கவிதைத் தொகுப்புகள் - ஒற்றை இறகு - பயிற்சி
- வசந்த் காலையில் என்னை படுக்கையில் எழுப்பி "ஹான்ஸ் அப்'' என்கிறாய். கடைக்குச் சென்று புதுத்துணி எடுத்தால்" "மில்டரி ட்ரஸ்'' கேட்கிறாய். கம்ப்யூட்டர் திரையில் அலட்சியமாக அமர்ந்து ஐநூறு ராக்கெட்டுகளை சுட்டு வீழ்த்துகிறாய். பிறந்த நாளுக்குப் பரிசாக ஏ கே 47 எடுக்கிறாய். அடுத்த வீட்டுப் பையன்மேல் இங்கிருந்தே அணுகுண்டு வீசுகிறோம். கண்ணே... காலம் உனை எங்கே கொண்டு போகுமோ? அதற்குள் எப்படி உனக்கு பூக்களை நேசிக்கக் கற்றுத் தருவேன் நான்? |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 33 | 34 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒற்றை இறகு - பயிற்சி - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -