முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் » மிகைல் கோர்பச்சாவ் (கி.பி.1931 - )
மிகைல் கோர்பச்சாவ் (கி.பி.1931 - )

சென்ற 40 ஆண்டுகளில் நிகழ்ந்த மிக முக்கிய அரசியல் நிகழ்ச்சி, சோவியத் ஒன்றியம் உடைந்து போனதும், பொதுவுடைமை வீழ்ச்சியடைந்ததும் ஆகும். இந்த உலகம் முழுவதையும் விழுங்கிவிடப் போவதாகப் பல்லாண்டுகளாக அச்சுறுத்தி வந்த அந்த மாபெரும் இயக்கம் அதிர்ச்சியூட்டும் வேகத்தில் திடீரென வீழ்ச்சியடைந்தது. இப்போது, "வரலாற்றுக் குப்பைக் கூடைக்குள்" முடங்கிவிடும் நிலைக்கு வந்துள்ளது. இந்த வியப்பூட்டும் வீழ்ச்சியின் இயக்க மையமாகத் தனித்து நிற்கும் ஒரே மனிதர் மிகைல் கோர்பச்சாவ் ஆவார். சோவியத் ஒன்றியத்தின் கடைசி ஆறு ஆண்டுகளில் (1998 - 1991) அதன் அரசுத் தலைவராக விளங்கியவர் கோர்பச்சாவ்.
தெற்கு ரஷியாவில் ஸ்டாவ்ரோப்போல் வட்டாரத்திலுள்ள பிரவோல்னோ என்ற கிராமத்தில் 1931 இல் கோர்பச்சாவ் பிறந்தார். வரலாற்றில் பயங்கர இரத்தக்களறிச் சர்வாதிகாரிகளில் ஒருவரான ஜோசப் ஸ்டாலினின் மிகக் கொடூரமான ஆட்சிக் காலத்தில் அவரது குழந்தைப் பருவம் அமைந்திருந்தது. கோர்பச்சாவின் சொந்தத் தாத்தா, ஸ்டாலின் சிறைக் கூடாரங்களில் ஒன்பது ஆண்டுகள் உழன்றார். ரஷியா மீது ஜெர்மனி படையெடுத்த சில மாதங்களுக்கு முன்புவரை (1941) அவர் சிறையிலிருந்து விடுதலை பெறவில்லை கோர்பச்சாவ் மிகவும் சிறுவனாக இருந்தமையால், அவர் இரண்டாம் உலகப் போரில் பணியாற்றவில்லை. எனினும், அவருடைய தந்தை இராணுவத்தில் பணிபுரிந்தார். அவர் அண்ணன் போர்க்களத்தில் மடிந்தார். பிரிவோல்னோ கிராமம் எட் டு மாத காலம் ஜெர்மனியின் ஆக்கிரமிப்பின் கீழ் இருந்தது.
ஆனால், இந்த அவலங்களில் எதுவும் கோர்பச்சாவின் முன்னேற்றத்தைத் தாமதப்படுத்தவில்லை. பள்ளியில் மிக உயர்ந்த தகுதிகளுடன் தேர்ச்சிப்பெற்றார். தம் 15 ஆம் வயதில் "கோம்சோமோல்" என்ற இளம் பொதுவுடைமையர் கழகத்தில் சேர்ந்தார். பின்னர், நான்காண்டுகள் ஓர் அறுவடை எந்திர இயக்குநராகப் பணியாற்றினார். மாஸ்கோக அரசுப் பல்கலைக் கழகத்தில் 1950 இல் சேர்ந்து சட்டம் கற்று 1955இல் பட்டம் பெற்றார். அங்குதான் 1952இல் அவர் பொதுவுடைமைக் கட்சியின் ஓர் உறுப்பினரானார். அங்குதான் அவர் தமது வருங்கால மனைவி ரெய்சா மாக்சிமோவ்னா தித்தோரெங் கோவைச் சந்தித்தார். அவர் பட்டம் பெறுவதற்கு முன்பு அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஒரே பெண் குழந்தை; பெயர் இரினா.
சட்டத்தில் பட்டம் பெற்ற பிறகு கோர்பச்சாவ், ஸ்டாவ்ரோப்போல் திரும்பினார். கட்சித் தலைமையியல் படிப்படியாக முன்னேறலானார். 1970இல் வட்டாரக் கட்சிக் குழுவின் முதல் செயலாளரானார். அடுத்த ஆண்டில் பொதுவுடமைக் கட்சியின் மத்தியக் குழுவில் ஓர் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1978இல் அவருக்கு ஒரு பெரிய பதவி உயர்வு கிடைத்தது. அப்போது அவர் மாஸ்கோ சென்று, மத்திய குழுவில் வேளாண்மைப் பிரிவுக்குச் செயலாளரானார். 1979இல் சோவியத் ஒன்றியத்தை உண்மையில் ஆட்சி புரிந்து வந்த ஆட்சி மன்றத்தின் ஒரு வேட்பாளர் உறுப்பினரானார். 1980இல் அவர் அந்த மன்றத்தில் முழு உறுப்பினரானார். சோவியத் ஒன்றியத்தின் அரசுத் தலைவராக லியோனிட் பிரஷ்னேவ் இருந்த கால கட்டத்தில் இந்த பதவி உயர்வுகள் யாவும் கிடைத்தன. பிரஷ்னேவின் மறைவுக்குப் பிறகு ஆண்ட்போர் போவ் (1982 - 1984), செர்னெங்கோக (1984 - 1985) இருவரும் சிறிது காலம் அரசுத் தலைவராக இருந்தனர். இந்த ஆண்டுகளின் போது தான் கோர்பச்சாவ் ஆட்சி மன்றத்தின் மிக முக்கிய உறுப்பினராக உயர்ந்தார். செர்னெங்கோ 1985 மார்ச் 11 அன்று காலமானார். அடுத்த நாளே அவருடைய இடத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக கோர்பச்சாவ் தேர்வு பெற்றார். (ஆட்சி மன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பு நடந்தது) ஆனால், தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட மிதவாதியான விக்டர் குரிஷினை விட மிகச்சில வாக்குகள் அதிகம் பெற்றுதான் கோர்பச்சாவ் வெற்றி பெற்றார் என்பது வதந்தி. இரண்டு மூன்று பேர் மட்டும் வேறு விதமாக வாக்களித்திருந்தால் வரலாறு எப்படியோ திசை மாறிப் போயிருக்கும்!
