம் வளர்ச்சியடைந்த அளவிற்கு இசையோ, ஓவியமோ செழித்தோங்கவில்லை.
எலிசபெத் காலத்தில் ஆங்கிலேயர் ஆய்வுப் பயணங்களையும் தொடங்கினர். ரஷ்யாவுக்கு பயணங்கள் தொடங்கினர். மார்ட்டின் ஃப்ரோபிஷர், ஜான் டேவிஸ் ஆகியோர் தூரக் கிழக்கு நாடுகளுக்கு ஒரு வடமேற்கு வழியை கண்டுபிடிக்க முயன்றகர். சர் ஃபிரான்சிஸ் டிரேக் உலகைச் சுற்றிக் கடற் பயணம் செய்தார். வழியில் கலிஃபோர்னியாவில் தங்கினார். வட அமெரிக்காவில் ஆஙகிலேயக் குடியேற்றங்களை நிறுவ (சர் வால்ட்டேர் ராலே போன்றவர்களால்) முயற்சிகள் நடைபெற்றன. ஆனால், அவை வெற்றி பெறவில்லை.
எலிசபெத் தமக்குப் பின் அரியணையேறும் வாரிசை நிர்ணயம் செய்யாதது அவருடைய பெருங்குறைபாடு எனலாம். அவர் திருமணம் செய்து கொள்ளாதது மட்டுமல்லாமல், தமக்குப் பின்வரும் வாரிசையும் நியமிக்கவில்லை. (ஒருவேளை வாரிசாக நியமிக்கப்படுகிறவர் தமக்கே போட்டியாக வந்து விடுவாரோ என்று அவர் அஞ்சியிருக்கக்கூடும். எலிசபெத் தமது வாரிசை நியமிக்காததற்கு என்ன கரணம் இருப்பினும் சரி, அவர் இளமையில் (ஸ்காட்லாந்து மேரி இறப்பதற்கு முன்) இறந்திருப்பாரேயானால், இங்கிலாந்து ஒரு வாரிசுரிமைப் போரில் மூழ்கியிருக்கும். நல்லவேளையாக எலிசபெத் 70 வயதுவரை வாழ்ந்தார். நாம் இறக்கும் வேளையில் ஸ்காட்லாந்து மன்னரான ஆறாம் ஜேம்ஸை (ஸ்காட்லாந்து மேரியின் மகன்) தமது வாரிசாக நியமித்தார். இதன் விளைவாக இங்கிலாந்தும், ஸ்காட்லாந்தும் ஒரே முடியரசின் கீழ் இணைந்த போதிலும், இதனால் தீய பயன்களும் விளைந்தன. ஜேம்ஸ•ம் அவருடைய மகன் முதலாம் சார்லசும் ஆஙகிலேயரின் தரங்களுக்கேற்ப கொடுங்கோலராகவே இருந்தனர். அதனால், அந்நூற்றாண்டின் நடுவில் ஓர் உள்நாட்டுப் போர் மூண்டது.
எலிசபெத் அறிவாற்றலுள்ளவராகவும், கூர்மதியுடைய அரசியல்வாதிகயாகவும் இருந்தார். எதிலும் எச்சரிக்கையாக நடந்து வந்தார்; பிற்போக்குக் கொள்கையுள்ளவராகவும் இருந்தார். தேவையான மன உறுதியுடனிருந்த போதிலும, போரையும், பழியையும் வெறுத்தார். தம் தந்தையைப் போலவே நாடாளுமன்றத்தை எதிர்ப்பதற்குப் பதிலாக அதனுடன் இணைந்து பணியாற்றி அரசியல் அதிகாரம் செலுத்தி வந்தார். அவர் திருமணம் செய்து கொள்ளவேயில்லை; பொது மேடையில் தாம் கூறி வந்ததது போல் அவர் கன்னியாகவே வாழ்ந்திருக்கக் கூடும். ஆயினும், அவர் ஆடவரை வெறுத்தாரெனக் கூறுவது தவறாகும். அதற்கு மாறாக, அவர் ஆடவரை விரும்பினார் என்பதும், ஆடவருடன் இருப்பதில் மகிழ்ச்சியடைந்தார் என்பதும் வெளிப்படை. எலிசபெத் தக்க அமைச்சர்களைத் தேர்ந்ததெடுத்தார். 1558 முதல் அவர் 1598-இல் இறக்கும் வரை அவருடைய முக்கிய அறிவுரையாளராக இருந்தவர் வில்லியம் செசில் (பர்க்லி பிரபு, அவருடைய சாதனைகளுக்குப் பெரிதும் காரணமாக இருந்தார்).
