விருதுநகர் - தமிழக மாவட்டங்கள்
மல்லி :
ஆண்டாள் பிறந்த ஊராகும். இதற்கு 'மல்லி நாடாண்ட மடமயில்' 'மருவாரும் திருமல்லி வளநாடு' எனும் சொற்றொடர்களும் சான்றாகின்றன. விழுப்பனுர் என்னுமிடத்தில் பெருமாள்கோவில் எழுப்பப்பட்டுள்ளது.
மம்சாபுரம் :
சந்தாசாகிப் நினைவாக 'மகமது சாஹிப்புரம்' என்ற பெயரால் ஏற்பட்ட ஊர் மம்சாபுரம் என வழங்குகிறது. வில்லிப்புத்தூரிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.
இராஜபாளையம் :
இராஜபாளையம் நாய்கள் |
இராஜபாளையத்தில தெலுங்கு, தமிழ் இரு புத்தாண்டுகளும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. தமிழ்நாட்டின் தலைச்சிறந்த பஞ்சு வணிகக் கேந்திரமாக இராஜ பாளையம் திகழ்கிறது. கரிசல் மண் பூமியாதலால் உயர்ரகப் பருத்தியான உகாண்டா பருத்தி இங்கு மிகுதியாக விளைகிறது. பருத்தியிலிருந்து கொட்டையை நீக்கி பஞ்சைப் பிரிக்கும் தொழிற்சாலைகள் பல இங்கு உள்ளன. நூலாலைகள், நெசவாலைகள் பலவும் இயங்கி வருகின்றன. மேலும் துத்தநாகத் தகடு தொழிற்சாலை, அநேக சாயத்தொழிற்சாலைகள், கலப்பை செய்யும் நிறுவனங்கள் ஆகியவை இயங்கி வருகின்றன. ஏராளமான மரவாடிகளும் உள்ளன. வியாழக்கிழமைகளில் பெரிய சந்தை கூடுகிறது. இராஜபாளையம் நாய், ஒரு காலத்தில் இந்தியாவில் புகழ் பெற்று விளங்கியது.
இராஜபாளையத்திற்கு மேற்கே 13 கி.மீ தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையில் அய்யனார் அருவி என்ற இடம் மலையேறவும், பொழுது போக்கவும், வேட்டையாடவும் சிறந்த இடமாகும். இதன் உயரம் 5000 அடியாகும். நகரின் கிழக்கு எல்லையில் மூலிகைகள் நிறைந்த சஞ்சீவி மலை உள்ளது. மலை மீது அழகிய முருகன் கோவில் அமைந்துள்ளது. நெல்லும், கரும்பும், வேர்க்கடலையும் இங்கு மிகுதியாகப் பயிரிடப்படுகின்றன. டன் கணக்கில் வெல்லம் காய்ச்சி வட இந்தியாவிற்கு அனுப்புகின்றனர். மாந்தோப்பு, தென்னந்தோப்பு, வாழைத் தோட்டங்களும் அதிகம். உளுந்து. பாசிப்யிறு, தட்டைப்பயிறு முதலியனவும் மிகுதியாக விளைவிக்கப்படுகின்றன. ஆவணி, புரட்டாசி மாதங்களில் பேரிக்காய், கொவ்வைப்பழம் மிகுதியாக கிடைக்கின்றன. சித்திரை, வைகாசி மாதங்களில் பலாப்பழங்களும் பலசாதி மாம்பழங்களும் கிடைக்கின்றன. தக்காளிப் பழங்களைப் பானையில் போட்டு பல ஊர்களுக்கும் அனுப்புகின்றனர். பழைய சென்னை மாநில முதலமைச்சராக இருந்த பி.எஸ்.குமாரசாமி ராஜா இவ்வூரைச் சேர்ந்தவர்.
திருவில்லிப்புத்தூர் :
திருவில்லிப்புத்தூர் |
இங்கு 1926இல் இரயில்பாதை போடப்பட்டது. கைத்தறித் தொழிலின் வளர்ச்சி இங்குச் சிறப்புற்றிருக்கிறது. பித்தளைப் பாத்திரத்தொழிலும், சமக்காளம், வேட்டி, சட்டைத் துணி நெசவும் பெரிய அளவில் நடைபெறுகின்றன. கூட்டுறவு நூல் ஆலை ஒன்றுள்ளது. பருத்தி ஆராய்ச்சி நிறுவனமும், வேளாண்மைப் பண்ணைகளும் உள்ளன. நெல் அரைக்கும் ஆலைகள் நிறைய உள்ளன. சத்திரங்களும் அதிகம். வெயில் மழையைத் தாங்கக் கூடிய தாழங்குடைகள் இங்கு மிகுதியாக செய்யப்படுகின்றன. பால்கோவா அதிகமான அளவில் செய்யப்பட்டு விற்பனையாகிறது.
கத்தோலிக்க சமயத்தின் பெல்ஜிய கன்னிமார் நடத்தும் கல்வி நிலையங்களும், இலங்கை பெந்தகோஸ் கிறிஸ்துவர் கட்டியுள்ள புராட்டஸ்டன்டு தேவாலயமும் இவ்வூரில் உள்ளன. திருமலை நாயக்கர் தெற்கு ரதவீதியில் சிறிய மாளிகை ஒன்றையும், யானைக்கால் மண்டபத்தையும் திருவில்லிபுத்தூரில் கட்டினார். தற்போது இவற்றில் அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட அய்யங்கார் வீடுகள் இவ்வூரிலுள்ளன. மக்கள் தொகையும் அதிகம். நகரம் கடல் மட்டத்தை விட 453 அடி உயரத்தில இருக்கிறது. அதைவிட 67 அடி உயரமான செண்பகத் தோப்பு எனுமிடத்தில் ஓடும் பேயனாற்றின் நீர், ஊற்று மூலம் இந்நகருக்கு குடிதண்ணீர் தேவையை நிறைவு செய்கிறது. பல குளங்களும் சூழ இருப்பதால் வேளாண்மை
செழித்துள்ளது.
முக்கனி மரங்கள், கழுகு மரங்கள் அடர்ந்த செண்பகத் தோப்பும், நீர்வளம் நிறைந்த வழுக்குப்பாறையும் முதலியார் ஊற்றும் காணத்தக்க இடங்களாகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விருதுநகர் - Virudhunagar - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - இங்கு, விருதுநகர், இராஜபாளையம், அதிகம், மாவட்டங்கள், தமிழக, மிகுதியாக, tamilnadu, வருகின்றன, இயங்கி, நிறைந்த, திருவில்லிப்புத்தூர், பெரிய, தமிழ்நாட்டுத், தகவல்கள், கோவில், செண்பகத், | , அளவில், மரங்கள், அமைந்துள்ளது, வாழ்ந்த, சிறப்பும், கிடைக்கின்றன, மாதங்களில், ஓடும், அனுப்புகின்றனர், தொடர்ச்சி, ராஜூக்கள், மம்சாபுரம், தொலைவில், மல்லி, information, virudhunagar, districts, உள்ளது, தமிழ்நாட்டின், பெயர், பருத்தி, தெலுங்கு, மக்கள், திகழ்கிறது, இயற்கைச், மேற்கு