சோவியத் தலைவர்களில் பெரும்பாலோரைப் போலன்றி, கோர்பச்சாவ், கட்சித் தலைவராவதற்கு முன்பு அயல் நாடுகளில், விரிவாகப் பயணம் செய்தார். (1966இல் பிரான்ஸ், 1967இல் இத்தாலி, 1983இல் கனடா, 1984 இல் இங்கிலாந்து) எனவே, அவர் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், கோர்பச்சாவ், தமக்கு முந்தியிருந்தவர்களைவிடப் புதுமைச் சிந்தனையும், முற்போக்கு எண்ணங்களும் கொண்ட தலைவராக விளங்குவார் என்று பெரும்பாலான மேலை நாட்டவர் நம்பினார்கள். அவர்கள் நம்பிக்கை வீண்போகவில்லை. ஆனால், அவர் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் அத்துணை வேகமாகவும் விரிவாகவும் இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
கோர்பச்சாவ் பதவியேற்ற பிறகு, சோவியத் ஒன்றியம் ஏராளமான கடும் சிக்கல்களை எதிர் நோக்கியது. ஆனால், இச்சிக்கல்கள் அனைத்திற்கும், படைக்கலங்களுக்காக அரசாங்கம் கணக்கு வழக்கின்றி, செலவிட்டதே காரணம். எனவே, இந்த ஆயுதப் போட்டிக்கு முடிவு கட்ட கோர்பச்சாவ் முடிவு செய்தார். அதனால், இதற்காக ஓர் உச்சி மாநாடு நடத்தலாம் என அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ரோனால்ட் ரீகன் ஆலோசனை கூறிய போது, அதை உடனடியாக ஏற்றுக் கொண்டார். இரு தலைவர்கள் நான்கு முறை சந்தித்துப் பேசினார்கள். ஜெனீவா (1985), ரேய்க்ஜாவிக் (1986), வாஷிங்டன் (1987), மாஸ்கோ (1988) ஆகிய இடங்களில் இச்சந்திப்புகள் நடந்தன. இந்தச் சந்திப்புகளின் விளைவாக, ஆயுதக் குறைப்பு உடதன்படிக்கைக 1987 இல் கையெழுத்தானது. இது, இந்தச் சந்திப்புகளினால் ஏற்பட்ட ஒரு மகத்தான பலன் ஆகும். பெரிய வல்லரசுகள் குவித்து வைத்திருந்த ஏராளமான அணு ஆயுதங்களை உண்மையில் குறைப்பதற்கு உதவிய முதல் உடன்படிக்கை இதுதான். உண்மையில், இதன் மூலம், நடுத்தர தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை வகை முழுவதும் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது.
உலக நெருக்கடிகளைக் குறைக்க கோர்பச்சாவ் மேற்கொண்ட மற்றொரு நடவடிக்கை, ஆப்கானிஸ்தானிலிருந்து சோவியத் படைகளை அகற்றிவிட அவர் எடுத்த முடிவு ஆகும். சோவியத் படை 1979இல் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்திருந்தது. அப்போது பிரஷ்னேவ் ஆட்சிப் புரிந்து வந்தார். அந்தப் படையெடுப்பின் போது, முதலில் சோவியத் படைகளுக்குக் கணிசமான வெற்றி கிடைத்தது. ஆனால், சோவியத் விமானப் படையின் வல்லமையை வெகுவாகக் குறைத்த ஸ்டிங்கர் என்ற ஏவுகணைகளை ஆப்கன் கொரில்லாப் படையினருக்கு வழங்க ரீகன் முடிவெடுத்த பிறகு, நிலமை மாறியது. சோவியத் படையினர் ஒரு நீண்ட முடிவடையாத போரில் சிக்கிக் கொண்டனர். ஆப்கானிஸ்தான் மீது சோவியத் படையெடுத்ததை வெளியுலகம் வன்மையாகக் கண்டித்தது. இந்தப் போருக்கு அபரிதமிதமாகச் செலவாகியது. நாட்டு மக்களும் இப்போரை அடியோடு வெறுத்தனர். பிரஷ்னேவும், ஆண்ட்ரோப்போவும், செர்னெங்கோவும் (முதலில் கோர்பச்சாவும் கூட) ஆப்கானிஸ்தானிலிருந்து படைகளை விலக்கிக் கொள்ள விரும்பவில்லை. இதனால் சோவியத் ஒன்றியத்துக்கு பெருத்த அவமானம் உண்டாகும் என அவர்கள் கருதினார்கள். எனினும், இறுதியாக, கோர்பச்சாவ் தமது இழப்புகளைக் குறைக்க முடிவு செய்தார். சோவியத் படைகள் அனைத்தையும் திரும்ப அழைத்துக் கொள்ள வ்கைச் செய்யும் ஓர் உடன்படிக்கையில் 1988இல் கையெழுத்திட்டார். (படைகளை விலக்கிக் கொள்வதற்கு ஒப்புக் கொண்ட தேதியான 1989 பிப்ரவரியில் சோவியத் படைகள் முற்றிலுமாக வெளியேறின).
வெளிநாட்டுக் கொள்கையில் இந்த மாற்றங்கள் திடீரென ஏற்பட்டன. ஆனால், கோர்பச்சாவின் முயற்சிகளில் பெரும்பாலானவை உள்நாட்டுச் சிக்கல்கள் தொடர்புடையனவாகவே இருந்தன. தொடக்கத்திலிருந்தே சோவியத் பொருளாதாரத்தின் மிக மோசமான சாதனையைச் சீர்படுத்த "மறுகட்டமைப்பு" என்ற ஒரு பெரிய திட்டம் தேவை எனக் கருதினார். இந்த மறு கட்டமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, (நடைமுறையில், சோவியத் அரசாங்கத்தை தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த) பொதுவுடைமைக் கட்சியின் அதிகாரம், கோர்பச்சாவ் ஆட்சியின் கீழ் வெகுவாகக் குறைக்கப்பட்டது. பொருளாதார நிலையில், சில துறைகளில், தனியார் தொழில் முயற்சிகள் சட்டபூர்வமாக்கப்பட்டன.
தாம் மார்க்ஸ் - லெனின் தீவிர ஆதரவாளர்கள் என்றும், சம தருமக் கோட்பாட்டில் உறுதியான நம்பிக்கையுடையவர் என்றும் கோர்பச்சாவ் எப்போதுமே வலியுறுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. "பொதுவுடைமை அமைப்பு இன்னும் சிறப்பாகச் செயற்படும் வகையில் அதனைச் சீர்திருத்துவது மட்டும் எனது குறிக்கோள்" என்று அவர் கூறினார்.
அவர் மேற்கொண்ட சீர்திருத்தங்களில் மிகவும் புரட்சிகரமானது, "வெளிப்படை நிலை" என்னும் கொள்கையே ஆகும். இக்கொள்கையை 1986இல் கோர்பச்சாவ் உருவாக்கினார். அரசாங்கத்தின் நடவடிக்கைகளும், பொது மக்கள் நலன் தொடர்பான நிகழ்ச்சிகளும் உள்ளங்கை நெல்லிக்கனி போல், ஒளிவு மறைவின்றி, வெளிப்படையாக நடைபெற வேண்டும் என்பது "வெளிப்படை நிலை"க் கொள்கையின் மிக முக்கியமான அம்சமாகும். அரசியல் விவகாரங்களைத் தனி மனிதர்கள் அல்லது பத்திரிகைகள் சுதந்திரமாக விவாதிப்பதற்கு அனுமதிப்பது இக்கொள்கையின் மற்றொரு அம்சம். கருத்துகளை வெளியிடுவது சில ஆண்டுகளுக்கு முன்பு சிறைத் தண்டனையை (ஸ்டாலின் காலத்தில் மரணத் தண்டனையை) வரவழைத்திருக்கும். ஆனால், "வெளிப்படை நிலை"க் கொள்கையில் அத்தகைய கருத்து வெளிப்பாடு மிகச் சாதாரணமாக நடந்தது. அரசின் கொள்கைகளையும், பொதுவுடைமைக் கட்சியையும், அரசு உயர் அதிகாரிகளையும், ஏன் கோர்பச்சாவையுங்கூடப் பத்திரிகைகள் கடுமையாக விமர்சித்தன.