எலிசபெத்தின் முக்கிய சாதனைகளைக் கீழ்க்கண்டவாறு சுருக்கமாகக் கூறலாம்; முதலாவது, மதச் சீர்திருத்த காலத்தின் இரண்டாம் பருவம் முழுவதும் அவர் இங்கிலாந்தை இரத்தக் களரியிலிருந்து காத்தார். (இதற்கு மாறாக, ஜெர்மனியில் 20 ஆண்டுப் போர்களின் போது (1618-1648) 25 சதவீதம் மக்கள் உயிரிழந்தனர்). ஆங்கிலேயக் கத்தோலிக்கருக்கும், ஆங்கிலேய மறுப்புச் சமயத்தாருக்குமிடையே (புரோட்டஸ்டன்ட்) நிலவிய சமயப் பகையை ஓரளவு தணித்து, நாட்டில் ஒற்றுமைப்படுத்துவதில் வெற்றி கண்டார். இரண்டாவது, எலிசபெத்தின் காலம் எனப்படும் அவருடைய 45 ஆண்டு ஆட்சி உலகின் பெரிய நாடுகளில் ஒன்றாகிய இங்கிலாந்தின் பொற்காலம் எனப்படுகின்றது. மூன்றாவது, அவருடைய காலத்தில் தான் இங்கிலாந்து ஒரு முக்கிய அரசாக உருவாகி நூற்றாண்டுகளாகப் பேரரசாகத் திகழ்ந்தது.
எலிசபெத் புதிது புனையவில்லை. அவருடைய கொள்கைகள் பிற்போக்குடையவை. ஆயினும், முற்போக்குள்ள அரசர்களின் ஆட்சியைவிட எலிசபெத்தின் ஆட்சியிலேயே மாபெரும் முன்னேற்றம் ஏற்பட்டது.
பாராளுமன்றமா, அரசரா, யார் அதிக அதிகாரமுள்ளவர்? எனும் வீண் பிரச்சினையால் எலிசபெத் நேராக ஈடுபடவில்லை. அவர் ஆஙகிலேய மக்களாட்சியின் வளர்ச்சிக்கு உதவினார். ஒரு குடியாட்சி அரசியலமைப்பை வழங்குவதை விட இதன் மூலம் அவர் ஆஙகிலேய மக்களாட்சிக்கு வழி வகுத்தார். எனலாம். எலிசபெத் படைத்துறை புகழ் பெற விழையவில்லை; பெரும் பேரரசை நிறுவவும் விரும்பவில்லை. (எலிசபெத்தின் ஆட்சியில் இங்கிலாந்து பேரரசாக இருக்கவுமில்லை). ஆயினும் அவரது ஆட்சியில் இங்கிலாந்து உலகிலே வலிமை மிக்க கப்பற்படையைப் பெற்றிருந்தது. அவரே மாபெரும் பிரிட்டிஷ் பேரரசுக்கு அடிகோலினார் எனலாம்.
எலிசபெத் காலத்திற்குப் பிறகுதான் பிரிட்டன் பல வெளிநாடுகளைக் கைப்பற்றியது. பிரிட்டிஷ் பேரரசு உருவாவற்கு வேறு பலர் முக்கிய காரணமாக இருந்தனர். அப்பேரரசை ஐரோப்பிய ஆதிக்கம், இங்லாந்தின் ,இட அமைவு ஆகியவற்றின் இயற்கையான விளைவு எனலாம். அட்லாண்டிக் கரையிலுள்ள (பிரான்ஸ், ஸபெயின், போர்ச்சுகல்) ஆகிய முக்கிய ஐரோப்பிய அரசுகளும் கடல் கடந்த பேரரசுகளை நிறுவின என்பது, இங்கு குறிப்பிடத்தக்கது.
