முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » பதிற்றுப்பத்து » 83. படைச் சிறப்பு
பதிற்றுப்பத்து - 83. படைச் சிறப்பு
துறை : தும்பை அரவம்
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : பல் தோல் தொழுதி
கார் மழை முன்பின் கை பரிந்து எழுதரும் வான் பறைக் குருகின் நெடு வரி பொற்ப, கொல் களிறு மிடைந்த பல் தோல் தொழுதியொடு நெடுந் தேர் நுடங்கு கொடி அவிர்வரப் பொலிந்து, செலவு பெரிது இனிது, நிற் காணுமோர்க்கே: |
5 |
இன்னாது அம்ம அது தானே-பல் மா நாடு கெட எருக்கி, நன் கலம் தரூஉம் நின் போர் அருங் கடுஞ் சினம் எதிர்ந்து, மாறு கொள் வேந்தர் பாசறையோர்க்கே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 81 | 82 | 83 | 84 | 85 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து, Pathirruppattu, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தோல், வண்ணம்