சோவியத் ஒன்றியத்தின் மக்களாட்சி மயமாக்குவதில் மற்றொரு முக்கிய நடவடிக்கை 1989இல் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, புதிய நாடாளுமன்றமாகிய மக்களவைக்கு பொது மக்கள் வாக்களிக்கும் தேர்தல்கள் நடந்தன. மேலை நாட்டினரின் கணிப்பில், இவை சுதந்திரமான தேர்தல்கள் இல்லை. ஏனென்றால், போட்டியிட்ட வேட்பாளர்களில் 90% பேர் ஆளும் பொதுவுடைமைக் கட்சியின் உறுப்பினர்கள். இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. எனினும், மக்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ள நிறைய வேட்பாளர்கள் இருந்தனர். வாக்குகள் நேர்மையாக எண்ணப்பட்டன. பொதுவுடைமைக் கட்சி 1917இல் ஆட்சியைப் பிடித்த பிறகு, சுதந்திரமான தேர்தல்களுக்கு மிக நெருக்கமாக நடந்த தேர்தல் இதுவே எனலாம்.
இத்தேர்தல்களின் முடிவுகள், விதிகள் அனுமதித்த அளவுக்கு, பொதுவுடைமைக் கட்சி மீது "நம்பிக்கை இல்லை" என்று கூறும் ஒரு வாக்களிப்பாகவே அமைந்தன. கட்சியின் பழம்பெரும் தலைவர்கள் பலர் (போட்டியின்றி வெற்றி பெற்றவர்கள் கூட) இத்தேர்தல்களில் தோல்வியடைந்தனர். கட்சியைப் பகிரங்கமாகக் கண்டித்து வந்த பல தலைவர்கள் பெரும் வெற்றி பெற்றனர்.
சோவியத் ஒன்றியத்திற்குள் இத்தகைய புரட்சிகரமான சீர்திருத்தங்கள் நடைபெற்று வந்த போதிலும், கிழக்கு ஐரோப்பாவில் 1989-1990 இல் ஏற்பட்ட பிரளய மாறுதல்களை யாரும் எதிர்பார்க்கவில்லை. இரண்டாம் உலகப் போரின் இறுதியில் இந்த மண்டலம் முழுவதுமே சோவியத் படைகளின் ஆக்கிரமிப்பில் இருந்தது. 1940களில் சோவியத்திற்கு அடிபணிந்த பொதுவுடைமை ஆட்சிகள், பல்கேரிய, ருமேனியா, போலந்து, அங்கேரி, செக்கோஸ்லோவேக்கியா, கிழக்கு ஜெர்மனி ஆகிய ஆறு நாடுகளிலும் நிறுவப்பட்டன. இந்த ஆட்சிகள் பொதுவாக மக்கள் ஆதரவைப் பெற்றிருக்கவில்லை. எனினும், இவற்றின் தலைவர்கள், இரகசியக் காவற்படை, இராணுவம் ஆகியவற்றின் துணையுடன், 40 ஆண்டுகளுக்கு மேல் அதிகாரம் செலுத்தி வந்தார்கள். 1956இல் ஹங்கேரியில் நடந்தது போல், ஒரு மக்கள் புரட்சி, பொதுவுடைமைச் சர்வாதிகாரி ஒருவரை ஆட்சியிலிருந்து கவிழ்த்து விட்டால்கூட, சோவியத் இராணுவம் உடனே அங்கே சென்று, பொதுவுடைமைவாதிகளை மீண்டும் ஆட்சியில் அமர்த்தியது. போலந்தில், 1989 செப்டம்பருக்குள், கிழக்கு ஐரோப்பாவில் பொதுவுடைமையாளர்களின் - ரஷியர்களின் ஆதிக்கம் மீண்டும் நிலைநாட்டப்பட்டது. ஆனால், அந்த ஆண்டின் இறுதியில், பொதுவுடைமை அமைப்புமுறை முழுவதும், ஒரு சீட்டுக் கட்டு வீடு பறந்து மறைவது போல், நொடிப் பொழுதில் சுருண்டு வீழ்ந்தது.
கிழக்கு ஜெர்மனியில் தொல்லைகள் தொடங்கின. உலகமே பழி தூற்றிய பெர்லின் பெருஞ்சுவர் 1961இல் எழுப்பப்பட்டதிலிருந்தே, ஏராளமான கிழக்கு ஜெர்மானியர்கள், மேற்கே தப்பியோடிவிட விரும்பினார்கள். பெருஞ்சுவரைத் தாண்டிச் சென்று சுதந்திரப் பறவைகளாகச் சுற்றித் திரிய விரும்பிய ஏராளமான மக்கள் அந்தச் சுவரைத் தாண்ட முயன்றபோது சுட்டு வீழ்த்தப்பட்டனர். பல்லாண்டுகள் வரை கிழக்கு ஜெர்மனியும், பொதுபுடைமை ஆட்சி அனைத்தும், வெறும் சிறைக்கூடங்கள்தாம் என்பதை உலகுக்கு உணர்த்தும், கொடூரச் சின்னமாக பெர்லின் பெருஞ்சுவர் விளங்கியது. வேறு வழிகள் மூலம் மேற்கு ஜெர்மனிக்குத் தப்பிச் செல்வதற்குக் கிழக்கு ஜெர்மனியருக்கு வழியில்லாமல் போயிற்று. ஏனென்றால், மேற்கு ஜெர்மனியுடனான தனது எல்லை முழுவதையும் கிழக்கு ஜெர்மனி அரசு அடைத்து விட்டது. எல்லை நெடுகிலும், மின் வேலிகளையும், எச்சரிக்கை மணிகளையும், இராணுவக் கண்காணிப்பு நிலையங்களையும், தப்பிச் செல்பவர்களைப் பிடிக்க அகழிகளையும் அமைத்தது. எனினும், 1988-89இல் ஏராளமான கிழக்கு ஜெர்மனியர்கள் தப்பிச் செல்வதில் வெற்றி கண்டார்கள். இதற்கு அவர்கள் ஒரு மறைமுக வழியைக் கையாண்டார்கள். முதலில் அவர்கள் மற்றொரு கிழக்கு ஐரோப்பிய நாட்டுக்குச் சட்டப்படி சென்றார்கள். பின்னர் அங்கிருந்து மேற்கு ஜெர்மனியை அடைந்தார்கள்.
