களவியல் என்னும் இறையனார் அகப்பொருள்
இறையனார் அகப்பொருள் என்பது ஓர் தமிழ் இலக்கணநூல். அகப்பொருள் இலக்கணம் கூறும் இந்த நூலை மதுரை ஆலவாய்க் கடவுள் இறையனார் இயற்றினார் என்று அதன் நக்கீரர் உரை கூறுகிறது. இறையனார் என்னும் பெயர் கொண்ட ஒருவர் இயற்றியிருக்கவேண்டும், அல்லது இந்த நூலை இயற்றியவர் யார் என்று தெரியாத நிலையில் இறையனார் இயற்றினார் எனக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
இந்த நூல் கி.பி. ஏழாம் நூற்றாண்டு வாக்கில் தோன்றியிருக்கலாம். இந்த நூலுக்கு உரை எழுதிய நக்கீரர் தமது உரைக்கு மேற்கோளாக பாண்டிக்கோவை நூலிலுள்ள பாடல்களைத் தந்துள்ளார். பாண்டிக்கோவை கி.பி. எட்டாம் நூற்றாண்டு நூல். கட்டளைக் கலித்துறை இலக்கணம் கொண்ட பாடல்கள் முதலில் தோன்றிய காலம்.
நூல்
1. களவு
1.1
அன்பின் ஐந்திணைக் களவெனப் படுவ(து) அந்தணர் அருமறை மன்றல் எட்டனுள் கந்தருவ வழக்கம் என்மனார் புலவர் | 1 |
1.2 அதுவே தானே அவளே தமியர் காணக் காமப் புணர்ச்சி இருவயின் ஒத்தல் | 2 |
1.3 ஆங்ஙணம் புணர்ந்த கிழவோன் தன்வயின் பாங்க னோரின் குறிதலைப்(பு) எய்தலும் பாங்கிலன் தமியோள் இடம்தலைப் படலும்என்(று) ஆங்(கு)அவ் இரண்டே தலைப்பெயல் மரபே | 3 |
1.4 அவ்இயல்(பு) அல்லது கூட்டக் கூடல் எவ்விடத்(து) ஆயினும் களவிற்(கு) இல்லை | 4 |
1.5 புணர்ந்த பின்றை ஆங்ஙணம் ஒழுகாது பணிந்த மொழியால் தோழி தேஎத்(து) இரந்துகுறை உறுதலும் கிழவோன் மேற்றே | 5 |
1.6 இரந்துகுறை உறாது கிழவியும் தோழியும் ஒருங்கு தலைப்(பு)எய்த செவ்வி நோக்கிப் பதியும் பெயரும் பிறவும் வினாஅய்ப் புதுவோன் போலப் பொருந்துபு கிளந்து மதிஉடம் படுத்தற்கும் உரியன் என்ப | 6 |
1.7 முன்உற உணர்தல் குறைஉற உணர்தல் இருவரும் உள்வழி அவன்வர(வு) உணர்த்தலென்(று) அம்மூன்(று) என்ப தோழிக்(கு) உணர்ச்சி | 7 |
1.8 ஆங்குணர்ந்(து) அல்லது கிழவோள் தேஎத்துத் தான்குறை உறுதல் தோழிக்(கு) இல்லை | 8 |
1.9 முன்உற உணரினும் அவன்குறை உற்ற பின்னர் அல்லது கிளவி தோன்றாது | 9 |
1.10 உள்ளத்(து) உணர்ச்சி தெள்ளிதின் கரந்து கிழவோள் தேஎத்துக் குறைஉறூஉம் உளவே குறிப்பறி உறூவும் காலை ஆன | 10 |
1.11 தன்னுள் குறிப்பினை அருகும் தோழிக்கு முன்னுறு புணர்ச்சியின் அருகலும் உண்டே | 11 |
1.12 குறைஉறும் கிழவனை உணர்ந்த தோழி சிறைஉறக் கிளந்து சேண்பட நிறுத்தலும் என்னை மறைத்தல் எவனா கியர்என முன்உறு புணர்ச்சி மு¨றுமுறை செப்பலும் மாயப் புணர்ச்சி அவனொடு நகாஅ நீயே சென்று கூ(று)என விடுத்தலும் அறியாள் போறலும் குறியாள் கூறலும் படைத்துமொழி கிளவியும் குறிப்புவேறு கொளலும் அன்ன பிறவும் தலைப்பெயல் வேட்கை முன்உறு புணர்ச்சிக்(கு) உரிய என்ப | 12 |
