இலக்கணச் சுருக்கம்

உதாரணம்.
சாத்தனை யடித்தான் என ஐயுருபு விரிந்து நிற்குமிடத்துச் செயப்படு பொருள் படுதல் போலச் சாத்தானடித்தான் என ஐயுருபு தொக்கு நிற்குமிடத்து அப்பொருள் படாமையால், இங்கே ஐ யுருபு தொக்கு நிற்கப்பெறா தென்றறிக.
சாத்தனொடு வந்தான் என ஒடுவுருபு விரிந்து நிற்குமிடத்து உடனிகழ்ச்சிப் பொருள் படுதல்போலச் சாத்தன் வந்தான் எனத் தொக்கு நிற்குமிடத்து அப்பொருள் படாமையால், இங்கே ஒடுவுருபு தொக்கு நிற்கப் பெறாதென்றறிக.
-----
-- தேர்வு
வினாக்கள்
350. வேற்றுமைத் தொகையாவது யாது?
351. தொடர்மொழியின் இடையிலன்றி, இறுதியிலுங் கெட்டு நிற்கும் உருபுகள் உளவோ?
352. வேற்றுமையுருபுகள் எவ்விடத்துந் தொகாப்பெறுமோ?
வினைத் தொகை
353. வினைத் தொகையாவது, பெயரெச்சத்தின் விகுதியுங் காலங்காட்டும் இடைநிலையுங் கெட்டு நிற்க, அதன் முதனிலையோடு பெயர்ச் சொற் றொடர்வதாம்.
உதாரணம்.
நேற்றுக் கொல் களிறு
முன் விடு கணை இறந்தகால வினைத்தொகை
இன்று கொல் களிறு
இப்பொழுது விடு கணை நிகழ்கால வினைத்தொகை
நாளைக் கொல் களிறு
பின் விடு கணை எதிர்கால வினைத்தொகை
இவை, விரியுமிடத்துக் கொன்ற, கொல்கின்ற, கொல்லும், எ-ம். விட்ட, விடுகின்ற, விடும். எ-ம். விரியும் எனக் கொள்க.
கொள்களிறு, விடுகணை என்றாற் போல் வன, முக்காலமும் பற்றி வரின், முக்காலவினைத் தொகை எனப்படும்.
வருபுனல், தருகடர், நடந்திடு குதிரை என வினைப்பகுதி விகாரப்பட்டும் வினைத் தொகை வரும்.
-----
- தேர்வு
வினாக்கள்
353. வினைத் தொகையாவது யாது?
கொல்களிறு முதலியன, முக்காலமும் பற்றி வரின், எவ்வாறு பெயர் பெறும்?
வினைப்பகுதி விகாரப்பட்டும் வினைத் தொகை வருமோ?
பண்புத் தொகை
354. பண்புத் தொகையாவது, ஆகிய என்னும் உருபு கெட்டு நிற்கப் பண்புப் பெயரோடு பண்பிப்பெயர் தொடர்வதாம்.
பண்பு, வண்ணம் ,வடிவு, அளவு, சுவை, முதலியனவாம்.
ஆகிய என்பது, பண்புக்கும், பண்பிக்கும், உளதாகிய ஒற்றுமையை விளக்குவதோரிடைச் சொல்.
(உதாரணம்)
செந்தாமரை
கருங்குதிரை வண்ணப் பண்புத்தொகை
வட்டக்கல்
சதுரப்பலகை வடிவுப் பண்புத்தொகை
ஒருபொருள்
முக்குணம் அளவுப் பண்புத்தொகை
துவர்க்காய்
இன்சொல் சுவைப் பண்புத்தொகை
இவை, விரியுமிடத்துச் செம்மையாகிய தாமரை, வட்டமாகிய கல், ஒன்றாகிய பொருள், துவர்ப்பாகிய காய் என விரியும்.
இரு பெயரொட்டுப் பண்புத் தொகையாவது, ஆகிய என்னும் பண்புருபு கெட்டு நிற்கப், பொதுப்பெயரோடு பொதுப் பெயராயினும் ஒரு பொருண்மேல் வந்து தொடர்வதாம்.
உதாரணம்.