கிழக்கு ஜெர்மனியைப் பல்லாண்டுகள் ஆண்டு வந்த, கொடுமையும், கொடூரமும் நிறைந்த எரிக் ஹொனேக்கர் 1989 அக்டோபரில், இந்த மாற்று வழியை அடைத்து விட முயன்றார்.சில நாட்களுக்குப் பிறகு, ஹொனேக்கரின் இந்த நடவடிக்கையை எதிர்த்துக் கிழக்குப் பெர்லினில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இந்த நெருக்கடி நேரத்தில் கோர்பச்சாவ் பெர்லின் நகருக்கு வருகை புரிந்தார். சீர்திருத்தங்களைத் தாமதமின்றிச் செயற்படுத்தும்படி ஹொனேக்கரிடம் வலியுறுத்தினார். ஆர்ப்பாட்டங்களை வன்முறை மூலம் அடக்க வேண்டாம் என்று எச்சரித்தார். கிழக்கு ஜெர்மன் மக்களுக்கு எதிராகச் சோவியத் படைகளைப் (அப்போது கிழக்கு ஜெர்மனியில் 3,80,000 சோவியத் படை வீரர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்) பயன்படுத்தக் கூடாது என்றும் கண்டிப்பாகக் கூறிச் சென்றார்.
கோர்பச்சாவின் இந்த எச்சரிக்கைகள், கிழக்கு ஜெர்மன் காவல் படையினரும், இராணுவத்தினரும் மேற்கொள்ளவிருந்த பயங்கரமான இரத்தக் களறி அடக்குமுறையைத் தடுத்து நிறுத்தின. அதே சமயம், இதனால் எதிர்ப்பாளர்கள் மிகுந்த ஊக்கம் பெற்றனர். சில நாட்களில், பல்வேறு கிழக்கு ஜெர்மன் நகரங்களில் பிரம்மாண்டமான பொது மக்கள் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இரு வாரங்களுக்குள், ஹொனேக்கர் கட்டாயத்தின் பேரில் பதவியிலிருந்து விலகினார். எனினும், அவருக்குப் பின், ஆட்சிக்கு வந்த இகோன் கிரன்ஸ் என்பவரும் ஒரு பொதுவுடைமைவாதியே. எல்லைகள் இன்னும் அடைக்கப்பட்டிருந்ததால், பெரும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தன. இறுதியாக, பெர்லின் பெருஞ்சுவர் திறக்கப்படும் என்றும், கிழக்கு ஜெர்மானியர்கள் சுதந்திரமாக மேற்கு ஜெர்மனிக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று நவம்பர் 9 அன்று கிரன்ஸ் அறிவித்தார்.
இந்த அறிவிப்பைக் கேட்டுக் கிழக்கு ஜெர்மனி மக்கள் மட்டற்ற மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தனர். இதன் பின், புரட்சிகரமான விளைவுகள் மிகத் துரிதமாக ஏற்பட்டன. சில நாட்களுக்குள், பல இலட்சம் கிழக்கு ஜெர்மானியர்கள் எல்லையைத் தாண்டிச் சென்றனர். மேற்கில் நிலவும் வாழ்க்கை முறையைக் கண்கூடாகக் கண்டு வியந்தனர். நாற்பதாண்டுக் காலப் பொதுவுடைமை ஆட்சியில் தங்களின் சுதந்திரமும், வாழ்வு வளமும் பறிக்கப்பட்டு விடடன என்பதை அங்கு அவர்கள் கண்ட காட்சிகள் அவர்களுக்கு உணர்த்தின.
"உண்மைகள் முக்கியமல்ல; மக்கள் அவற்றை நோக்கும் விதம் தான் முக்கியம்" என்று ஒரு தத்துவஞானி கூறினார். இதனைப் பெர்லின் பெருஞ்சுவர் திறப்பு தெள்ளத் தெளிவாக உறுதிப்படுத்தியது. கிரன்சின் அறிவிப்பு வெளியான பின்பும் சில நாட்கள் வரை பெர்லின் பெருஞ்சுவர் இன்னும் ஆடாமல் அசையாமல் அப்படியே நின்று கொண்டிருந்தது. கிழக்கு ஜெர்மன் அரசு எந்த நேரத்திலும் எல்லையைக் கொள்கையளவில் மீண்டும் மூடிவிட்டிருக்கலாம். ஆனால், அந்தச் சுவர் நிரந்தரமாகத் திறந்து விடப்பட்டு விடடாற்போல் மக்கள் நடந்து கொண்டனர். மக்கள் ஒவ்வொருவரும் இவ்வாறே செயற்பட்டதால், பெர்லின் சுவர் உண்மையில் அகற்றப்பட்டுவிட்டதைப் போன்ற விளைவு ஏற்பட்டது.
இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு பிரெஞ்சுப் புரட்சியின் போது பாஸ்டில் சிறை தகர்க்கப்பட்டபோது, பிரெஞ்சு மக்கள் எவ்வாறு நடந்து கொண்டார்களோ அதே போன்று பெர்லின் பெருஞ்சுவர் இடிக்கப்பட்டபோது கிழக்கு ஐரோப்பிய மக்கள் அனைவரும் நடந்து கொண்டார்கள். ஒன்றன்பின் ஒன்றாக ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் தங்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து, தங்கள் மீது நெடுங்காலம் ஆட்சி செலுத்தி வந்த பொதுவுடைமை ஆட்சிகளைத் தூக்கி எறிந்தார்கள்.
பல்கேரியாவில், அந்நாட்டை 35 ஆண்டுகள் இரும்புக் கரங்கொண்டு ஆட்சி புரிந்த தோடோர் ஷிவ்கோவ் விரைவிலேயே பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்டார் (1989 நவம்பர் 10).
இதற்கு ஒரு வாரத்திற்குப் பிறகு, செக்கோஸ்லோவேக்கியத் தலைநகர் பிரேகில், மிகப்பெரும் ஆர்ப்பாட்டங்கள் தொடங்கின. இவற்றின் விளைவாக, டிசம்பர் 10 வாக்கில், அந்நாட்டுக் குடியரசுத் தலைவர் கஸ்டாவ் ஹூசாக் பதவி விலக நேர்ந்தது. பொதுவுடைமைக் கட்சியின் ஆதிக்கமும் முடிவுக்கு வந்தது. பொதுவுடைமைக் கட்சியின் முன்னணி எதிர்ப்பாளராகப் போராடி, அந்த ஆண்டில் முதல் சில மாதங்கள் ஓர் அரசியல் கைதியாக சிறையில் வாடிய ஜாக்ளாவ் ஹேவல் ஹூசாக்குக்குப் பதில் குடியரசுத் தலைவரானார்.
ஹங்கேரியில் இன்னும் விரைவாக மாறுதல்கள் நிகழ்ந்தன. அங்கு, 1989 அக்டோபரில், எதிர்க்கட்சிகளை அரசாங்கம் சட்டப்படி ஏற்றுக் கொண்டிருந்தது. பிறகு, நவம்பர் 26 அன்று நடந்த சுதந்திரமான பொதுத் தேர்தல்களில், இந்தப் புதிய கட்சிகள், பொதுவுடைமைக் கட்சியினரை படுதோல்வியடையச் செய்தன. இரத்தம் சிந்தாமல் பொதுவுடைமையினரின் ஆதிக்கம் முடிவுற்றது.
போலந்தில் நிகழ்ச்சிகள் இன்னும் துரிதமாக நடந்தன. 1989 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், வெற்றிவாகை சூடிய பொதுவுடைமை எதிர்ப்பாளர்கள், சமதருமக் கொள்கையை அடியோடு கைவிட்டு விட்டு, 1990 சனவரி முதல் தேதி சுதந்திர அங்காடிப் பொருளாதாரத்தை ஏற்படுத்த முடிவு செய்தனர்.
