இலக்கணச் சுருக்கம்

245. அ என்னம் விகுதியை இறுதியில் உடைய
வினைச்சொல், அஃறிணைப் பலவின்பால் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினை
முற்றுமா.
இவ்விகுதி, அன்சாரியை பெற்றும், பெறாதும், வரும்
உதாரணம்.
இ. தெரி. நி. தெரி. எ. தெரி. குறி. அவை
நடந்தன
நடந்த நடக்கின்றன
நடக்கின்ற நடப்பன
நடப்ப கரியன
கரிய
ஆ என்னும் விகுதியை இறுதியில் உடைய வினைச் சொல், அஃறிணைப் பலவின்பாற் படர்க்கை, யெதிர்மறைத் தெரிநிலைவிணை முற்றாம். இவ்விகுதி குறிப்பு வினை முற்றிற்கு இல்லை.
உதாரணம்.
நடவா -- அவை
• நடப்ப என்னும் உயர்திணைப் பலர்பாற்படர்க்கைத் தெரிநிலை வினை முற்று, வேறு, நடப்ப என்னும் அஃறிணை பலவின்பாற் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றும், வேறு, முன்னையது, நட என்னும் பகுதியும், பா என்னும், எதிர்கால பரர்பற்படர்க்கை விகுதியுமாகப், பகுக்கப்பட்டு வரும். பின்னையது, நட என்னும் பகுதியும், இப்பென்னும் எதிர்காலவிடைநிலையும், ஆ என்னும் பலவின்பாற் படர்க்கை விகுதியுமாக, பகுக்கப்பட்டு வரும்.
-
தேர்வு வினா
240. படர்கை வினைமுற்று எத்தனை வகைப்படும்?
241. உயர்திணை யாண்பாலொருமை படர்க்கை விணைமுற்றுக்கள் எவை?
242. பெண்பாலொருமை படர்க்கை விணைமுற்றுக்கள் எவை?
243. உயர்திணை பலர்பாற் படர்க்கை வினைமுற்றுக்கள் எவை?
பலர்பாற் படர்க்கை தெரிநிலை வினைமுற்றுக்கு இவ்விகுதிகளின்றி வேறு விகுதிகளும் வருமோ?
244. அஃறிணையொன்றன்பாற் படர்க்கை வினைமுற்றுக்கள் எவை?
து, று, என்னும் இரு விகுதிகளும் முக்கால விடைநிலைகலோடும் வருமோ?
றுவ்விகுதி எவ்விடங்களின் எச்சாரியை பெற்று வரும்? எவ்விடத்துச் சாரியை பெறாது வரும்?
அஃறிணை யொன்றன்பாற் படர்க்கை வினைமுற்றுக்கு, து று என்னும் இரு விகுதிகளுமன்றி வேறு விகுதி இல்லையோ?
245. அஃறிணைப் பலவின் பாற் படர்க்கை வினைமுற்றுக்கள் எவை?
அஃறிணை பலவின்பாற் படர்க்கை வினைமுற்றுக்கு வேறு விகுதி இல்லையோ?
தன்மை வினைமுற்று
246. தன்மை வினைமுற்று, தம்மையொருமை, வினைமுற்றும் தன்மைப் பன்மை வினைமுற்றும் என, இரு வகைப்படும்.
---
247. என், ஏன், அன் என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச் சொற்கள், தன்மையொருமைத் தெரிநிலை வினைமுற்று குறிப்பு வினைமுற்றுமாம்.
உதாரணம்.
இ. தெரி. நி. தெரி. யான்
உண்டனென்
உண்டேன்
உண்டனன் உண்கிறனென்
உண்கிறேன்
உண்கிறனன்
எ. தெரி. குறி
உண்குவென்
உண்பேன்
உண்பன் குழையினென்
குழையினேன்
குழையினன்
செய்யுளுளிலே தன்மையொருமைத் தெரிநிலை வினைமுற்றுக்கு இவ்விகுதிகள்களன்றி, ஆல் கு, டு து று என்னும் விகுதிகளும் வழங்கும்.