ஆயன் சாத்தன் - பொதுப்பெயரோடு சிறப்புப் பெயர்
சாரைப்பாம்பு - சிறப்புப் பெயரோடு பொதுப்பெயர்
இவை விரியுமிடத்து, ஆயனாகிய சாத்தன், சாரையாகிய பாம்பு என விரியும். ஆயன் சாரை என்பன பண்பல்லவாயினும் பண்பு தொக்க தொகைபோல விசேடிப்பதும் விசேடிக்கப்படுவது மாகிய இயைபுபற்றி , இவை போல்வனவும் பண்புத்தொகை எனப்பட்டன.
-----
- தேர்வு வினாக்கள்
354. பண்புத் தொகையாவது யாது? பண்பென்பன எவை?
ஆகிய என்பது என்ன சொல்?
இரு பெயரொட்டுப் பண்புத் தொகையாவது யாது?
உவமைத் தொகை
355. உவமைத் தொகையாவது, போல முதலிய உவமவுருபு கெட்டு நிற்க, உவமானச் சொல்லோடு உவமேயச் சொற்றொடர்வதாம்.
இவ்வுவமை, வினை, பயன், மெய், உரு, என்பன பற்றி வரும்.
(உதாரணம்)
புலிக்கொற்றன் - வினையுவமைத் தொகை
மழைக்கை - பயகுவமைத் தொகை
துடியிடை - மெய்யுவமைத் தொகை
பவளவாய் - உருபுவமைத் தொகை
இவை விரியுமிடத்துப், புலிபோலுங் கொற்றன், மழை போலுங் கை, துடி போலு மிடை, பவளம் போலும்வாய் என விரியும்.
-----
- தேர்வு வினா
355. உவமைத்தொகையாவது யாது?
இவ்வுவமை எவை பற்றி வரும்?
உம்மைத் தொகை
356. உம்மைத் தொகையாவது, எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நால்வகையளவைகளாற் பொருள்களை அளக்குமிடத்து, எண்ணும்மை இடையிலும் இறுதியிலுங் கெட்டு நிற்கப், பெயரோடு பெயர் தொடர்வதாம்.
உதாரணம்.
இராப்பகல்
ஒன்றேகால் எண்ணலளவையும்மைத் தொகை
கழஞ்சேகால்
தொடியேகஃசு எடுத்தலளவையும்மைத் தொகை
கலனேதுணி
நாழியாழாக்கு முகத்தலளவையும்மைத் தொகை
சாணரை
சாணங்குலம் நீட்டலளவையும்மைத் தொகை
இவை விரியுமிடத்து, இராவும் பகலும், ஒன்றுங் காலும், கழஞ்சுங் காலும், காலனுந் தூணியும், சாணுமரையும் என விரியும்.
357. உயர்திணை யொருமைப்பாலில் வரும் உம்மைத் தொகைகள், ரகரமெய்யுங் கள்விகுதியுமாகிய பலர்பால் விகுதியுடையனவாய் வரும்.
உதாரணம்.
சேரசோழ பாண்டியர்
தேவன்றேவிகள்
அஃறிணையொருமைப் பாலிலும் பொதுத் திணை விகுதி பெறாதும், பெற்றம் வரும்.
உதாரணம்.
நன்மை தீமை நன்மை தீமைகள்
தந்தை தாய் தந்தை தாய்கள்
-----
-- தேர்வு வினாக்கள்
356. உம்மைத் தொகையாவது யாது?
357. உயர்திணையொருமையில் வரும் உம்மைத் தொகைகள், ஒருமை விகுதியோடு நிற்குமோ பரர்பால் விகுதி பெறுமோ?
அஃறிணை யொருமைப் பாலிலும் பொதுத்திணையொருமைப் பாலிலும் வரும் உம்மைத்தொகைகள் பன்மைவிகுதி பெற்ற வரவோ?
அன்மொழித் தொகை
358. அன்மொழித் தொiயாவது, வேற்றுமைத் தொகை முதலிய ஐந்து தொகைநிலைத் தொடருந் தத்தம் பொருள்படுமலவிற் றொகாது தத்தமக்குப் புறத்தே தாமல்லாத பிற மொழிப் பொருள் படத், தொகுவதாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 35 | 36 | 37 | 38 | 39 | ... | 45 | 46 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இலக்கணச் சுருக்கம், Ilakkana Surukkam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்