கிழக்கு ஜெர்மனியின் இகோன் கிரன்ஸ் எல்லையைத் திறந்து விடுவதன் மூலம், எதிர்க்கட்சியினரின் வாயை அடைத்து, எதிர்ப்புகளை ஒழித்து விடலாம் என்று நம்பினார். ஆனால், அவர் நம்பியது நடக்கவில்லை. எதிர்ப்புப் போராட்டங்கள் நீடித்தன. 1989 டிசம்பர் 3 அன்று கிரன்ஸ் அரசுத் தலைவர் பதவியிலிருந்து விலகினார். நான்கு நாட்களுக்குப் பிறகு, சுதந்திரமான தேர்தல்களை நடத்த அரசு ஒப்புக் கொண்டது. இத்தேர்தல்களின், எதிர்பார்த்தபடியே பொதுவுடைமையாளர்கள் படுதோல்வியைத் தழுவினார்.
பொதுவுடைமை ஆட்சி கடைசியாக எஞ்சியிருந்தது ருமேனியாவில்தான். அங்குக் கொடுங்கோல் ஆட்சி புரிந்து வந்த நிகோலஸ் சேசெஸ்கு என்ற சர்வாதிகாரி, பதவியைத் துறக்கப் பிடிவாதமாக மறுத்தார். அவருடைய ஆட்சிக் எதிராக டிசம்பர் 15 அன்று திமிசோராவில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தபோது, கூட்டத்தினரைச் சுட்டுத் தள்ளும்படி இராணுவத்திற்கு ஆணையிட்டார். ஆனால், கொதித்தெழுந்த பொதுமக்களை அவரால் அடக்கியொடுக்க முடியவில்லை. ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடந்தன. மற்ற நகரங்களுக்கும் விரைவில் பரவின. டிசம்பர் 25 அன்று சேசெஸ்கு ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அவர் சிறை பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். கிழக்கு ஐரோப்பாவில் பொதுவுடைமையின் கடைசி சுவடும் மறைந்தது.
இந்த நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. இவற்றின் விளைவாக விரைவிலேயே பின்வரும் நிகழ்ச்சிகள் நிகழ்ந்தன. (1) செக்கோஸ்லோவேக்கியாவிலும், ஹங்கேரியிலும் சோவியத் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. (2) புதிதாகச் சுதந்திரமடைந்த நாடுகளில் உண்மையான தேர்தல்கள் நடந்தன. (இத்தேர்தல்களில் பொதுவுடைமையாளர்கள் பெரும்பாலும் படுதோல்வியடைந்தார்கள்). (3) சோவியத் ஒன்றியத்தின் வாடிக்கை நாடுகளாக இருந்து வந்த பல நாடுகள் மார்க்சியக் கொள்கையைக் கைவிட்டன (எடுத்துக்காட்டு: மங்கோலியா, எத்தியோப்பியா); (4) ஜெர்மனி மறுபடியும் ஒருங்கிணைக்கப்பட்டது (இந்த இணைப்பு 1990 அக்டோபரில் முழுமை பெற்றது).
இந்த மாற்றங்கள் அ€€த்தையும் விட மிக முக்கியமா€ மாறுதல்கள் சோவியத் ஒன்றியத்திற்குள்ளேயே நிகழ்ந்து வந்தன. அங்கு, தேசிய இயக்கங்கள் மிக விரைவாக வளர்ந்தன. சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் (Union Soviet Socialist Rupublic) என்ற பெயர் வழங்கியபோதிலும், அது ஒருபோதும் தன் விருப்பமாக இணைந்த ஓர் ஒன்றியமாக இருக்கவில்லை. மாறாக, ஜார் மன்னர்கள் (Czars) ஆண்ட பழைய ரஷியப் பேரரசின் வழிவந்த ஓர் ஆட்சியாகவே விளங்கியது. அதாவது, படையெடுத்து வெற்றிக் கொள்ளப் பட்ட மக்கள் குழுமங்களின் ஒரு கூட்டமாகவே அது இருந்தது. (ஜார் பேரரசினை மேலை நாட்டினர் நாடுகளின் சிறைக்கூடம் என்றே அழைத்தனர்). அந்த மக்கள் குழுமங்களில் பெரும்பாலோர் சுதந்திர வேட்கை கொண்டவர்களாக இருந்தனர். பழைய பிரிட்டிஷ், ஃபிரெஞ்சு, டச்சுப் பேரரசுகளிடமிருந்து விடுதலை பெற மக்கள் விரும்பியது போல், அவர்களும் விரும்பினார்கள். ஸ்டாலின் இரும்புக்கர ஆட்சியில் அல்லது அவருக்குப் பின் வந்தவர்களின் கொடூரம் குறைந்த, ஆனால், வல்லாதிக்க ஆட்சியில் மக்கள் தங்களின் இந்த ஏக்கங்களைப் பகிரங்கமாக வெளியிட இயலாமலிருந்தது. ஆனால், கோர்பச்சாவின் வெளிப்படை நிலை ஆட்சியில் மக்கள் தங்களின் தேசிய உணர்வுகளை மனந்திறந்து வெளியிட முடிந்தது. விரைவிலேயே அமைப்பு முறையான இயக்கங்கள் தோன்றின. எஸ்டோனியாவிலும், வேறு பல சோவியத் குடியரசுகளிலும் கிளர்ச்சிகள் மூண்டன. ஆனால், சின்னஞ்சிறு லிதுவேனியாவில்தான் முதன் முதலில் நிலைமை குமுறி வெடித்தது. அங்கு, பொதுத் தேர்தல்கள் நடந்தன. அந்தத் தேர்தலில், சோவியத் ஒன்றியத்திலிருந்து லிதுவேனியா பிரிந்து சுதந்திர நாடாக வேண்டுமா என்பதே முக்கிய சிக்கலாக இருந்தது. லிதுவேனிய நாடாளு மன்றம், முக்கிய சிக்கலாக இருந்தது. லிதுவேனிய நாடாளு மன்றம், 1990 மார்ச் 11 அன்று, சோவியத் ஒன்றியத்திலிருந்து லிதுவேனியா முழுச்சுதந்திரம் பெற்று விட்டது என்று அறிவித்தது.
லிதுவேனியா இவ்வாறு சுதந்திரப் பிரகடனம் செய்வதற்கு ஏட்டளவில் உரிமை இருந்தது. சோவியத் அரசமைப்பில், எந்த ஒரு குடியரசும், பிரிந்து செல்வதற்கு உரிமை உண்டு என்னும் வகைமுறை பல்லாண்டுகளாக இருந்து வந்தது. ஆயினும், கோர்பச்சாவுக்கு முன்பு,இந்த உரிமையைப் பயன்படுத்துவதற்கான எந்த முயற்சியும் வன்மையாக ஒடுக்கப்படும்; அவ்வாறாக முயல்பவர்களுக்குப் பயங்கர விளைவுகள் ஏற்படும் என்ற நிலைதான் இருந்து வந்தது.
