நற்றிணை - 269. பாலை

குரும்பை மணிப் பூண் பெருஞ் செங் கிண்கிணிப் பால் ஆர் துவர் வாய்ப் பைம் பூட் புதல்வன், மாலைக் கட்டில், மார்பு ஊர்பு இழிய, அவ் எயிறு ஒழுகிய அவ் வாய் மாண் நகைச் செயிர் தீர் கொள்கை நம் உயிர் வெங் காதலி |
5 |
திருமுகத்து அலமரும் கண் இணைந்து அல்கலும், பெரும! வள்ளியின் பிணிக்கும் என்னார், சிறு பல் குன்றம் இறப்போர்; அறிவார் யார், அவர் முன்னியவ்வே? |
குரும்பை போன்ற மணியையுடைய பூணாகிய பெரிய செவ்விய கிண்கிணியையும்; பாலுண்ணுஞ் சிவந்த வாயையும் மற்றும் பல பசிய கலன்களையுமுடைய புதல்வன்; மாலையணிதலையுடைய இன்பத்திற்குக் காரணமாகிய மார்பிலூர்ந்து இறங்குதலால்; அழகிய எயிற்றினின்றொழுகிய விருப்பமுற்ற மாட்சிமைப்பட்ட நகையையும் குற்றமற்ற கோட்பாட்டினையுமுடைய நம்முயிர் போன்ற விருப்பமிக்க காதலியினது; அழகிய முகத்திலே உலாவுகின்ற கண்கள் துன்பமெய்தி நாள்தோறும் பெரிய மரத்தைச் சுற்றிய வள்ளிக்கொடியைப் போல நம்மைப் பிணிக்குமே என்று கருதாராய், சிறு பல் குன்றம் இறப்போர் எப்பொழுதும் சிறிய பலவாய குன்றங்கடந்து சுரஞ்செல்வாராயினர், அத்தகையார் பின்பு எதனைத்தான் செய்யார்? பரத்தையிற் பிரிந்து செல்லுதலோ அவர்க்கு அரியது, அஃதியல்புதானே; இன்னும் அவர் கருதி உள்ளவை யாவர்தாம் அறியவல்லார்?
தோழி வாயில் மறுத்தது; செலவு அழுங்குவித்ததூஉம் ஆம். - எயினந்தை மகன் இளங்கீரனார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 267 | 268 | 269 | 270 | 271 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - போன்ற, பெரிய, அழகிய, அவர், இறப்போர், புதல்வன், சிறு, குன்றம், குரும்பை