1.13 குறைஉறு புணர்ச்சி தோழி தேஎத்துக் கிழவிக்(கு) இல்லை தலைப் பெயல் ஆன | 13 |
1.14 தோழிக்(கு) உரியவை கோள்தாய் தேஎத்து மாறுகோள் இல்லா மொழியுமார் உளவே | 14 |
1.15 முன்படப் புணராத சொல்இன் மையின் கற்பெனப் படுவது களவின் வழித்தே | 15 |
1.16 களவினுள் தவிர்ச்சி காப்புமிகின் உரித்தே வரைவிடை வைத்த காலை ஆன | 16 |
1.17 அல்லகுறிப் படுதலும் அவ்வயின் உரித்தே அவன்வர(வு) அறியும் குறிப்பினன் ஆனா | 17 |
1.18 குறிஎனப் படுவ(து) இரவினும் பகலினும் அறியக் கிளந்த இடம் என மொழிப | 18 |
1.19 இரவுக் குறியே இவ்வரை இகவாது | 19 |
1.20 பகற்குறி தானே இகப்பினும் வரையார் | 20 |
1.21 இரவுமனை இகந்த குறிஇடத்(து) அல்லது கிழவோன் சேர்தல் கிழத்திக்(கு) இல்லை | 21 |
1.22 அம்பலும் அலரும் களவு | 22 |
1.23 வெளிப்பட்ட பின்றையும் உரிய கிளவி | 23 |
1.24 களவு வெளிப்படா முன்உறு வரைதல் களவு வெளிப்பட்ட பின்றை வரைதல் என்(று) ஆய்இரண்(டு) என்ப வரைதல் ஆறே | 24 |
1.25 பட்ட பின்றை வரையாக் கிழவன் நெட்டிடைக் கழிந்து பொருள்வயின் பிரிதலும் பொருள்வயின் பிரியா(து) ஒருவழி தணத்தலும் புரைவ(து) என்ப கற்பால் ஆன | 25 |
1.26 வெளிப்படை தானே விரிக்கும் காலைத் தந்தை தாயே தன்னையர் என்(று) ஆங்(கு) அன்னவர் அறியப் பண்(பு)ஆ கும்மே | 26 |
1.27 அவருள் தாய்அறி உறுதலின் ஏனோரும் அறிப | 27 |
1.28 தந்தை தன்னயர் ஆய்இரு வீற்றும் முன்னம் அல்லது கூற்(று) அவண் இல்லை | 28 |
1.29 காப்புக் கைமிக்குக் காமம் பெருகினும் நொதுமலர் வரையும் பருவம் ஆயினும் வரைஎதிர் கொள்ளாது தமர்அவண் மறுப்பினும் அவன்ஊறு அஞ்சும் காலம் ஆயினும் அந்நால் இடத்தும் மெய்ந்நாண் ஒரீஇ அறத்தொடு நிற்றல் தோழிக்கும் உரித்தே | 29 |
1.30 காமம் மிக்க கழிபடர் கிளவியும் காப்புச் சிறைமிக்க கையறு கிளவியும் ஆறுபார்த்(து) உற்ற அச்சக் கிளவியும் இரவினும் பகலினும் நீவரு(க) என்றலும் கிழவோன் தன்னை வாரல் என்றலும் தன்னுள் கையாறு எய்திடு கிளவியும் அன்ன மரபின் பிறவும் தொகைஇத் தன்னை அழிந்த கிளவி எல்லாம் வரைதல் வேட்கைப் பொருள என்ப | 30 |
1.31 ஆ(று)இன் னாமையும் ஊறும் அச்சமும் தன்னை அழிதலும் கிழவோர்க்(கு) இல்லை | 31 |
1.32 களவினுள் தவிர்ச்சி வரைவின் நீட்டம் திங்கள் இரண்டின் அகம்என மொழிப | 32 |
1.33 களவினுள் தவிர்தல் கிழவோர்(கு) இல்லை | 33 |
1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
களவியல் என்னும் இறையனார் அகப்பொருள், Iraiyanar Akapporul, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்