லிதுவேனியாவின் இந்த அறிவிப்புக்குக் கோர்பச்சாவின் பதில் நடவடிக்கை அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது. லிதுவேனியாவின் நடவடிக்கை சட்ட விரோதமானது என்று அவர் கண்டித்தார். இந்த அறிவிப்பைக் கைவிடாவிட்டால் பயங்கர விளைவுகள் உண்டாகும் என எச்சரித்தார். பொருளாதார முற்றுகை (Economic embargo) பிறப்பித்தார். சோவியத் படைகளின் வல்லமையைக் காட்டுவதற்காக, லிதுவேனியத் தலைநகர வீதிகளில் சோவியத் படைகளின் அணிவகுப்பை நடத்தினார். ஆனால், பிரிந்து சென்ற அந்த மாநிலத்தை அவர் நேரடி இராணுவப் பலத்தின் மூலம் அடக்கவில்லை. லிதுவேனியத் தலைவர்களை (ஸ்டாலின் செய்தது போல்) அவர் சுட்டுக் கொல்லவில்லை; சிறையிலும் அடைக்கவில்லை.
லிதுவேனியா மிகச் சிறிய நாடு. பொருளாதார அளவிலோ இராணுவ அளவிலோ அது சோவியத் ஒன்றியத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததன்று. ஆனால், லிதுவேனியா ஏற்படுத்திய எடுத்துக்காட்டு மிக முக்கியமானதாகும். லிதுவோனியாவின் பிரிவினை முயற்சி அடக்கியொடுக்கப் படாததைத் தொடர்ந்து, மற்ற சோவியத் குடியரசுகளின் தேசியவாதிகள் நம்பிக்கையும் துணிவும் பெற்றனர். இரு மாதங்களுக்குள்ளாக, லாட்வியா நாடாளுமன்றமும், சோவியத்திலிருந்து பிரிவதாகச் சுதந்திரப் பிரகடனம் செய்தது. அதன்பின், சோவியத் ஒன்றியத்திலேயே மிகப் பெரிய குடியரசான ரஷிய குடியரசு, 1990 ஜூன் 12 இல் தன் இறையாண்மை யை (Soverignty) அறிவித்தது. இது சுதந்திரப் பிரகடனம் இல்லையென்றாலும், பெரும்பாலும் அத்தகைய அறிவிப்பாகவே அமைந்தது. அந்த ஆண்டின் இறுதிக்குள், சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த 15 குடியரசுகள் ஒவ்வொன்றும் தனது சுதந்திரத்தை அல்லது இறையாண்மையை அறிவித்து விட்டன.
கோர்பச்சாவின் இந்தச் செயல்கள் (மற்றும் நெருக்கடியான கட்டங்களில் செயலின்மைகள்) காரணமாகக் கட்டவிழ்த்து விடப்பட்ட கணக்கற்ற மாறுதல்களை, பொதுவுடைமைக் கட்சியின் பழந்தலைவர்களும், சோவியத் இராணுவமும் ஐயக்கண் கொண்டு பார்த்ததில் வியப்பில்லை. இவர்களில் சிலர் 1991 ஆகஸ்டின் ஓர் இராணுவப் புரட்சியை (Coup d' etate) நடத்தினர். கோர்பச்சாவ் கைது செய்யப்பட்டார்; அவர் கொண்டு வந்த பல சீர்திருத்தங்களைப் புரட்சியை (coup d' etate) நடத்தினர். கோர்பச்சாவ் கைது செய்யப்பட்டார்; அவர் கொண்டு வந்த பல சீர்திருத்தங்களைப் புரட்சி தலைவர்கள் நீக்கி விடுவார்கள் எனத் தோன்றியது. எனினும், சோவியத் ஒன்றியத்தினுள் இருந்த மற்ற முன்னணித் தலைவர்கள் - குறிப்பாக ரஷியக் குடியரசின் தலைவர் போரிஸ் எல்ட்சின் (Boris Eltsin) - இந்தப் புரட்சியை எதிர்த்தார். ரஷிய மக்களில் பெரும்பாலோரும் இதனைத் தீவிரமாக எதிர்த்தனர். இதனால், சில நாட்களிலேயே இந்தப் புரட்சி தோல்வியடைந்தது.
இந்தப் புரட்சியின் தோல்விக்குப் பிறகு, நிகழ்ச்சிகள் மின்னல் வேகத்தில் நிகழ்ந்தன. பொதுவுடைமைக் கட்சி ஆட்சியிலிருந்து தூக்கி எறியப்பட்டது. அதன் நடவடிக்கைகள் தடைச் செய்யப்பட்டன. அதன் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ஆண்டின் இறுதிக்குள், சோவியத் ஒன்றியத்தில் இணைந்திருந்த குடியரசுகள் அனைத்தும் பிரிந்து சென்று விட்டன. சோவியத் ஒன்றியம் முறைப்படி கலைக்கப்பட்டது. பொதுவுடைமை அமைப்பு முறையில் சீர்திருத்தம் மட்டும் செய்ய வேண்டும் என்று வற்புறுத்திய தலைவர்கள் விரைவிலேயே புறந்தள்ளப்பட்டு, பொதுவுடைமை அமைப்பு முறையை அடியோடு ஒழித்து விட வேண்டுமென்று விரும்பிய எல்ட்சின் போன்ற தலைவர்கள் முன்னணிக்கு வந்தார்கள். கோர்பச்சாவ்கூட 1991 டிசம்பரில் பதவி விலகினார்.
இது நம்மை அடுத்த கேள்விக்கு இட்டுச் செல்கிறது: கோர்பச்சாவ் தம் பதவிக் காலத்தில் நிகழ்ந்த மாறுதல்கள் சொந்த முறையில் எந்த அளவுக்குப் பொறுப்பாளியாக இருந்தார்?
சோவியத் ஒன்றியத்தில் அவரது தலைமையில் கீழ் பல பொருளாதாரச் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. எனினும், இந்த வகையில் அவர் அந்தப் பெருமைக்குத் தகுதியுடைவர் அல்ல என்பது என் கருத்து. ஏனென்றால், பொதுவாக, சோவியத் அமைப்பு முறையில் வெளிப்படையான தோல்விகள் காரணமாக, அவர் மீது சீர்திருத்தங்கள் திணிக்கப் பட்டன. மேலும், அவர் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் மிக மிகக் குறைந்தவை. மிகவும் காலங் கடந்தவை. உண்மையைக் கூறின். சோவியத் பொருளாதாரத்தின் மிக மோசமான சாதனையே, கோர்பச்சாவின் இறுதி வீழ்ச்சிக்குக் காரணம்.
