முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » பதிற்றுப்பத்து » 77. படைப் பெருமைச் சிறப்பு
பதிற்றுப்பத்து - 77. படைப் பெருமைச் சிறப்பு
துறை : உழிஞை அரவம்
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : வென்று ஆடு துணங்கை
'எனைப் பெரும் படையனோ, சினப் போர்ப் பொறையன்?' என்றனிர்ஆயின்-ஆறு செல் வம்பலிர்!- மன்பதை பெயர, அரசு களத்து ஒழிய, கொன்று தோள் ஓச்சிய வென்று ஆடு துணங்கை மீ பிணத்து உருண்ட தேயா ஆழியின், |
5 |
பண் அமை தேரும், மாவும், மாக்களும், எண்ணற்கு அருமையின் எண்ணின்றோ இலனே; கந்து கோளீயாது, காழ் பல முருக்கி, உகக்கும் பருந்தின் நிலத்து நிழல் சாடி, சேண் பரல் முரம்பின் ஈர்ம் படைக் கொங்கர் |
10 |
ஆ பரந்தன்ன செலவின், பல் யானை காண்பல், அவன் தானையானே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 75 | 76 | 77 | 78 | 79 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து, Pathirruppattu, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - துணங்கை, வென்று, வண்ணம்