நற்றிணை - 268. குறிஞ்சி

சூருடை நனந் தலைச் சுனை நீர் மல்க, மால் பெயல் தலைஇய மன் நெடுங் குன்றத்து, கருங் காற் குறிஞ்சி மதன் இல் வான் பூ, ஓவுக் கண்டன்ன இல்வரை இழைத்த நாறு கொள் பிரசம் ஊறு நாடற்குக் |
5 |
காதல் செய்தவும் காதலன்மை யாதனிற்கொல்லோ?- தோழி!- வினவுகம், பெய்ம் மணல் முற்றம் கடி கொண்டு மெய்ம் மலி கழங்கின் வேலற் தந்தே. |
தோழீ! மணலைப் பரப்பிய முற்றத்தைச் சிறப்புச் செய்து; மெய்ம்மையைக் கூறுகின்ற கழங்கிட்டுக் குறிபார்த்தலையுடைய படிமத்தானை அன்னை வீட்டில் அழைத்து வந்திருத்தலானே; அச்சஞ் செய்தலையுடைய இடமகன்ற சுனையில் நீர் நிறையும்படியாக; மேகம் மழை பெய்துவிட்ட மிக்க நெடிய குன்றத்தின்கண்ணே; கரிய காம்பையுடைய குறிஞ்சியின் வன்மையில்லாத மெல்லிய வெளிய பூ; ஓவியன் மலையிடத்தே சித்திரித்தாற்போன்ற வேட்டுவர் இல்லங்களிலே இழைக்கப்பட்ட தேனடைக்கு வேண்டிய அளவு மணங்கொண்ட தேனூறுகின்ற நாட்டையுடைய தலைவனுக்கு; யாம் பலபடியாகக் காதலுண்டாக்கியிருந்தும் அவனாலே காதலிக்கப்படுந் தன்மையே மல்லாதிருத்தல் எக்காரணத்தினாலோ? இவ்வொரு காரியத்தை அந்த வேலன்பாற் கேட்போமாக;
தலைமகட்குச் சொல்லியது; தலைமகன் வந்தொழுகவும் வேறுபாடு கண்டாள், 'அவன் வருவானாகவும் நீ வேறுபட்டாய், வெறி எடுத்துக் கொள்ளும் வகையான்' என்றதூஉம் ஆம். - வெறி பாடிய காமக்கண்ணியார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 266 | 267 | 268 | 269 | 270 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - வெறி, நீர், குறிஞ்சி