இதற்கு மாறாக, கிழக்கு ஐரோப்பா விடுதலை பெற்றதில் அவரது பங்குப் பணிக்காகக் கோர்பச்சாவை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். சோவியத் கட்டுப்பாட்டிலிருந்து ஆறு நாடுகள் விடுவிக்கப்பட்டன. இந்த விடுதலையை இனி ஒருபோதும் மாற்ற முடியாது. நிகழ்ந்த நிகழ்ச்சிகளில் கோர்பச்சாவின் சொந்தச் செல்வாக்கினையும் யாரும் ஐயுறுவதற்கில்லை. கிழக்கு ஐரோப்பாவில் எழுந்த சீர்திருத்த இயக்கங்கள் அனைத்தும், ரஷியாவிற்குள் நிகழ்ந்த முற்போக்கு நடவடிக்கைகளின் தூண்டுதலினாலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் தங்கள் வழியில் செல்வதற்கு அனுமதிக்கப்படும் என்று அவர் அடிக்கடி அறிவித்ததனால் ஏற்பட்ட ஊக்கத்தினாலும் ஏற்பட்டவையேயாகும். மேலும், ஒரு நெருக்கடியான தருணத்தில் - கிழக்கு ஜெர்மனியில் 1989 அக்டோபரில் பிரம்மாண்டமான ஆர்பாட்டங்கள் தொடங்கிய நேரத்தில் - கோர்பச்சாவ் நேரடியாகத் தலையிட்டார். அதுபோன்ற சூழ்நிலைகளில் முந்தைய சோவியத் தலைவர்கள், எப்போதுமே படைகளை அனுப்பி, புரட்சிக் காரர்களை ஒடுக்க எல்லாவகையான கொடூர நடவடிக்கைகளையும் கையாண்டார்கள். ஆனால், 1989 அக்டோபரில் கோர்பச்சாவ் தலையிட்டபோது, ஆர்ப்பாட்டக் காரர்களை வன்முறை மூலம் அடக்க வேண்டாம் என்று ஹொனோக்கரிடம் வலியுறுத்தினார். அந்த முடிவின் விளைவுகளை நாம் பார்த்தோம். அதே போன்று, லிதுவேனியப் புரட்சியை ஒடுக்குவதற்கு இராணுவத்தைப் பயன்படுத்துவதில்லை என்று கோர்பச்சாவ் எடுத்த முடிவு, மற்ற சோவியத் குடியரசுகள் விரைவாகப் பிரிந்து செல்வதற்கு வழி வகுத்தது.
ஆயுதக் குறைப்பிலும், மிரட்டல் போருக்கு முடிவு கட்டியதிலும், கோர்பச்சாவின் செல்வாக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதற்கான பெருமை ரோனால்ட் ரீகளையே சேரும் என்று பலர் கருதுகீறார்கள். இதற்கு அவர்கள் கூறும் வாதங்கள் இவை: ஆயுதப் போட்டியின் செலவுகளைத் தாங்கிக் கொள்ளும் திறன் சோவியத் ஒன்றியத்தைவிட அமெரிக்காவுக்கு அதிகம் என்று ரீகன் எடுத்துக்காட்டினார். எனினும், மிரட்டல் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு சோவியத் தலைவர்களைச் சம்மதிக்க வைப்பதில் அவர் முக்கிய பங்கு கொண்டார். மேலும், ஓர் உடன்படிக்கையைச் செய்து கொள்வதற்கு இரண்டு தரப்புகள் தேவை என்பதால், படைக்கலக் குறைப்பு உடன்படிக்கை கையெழுத்தானதற்கான பெருமை கோர்பச்சாவ், ரீகன் இருவருக்கும் சரி சமமாகச் சேர வேண்டும்.
மிரட்டல் போருக்கு அமெரிக்க, ரஷியா இரண்டுமே சரிநிகராகக் காரணமாக இருந்திருந்தால், இந்த வாதம் சரியாக இருக்கலாம். ஆனால், உண்மை அதுவல்ல, ஸ்டாலின், அவருக்குப் பின் வந்தவர்கள் ஆகியோரின் இராணுவ விரிவாக்கம் காரணமாக மிரட்டல் போர் ஏற்பட்டது. அதற்குப் பதில் நடவடிக்கையாக அமெரிக்கா தனது தற்காப்பினைப் பலப்படுத்த வேண்டியதாயிற்று. உலக முழுவதிலும் பொதுவுடைமையைப் புகுத்த சோவியத் தலைவர்கள் கனவு கண்டு கொண்டிருந்தவரை, மேலை நாட்டினருக்கு (சரணடையாமல்), போரை முடிவுக்குக் கொண்டுவர வேறு வழி இல்லாமல் போயிற்று. அந்தக் கனவைக் (குறிக்கோளை) கைவிடுவிதற்குத் தயாராக இருந்த ஒரு சோவியத் தலைவர் தோன்றிய போது, முடிவுற்றதாகத் தோன்றிய மிரட்டல் போர் விரைவிலேயே கரைந்து மறைந்து போயிற்று.
சோவியத் ஒன்றியத்திற்குள்ளேயே கோர்பச்சாவ் ஏற்படுத்திய அரசியல் மாற்றங்களுக்காக அவர் இன்னும் அதிகப் பெருமைக்குரியவராகிறார். பொதுவுடைமைக் காட்சியின் அதிகாரக் குறைப்பு, வெளிப்படை நிலைக் கொள்கையின் முன்னேற்றம், பத்திரிகை சுதந்திரம் மற்றும் பேச்சுரிமையில் முன்னேற்றம், பத்திரிகை சுதந்திரம் மற்றும் பேச்சுரிமையில் ஏற்பட்ட மகத்தான முன்னேற்றங்கள், பொதுவாக நாட்டின் மக்களாட்சியின் முறையாக்கம் போன்ற சீர்திருத்தங்கள் எதுவும், கோர்பச்சாவ் இல்லாதிருந்ததால், செயலுக்கு வந்திருக்காது. வெளிப்படை நிலைக் கொள்கை மக்கள் நிர்ப்பந்தம் காரணமாக அவர் மீது திணிக்கப்படவில்லை. அது, மற்ற ஆட்சி மன்ற உறுப்பினர்கள் வற்புறுத்திய ஒரு கொள்கையும் அன்று. அது முழுக்க முழுக்க கோர்பச்சாவின் சொந்தக் கொள்கை, கடுமையான எதிர்ப்புக்கிடையிலும் அவர் அக்கொள்கையை உருவாக்கினார். அதற்குத் தொடர்ந்து ஆதரவளித்தார்.
வேறெதனையும் விட இந்த வெளிப்படை நிலைக் கொள்கைதான், சோவியத் அமைப்பு முறையை இறுதியாகத் தூக்கி எறிவதற்கு அனுமதித்தது- இந்தப் புரட்சிகரமான மாற்றங்கள் (இதுகாறும்) வன்முறை அதிகமின்றி ஏற்பட்டிருப்பது உண்மையிலேயே வியக்கத்தக்கது. இதற்கு கோர்பச்சாவின் கொள்கைகளும், பதவியில் அவர் நடந்து கொண்ட முறையுமே பெருமளவு காரணம்.
கோர்பச்சாவ் மேற்கொண்ட நடவடிக்கைகளின் (ஜெர்மனி மறு இணைப்பு, சோவியத் ஒன்றிய உடைப்பு, பொதுவுடைமையின் மறைவு போன்றவை) மிக முக்கியமான விளைவுகளில் சிலவற்றை அவரே விரும்பியதில்லை என்று சிலர் கூறுவர். அது உண்மையாக இருக்கலாம். ஆனால், அதனால் அவருடைய முக்கியத்துவம் குறைந்துவிடவில்லை. ஓர் அரசியல் தலைவரின் - அல்லது வேறெவரேனும் ஒருவரின் செல்வாக்கு, அவருடைய செயல்களின் விளைவினைக் கொண்டுதான் கணிக்கப்படுகிறதேயன்றி, அவருடைய உள்நோக்கங்களினால் அல்ல.
