நற்றிணை - 173. குறிஞ்சி

சுனைப் பூக் குற்றும், தொடலை தைஇயும், மலைச் செங் காந்தட் கண்ணி தந்தும், தன் வழிப் படூஉம் நம் நயந்தருளி, வெறி என உணர்ந்த அரிய அன்னையை, கண்ணினும் கனவினும் காட்டி, 'இந் நோய் |
5 |
என்னினும் வாராது; மணியின் தோன்றும் அம் மலை கிழவோன் செய்தனன் இது' எனின், படு வண்டு ஆர்க்கும் பைந் தார் மார்பின் நெடு வேட்கு ஏதம் உடைத்தோ?- தொடியோய்! கூறுமதி, வினவுவல் யானே. |
10 |
தொடியினையுடையாய் யான் நின்னையொரு செயலை வினவுகின்றேன்; அதுதான் யாதெனிலோ?; கேள்! சுனையின்கணுள்ள மலர் கொய்தும் அவற்றை மாலையாகத் தொடுத்தும் மலையிலுள்ள செங்காந்தள் மலர்கொய்து அம்முருகவேள் போர்க்குச் சூடும் கண்ணியாக அமைத்தும் சார்த்தி; அவனை வழிபாடுசெய்கின்ற நம்மை ஆதரஞ் செய்யுமாறு விரும்பியருளி¢; நாம் இப்பொழுது கொண்டிருக்கிற காமநோய் 'முருகு அணங்கியது காரணமாக வந்த இவள் மேனியின் வேறுபாடுதான் வெறியயர்ந்தால் நீங்கும்' என மாறாக நினைந்துடைய அம் மாறுபாடு எவ்வழியினாலும் நீங்கரிய நம் அன்னைக்கு; கண்ணாலே குறிப்பாகக் காட்டுவதனோடு உறங்கும்பொழுது அவளது கனவின்கண்ணும் வந்து தோன்றித் தன்வடிவு புலப்படக்காட்டி; இக் காமநோய் என்னாலும் வேறுபிற அணங்குகளாலும் எய்தியதொன்றன்றுகண்டாய்; வேறு யாவன் இதனைத் தோற்றுவித்தனன்கொல் என வினவின் 'நோக்குவோர்க்கு நீலமணி போலத் தோன்றாநிற்கும் அழகிய மலையையுடைய ஒருதோன்றலே இதனைச் செய்தனன்' என்று கூறுவானெனின்; அதனாலே பொருந்திய வண்டுக ளாரவாரிக்கும் பசிய மாலையையணிந்த மார்பையுடைய அந் நெடிய முருகவேளுக்கு ஒரு குற்றமுமுண்டாகுமோ?; அதனை ஆராய்ந்து கூறிக்காண்;
தோழி தலைவிக்கு உரைப்பாளாய், சிறைப்புறமாகச் சொல்லியது; வெறி அச்சுறீஇத் தோழி அறத்தொடு நிலை பயப்பித்ததூஉம் ஆம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 171 | 172 | 173 | 174 | 175 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தோழி, காமநோய், செய்தனன், வெறி