இது போலவே, எலிசபெத் இங்கிலாந்தை ஸ்பெயின் தாக்குதலிலிருந்து காத்ததையும் பெரிதுபடுத்த வேண்டியதில்லை. இங்கிலாந்தின் சுதந்திரத்தை அப்போது ஸ்பெயினால் அழித்திருக்க முடியாது. இங்கிலாந்தின் கப்பற் படைக்கும் ஸ்பெயின் ஆர்மெடாவுக்குமிடையே நிகழ்ந்தது போல் கடுஞ்சிக்கலான போரென்று கூற முடியாது. (இங்கிலாந்து அபபோரில் ஒரு கப்பலைக் கூட இழக்க வில்லை). மேலும், ஸ்பெயின் இங்கிலாந்தில் தன் படைகளை இறக்கியிருந்தால் கூட, இங்கிலாந்தை வென்றிருக்க முடியாது. ஐரோப்பாவில் வேறு எங்கும் ஸ்பெனினின் படைகள் பெரும் வெற்றிகளைப் பெற்றதில்லை. சிறிய நாடான ஹாலந்தில் ஒரு கிளர்ச்சியை ஸ்பெயினால் அடக்க முடியவில்லையெனில், இங்கிலாந்தை அதனால் வெல்ல முடியாதென்பது தெளிவு. 16 ஆம் நூற்‘ணடில், இங்கிலாந்தில் நாட்டுணர்ச்சி எவ்வளவு வலிமை பெற்றிருந்ததென்றால், ஸ்பெயினால் இங்கிலாந்தை அப்போது வென்றிருக்க முடியாது.
ஆகவே, எலிசபெத்திற்கு இங்கு எந்த இடத்தை அளிப்பது; அவர் ரஷ்ய மன்னர் மகா பீட்டரைப் போல் ஒரு தனி நாட்டுக்குரியவர். பீட்டர் எலிசபெத்தைவிட புதியவற்றைப் புகுத்தியதாலும், ரஷ்யாவை ஒரு புதிய பாதையில் திருப்பியதாலும், பீட்டரை விட எலிசபெத்திற்கு உயரிடம் அளிக்க முடியாதென்பதை நடுநிலை நோக்குடைய ரஷ்யர் எலரும் ஏற்றுக்கொள்வர். ஆயினும், எலிசபெத் காலத்திலிருந்த இங்கிலாந்தும் ஆங்கிலேயரும் உலக வரலாற்றில் நூற்றாண்டுகளாகப் பெரும் பங்கு பெற்றுள்ளமையால், எலிசபெத்தை பீட்டரைவிட மிகக் கீழாக மதிப்பிடுவது தவறு. எனினும் உலக வரலாற்றில் அவர்கள் இருவரையும் போல ஒரு சில மன்னர்களே சாதனைகள் புரிந்துள்ளனர் என்பது தெளிவு.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 47 | 48 | 49 | 50 | 51 | ... | 109 | 110 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதலாம் எலிசபெத் அரசி (கி.பி.1533 - கி.பி.1603), எலிசபெத், அவர், இங்கிலாந்தின், மேரி, இங்கிலாந்து, அவருடைய, ஆயினும், எலிசபெத்தின், ஆங்கிலேய, மறுப்புச், ஸ்பெயின், முக்கிய, பெரும், அப்போது, எலிசபெத்திற்கு, இங்கிலாந்தில், எனப்படும், ஸ்காட்லாந்து, போர், இங்கிலாந்தை, ஆட்சி, போதிலும், வந்தார், ஆகவே, முடியாது, விரைவில், காரணமாக, இருந்தார், சிறந்த, கத்தோலிக்க, ஆட்சியில், எனலாம், அதனால், இதன், பிரிட்டிஷ், ஏற்பட்டது, நாடான, போல், ஸ்பெயினால், ஸ்பெயினுடன், முயன்றார், எலிசபெத்தை, செய்தார், ஆண்டு, மிகச், அரசி, வரலாற்றில், வந்தது, முதலாம், சமயத்தினர், தமது, சமயப், மக்கள், அவரது, காலம், மேலும், Life Notes of Historians - வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்