மார்க்சியத்தின் தோல்விக்கு வேறு பலரும் (பெரும் பாலும் தீவிர பொதுவுடைமை எதிர்ப்பாளர்கள்) காரணமாக இருந்தார்கள் என்பது உண்மைதான். பொதுவுடைமை அமைப்பு முறையின் உண்மையான தன்மை குறித்து மேலை நாட்டினருக்கு எச்சரித்த ஆர்தர் கோஸ்லர் (Arthur Koestler), விட்டாக்கர் சேம்பர்ஸ் (Whittaker Chambers) போன்ற முன்னாள் பொதுவுடைமையாளர்கள், ரஷியாவிற்குள்ளே தங்கள் உயிரைப் பணயம் வைத்து எதிர்ப்புக் கருத்துகளை வெளியிட்ட ஆண்ட்ரோ சக்காரோவ் (Andrei Sakharov), அலெக்சாண்டர் சோல்செனிட்சென் (Alexander Solzhenitzen), ஆஃப்கானிஸ்தான், அங்கோலா, நிக்காராகுவா ஆகிய நாடுகளில் பொதுவுடைமை அரசுகள் ஆட்சியைப் பிடிப்பதைத் தடுக்க அஞ்சா நெஞ்சுடன் போராடிய புரட்சி வீரர்கள் போன்ற கொரில்லாப் போராளிகள் அமெரிக்க ஆயுதங்களையும், அமெரிக்க நிதி நிறுவனங்களையும் பயன்படுத்திய ஹேரி ட்ரூமன் (Harry Trumen), ரோனால்ட் ரீகன் போன்ற அரசியல் தலைவர்கள் ஆகியோர் இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். பொதுவுடைமை பரவுவதைத் தடுத்து, இறுதியில் அதனைத் தோற்கடிப்பதற்கு அமெரிக்கச் சுதந்திரத்தின் எடுத்துக்காட்டும், வளமையுங்கூட பயன்பட்டது.
இருப்பினும், இவர்களும் (இன்னும் பலரும்) முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், 1985 இல் கோர்பச்சாவ் பதவி ஏற்றபோது, பொதுவுடைமைப் பேரரசின் முடிவு இத்துணை விரைவாக வரும் என்றும் யாரும் எதிர்பார்க்கவில்லை. சோவியத் அரசின் தலைவராக 1985 இல் லெனின் அல்லது ஸ்டாலின் போன்ற ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், அந்த அடக்குமுறை அரசாங்கம் இன்னும் நிலை பெற்றிருக்கும்; மிரட்டல் போர் இன்றும் நீடித்திருக்கும்.
ஆனால், 1985 இல் சோவியத் ஒன்றியத்தின் அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். கோர்பச்சாவேயன்றி, ஒரு ஸ்டாலின் அன்று! சோவியத் ஒன்றியத்தையும், அது தோற்றுவிக்கப்பட்ட காலம் முதல் அதனை ஆண்ட பொதுவுடைமைக் காட்சியையும் கலைத்துவிட அவர் ஒரு போதும் விரும்பியதில்லை. எனினும், அவர் ஏற்றுக்கொண்ட கொள்கைகளும், அவர் இயக்கிவிட்ட சக்திகளும் அந்த வேலையை செய்து விட்டன. அவருடைய உள் நோக்கங்கள் எவ்வாறு இருந்திருப்பினும், நமது உலகை மீண்டும் மாற்ற முடியாத அளவுக்கு அவர் மாற்றி விட்டார் என்பதில் ஐயமில்லை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மிகைல் கோர்பச்சாவ் (கி.பி.1931 - ), சோவியத், அவர், கோர்பச்சாவ், கிழக்கு, மக்கள், பொதுவுடைமை, பொதுவுடைமைக், கோர்பச்சாவின், தலைவர்கள், ஆட்சி, வந்த, எனினும், பிறகு, அந்த, ", கட்சியின், அன்று, இன்னும், பெர்லின், நடந்தன, முடிவு, வெளிப்படை, அமைப்பு, அவருடைய, மீது, ஸ்டாலின், இந்தப், மூலம், அரசியல், சீர்திருத்தங்கள், பெருஞ்சுவர், முக்கிய, பதவி, மிரட்டல், ஜெர்மனி, மேற்கொண்ட, ஆர்ப்பாட்டங்கள், வேறு, என்பது, மற்ற, மேலை, இதற்கு, என்றும், அல்லது, வெற்றி, விரைவிலேயே, அக்டோபரில், ரீகன், ஆட்சியில், போல், தலைவர், ஏராளமான, பிரிந்து, ஒன்றியத்தின், அரசுத், முன்பு, காரணமாக, கொண்டு, சென்று, தலைவராக, லிதுவேனியா, போது, ஐரோப்பாவில், நிகழ்ந்த, தனது, எந்த, உண்மையில், தங்கள், நடந்து, அங்கு, மேலும், பின், அரசு, தேர்தல்கள், முக்கியத்துவம், பெரும், படைகளை, ஜெர்மன், கிரன்ஸ், புரட்சியை, முதலில், மேற்கு, நடவடிக்கை, மீண்டும், பெரிய, ஒன்றியம், ஆண்டின், அப்போது, புரட்சி, சுதந்திரப், ஆகும், யாரும், மற்றொரு, சுதந்திரமான, ஏற்பட்ட, நிகழ்ச்சிகள், டிசம்பர், விலகினார், எதிர்ப்பாளர்கள், வன்முறை, நிலைக், தப்பிச், ஐரோப்பிய, போர், போயிற்று, அடைத்து, தங்களின், நிகழ்ந்தன, மாறுதல்கள், விரைவாக, பதில், சுதந்திர, இயக்கங்கள், நாடுகள், தொடர்ந்து, பொதுவுடைமையாளர்கள், பிரகடனம், வந்தது, விட்டன, நவம்பர், முறையில், அமெரிக்க, விளைவுகள், இருந்து, செல்வதற்கு, குடியரசுகள், தூக்கி, அவருக்குப், மாற்றங்கள், இருந்தனர், நடந்தது, இருந்த, புரிந்து, அடுத்த, மட்டும், நாடுகளில், அரசாங்கம், காரணம், எதிர்பார்க்கவில்லை, கொண்ட, செய்தார், கட்சித், கொண்டனர், விடுதலை, மிகவும், அவரது, காலத்தில், பயங்கர, காலம், கீழ், செய்து, உறுப்பினரானார், பெற்றார், பட்டம், குடியரசுத், ரோனால்ட், கட்சி, பெற்றனர், ஏனென்றால், ஆண்டுகளுக்கு, வேண்டும், புரட்சிகரமான, இறுதியில், ஜெர்மனியில், ஜெர்மானியர்கள், இவற்றின், பொதுவாக, படைகளின், பொது, நிலை", குறைப்பு, போருக்கு, விளைவாக, இந்தச், ஆகிய, அடியோடு, விலக்கிக், பொருளாதார, படைகள், இதனால், கொள்ள, அனைத்தும், Life Notes of Historians - வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்