இவைகளுள், ஆல் விகுதி எதிர்காலவிடைநிலைகளோடு மாத்திரம் வரும். மற்றைநான்கு விகுதிகளும் இடைநிலையின்றி தாமே காலங்காட்டுதல் பதவியளிற் பெறப்பட்டது.
(உதாரணம்)
விகு. இ.தெ. எ.தெ. யான்
அல்
கு
டு
து
று -
-
உண்டு
வந்து
சென்று உண்பல்
உண்கு
-
வருது
சேறு
---
248. அம், ஆம், எம், ஏம், ஓம் என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச் சொற்கள், தன்மைப் பன்மைத் தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினைமுற்றுமாம்.
உதாரணம்.
இ. தெரி. நி. தெரி. யாம்
உண்டனம்
உண்டாம்
உண்டெனம்
உண்டேம்
உண்டோம் உண்கின்றனம்
உண்கின்றாம்
உண்கின்றனெம்
உண்கின்றேம்
உண்கின்றோம்
எ. தெரி. குறி.
உண்பம்
உண்பாம்
உண்பெம்
உண்பேம்
உண்போம் குழையினம்
குழையினாம்
குழையினெம்
குழையினேம்
குழையினோம்
செய்யுளிலே, தன்மைப் பன்மை தெரிநிலை வினைமுற்றுக்கு, இவ் விகுதிகளின்றி, கும், டும், தும், றும் என்னும் விகுதிகளும் வழங்கும் இடைநிலையின்றித் தாமே காலங்காட்டுதல் பதவியலிற் பெறப்பட்டது.
விகு. இ. தெரி. எ. தெரி. யாம்
கும்
டும்
தும்
றும் -
உண்டும்
வந்தும்
சென்றும் உண்கும்
-
வருதும்
சேறும்
-
தேர்வு வினா
246. தன்மை வினைமுற்று எத்தனை வகைப்படும்?
247. தம்மையொருமை வினைமுற்றுக்கள் எவை? தன்மையொருமைத் தெரிநிலை வினைமுற்றுக்கு இவ்வுகுதிகளின்றி வேறு விகுதிகளும் வழங்குமோ? ஆல் விகுதி எக்கால விடைநிலைகளொடு வரும்?
248. தன்மைப் பன்மை வினைமுற்றுக்கள் எவை?
தன்மைப் பன்மை தெரிநிலை வினைமுற்றுக்கு இவ்விகுதிகளின்றி வேறு விகுதிகள் வழங்குமோ?
முன்னிலை வினைமுற்று
249. முன்னிலை வினைமுற்று முன்னிலையொருமை வினைமுற்றும் முன்னிலைப் பன்மை வினைமுற்றுமென இரு வகைப்படும்.
---
250. ஐ ஆய் இ என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச் சொற்கள் முன்னிலையொருமைத் தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினைமுற்றுமாம்.
உதாரணம்.
இ. தெரி. நி. தெரி. எ. தெரி. குறி. நீ
உண்டனை
உண்டாய்
உண்டி உண்கின்றனை
உண்கின்றாய்
உண்ணாநின்றி உண்பை
உண்பாய்
சேறி குழையினை
குழையாய்
வில்லி
இகரவிகுதி எதிர்காலத்தை இடைநிலையின்றி தானே காட்டுதல் பதவியலிற் பெறப்பட்டது.
251. இர், ஈர், என்னும் விகுதிகளை இறுதியில் உடைய விசை; சொற்கள். முன்னிலைப் பன்மை தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினைமுற்றுமாம்.
உதாரணம்.
இ. தெரி. நி. தெரி. எ. தெரி. குறி. நீர்
உண்டனிர்
உண்டீர் உண்கின்றனீர்
உண்கின்றீர் உண்பிர்
உண்பீர் குழையினிர்
குழையீர்
-
தேர்வு வினாக்கள்
249. முன்னிலை வினைமுற்று எத்தனை வகைப்படும்?
250. முன்னிலையொருமை வினைமுற்றக்கள் எவை? 251. முன்னிலை பனடமை வினைமுற்றுக்கள் எவை?
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 24 | 25 | 26 | 27 | 28 | ... | 45 | 46 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இலக்கணச் சுருக்கம், Ilakkana Surukkam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்