விருதுநகர் - தமிழக மாவட்டங்கள்
அத்தியூத்து :
காட்டுவளம், இயற்கை எழில், நீர்வளம் கொண்ட இவ்வூர் வற்றாயிருப்பிலிருந்து 3கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு முகமதிய துறவி ஒருவரின் தர்கா உள்ளது. அதனருகில் ஏழு மரங்கள் உள்ளன. இவை பட்டுப் போவதே இல்லை.
குருவிப்பாறை :
மலை மீது அமைந்துள் இவ்வூரில் பளிஞர் என்ற மலைச் சாதியினர் மிகுதியா வாழ்கின்றனர். இப்பகுதியில் யானை நடமாட்டம் அதிகம். நீட்டிக் கொண்டிருக்கும் ஒரு பாறைப் பகுதியின் கீழ் சுமார் 150 பேர் தங்குவதற்குரிய இடவசதி உள்ளது. இப்பாறைக்கு சற்று அருகில் உள்ள சிறிய அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டுகிறது.
கூமாப்பட்டி :
முஸ்லீம்கள் மிகுதியாக வாழும் இவ்வூரில் பெரிய கண்மாய் ஒன்றுள்ளது. மலைவடி வாரத்திற்கு நெருக்கமாக உள்ளதால் நீர்வளம் செழிப்பாக உள்ளது. மலைமீது காப்பியும் ஏலக்காயும் பயிரிடப் படுகின்றன. இவ்வூரருகே உள்ள பேச்சிக்கேணி பக்கம் யானைகளும், புலிகளும் காணப்படுகின்றன.
மூவரை வென்றான் :
இங்கு வாழைத் தோட்டங்கள் அதிகமாக உள்ளன. இவ்வூர் அய்யனார் வற்றாயிருப்பு வாழ் மக்களின் கண்கண்ட தெய்வமாகப் போற்றப் படுகிறது. இவ்வூர் அரசர் மூவரை வென்ற ஒருவனால் சிறப்புறுகிறது என்பர். மூவறையன் என்ற சிற்றரசனை வற்றா யிருப்பு மக்கள் சூழ்ச்சியால் வென்றனர் என்றும் வரலாறு கூறுகிறது. இவ்வூருக்கு சற்றுத் தள்ளி உள்ள 400 அடி உயர மலையை மொட்டை மலை என்பர். இம்மலையில் சுனையும் குகைக் கோவிலும் உள்ளன. நந்தியின் வாய் வழியாக நீர் கொட்டுகிறது.
சதுரகிரி :
மேற்கு தொடர்ச்சி மலைமீது அமைந்த பெயர் பெற்ற தலமாகும். சிதறிய கிரி என்பதே சதுரகிரி என வழங்கப்படுகிறது என்பர். வற்றாயிருப்பிலிருந்து 8கி.மீ தொலைவில் தாணிப்பாறை உள்ளது. அங்கிருந்து மலைமீது ஒற்றையடிப் பாதை வழியே சுமார் 10கி.மீ நடந்துச் சென்று சதுரகிரியை அடைய வேண்டும். வழியில் வழுக்குப் பாறை மிகுந்துள்ளதால் இப்பயணம் சற்று வருத்தும் திறத்தது. இம்மலையில் ஜோதிவிருட்சம் என்னும் ஒளிகாட்டும் மரம் உள்ளது. ஏராளமான மூலிகைகள் நிறைந்தது. பல குன்றுகளும் குளங்களும் காணப்படுகின்றன. சோலைகள் தோப்புகள் சூழ்ந்து இயற்கை எழில் நிறைந்து காணப்படுகின்றது. சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்கும் இடமாக திகழ்கிறது.
சிறுமலை :
ஒரு சிறிய குன்றின் மீது இவ்வூர் உள்ளது. ஊரின் ஒரு பகுதி கிறிஸ்தியன் பேட்டை ஆகும். கத்தோலிக்கம் முதலில் பரவிய இடங்களுள் ஒன்றான இவ்வூரில் கிறிஸ்துவப் பெரியார் ஒருவரின் கல்லறை உள்ளது. இது 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ஆண்டுதோறும் மே மாதம் இங்கு திருவிழா கொண்டாடப்படுகிறது.
மகாராஜபுரம் :
இந்திய விடுதலை வரலாற்றில் இவ்வூருக்கு சிறப்பான தனியிடம் உண்டு. சில காலம் இங்கு காந்தி ஆசிரமம் நடைபெற்றது. இங்கு கம்மவர்களால் கட்டப்பெற்ற எல்லையம்மன் கோவில் உள்ளது.
முதலியார் ஊற்று :
பொழுது போக்கவும், வேட்டையாடவும் வெள்ளையர் இவ்வூருக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர். மலைப்பகுதியில் உள்ள இவ்வூர் அழகர் கோவிலிலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. இவ்வூரிலிருந்து சின்னமனுர், தேனி முதலியவற்றின் எழில் மிகுத் தோற்றத்தைக் கண்டு இன்புறலாம்.
ஆலங்குளம் :
கீழராஜகுலராமனிலிருந்து இவ்வூர் 6 கி.மீ தொலைவில் உள்ளது. இவ்வூரைச் சுற்றியுள்ள கரிசல் பூமியில் பருத்தி சிறப்பாக விளைகிறது. சுண்ணாம்புப் படிவங்கள் மிகுந்த பகுதியாதலால், அரசினரின் சிமெண்டு தொழிற்சாலை நிறுவப்பட்டிருக்கிறது.
இராமச்சந்திரபுரம் :
சென்னங்குளம் இதன் மற்றொரு பெயர். இந்திய விடுதலைப் போராட்டங்களில் பங்கு பெற்ற ஊர். உகாண்டா பருத்தி இங்கு அதிகமாய் விளையும் வேளாண் பயிராகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விருதுநகர் - Virudhunagar - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - உள்ளது, இங்கு, இவ்வூர், உள்ள, விருதுநகர், மாவட்டங்கள், தொலைவில், தமிழக, tamilnadu, இவ்வூரில், இவ்வூருக்கு, மலைமீது, எழில், தமிழ்நாட்டுத், என்பர், தகவல்கள், காணப்படுகின்றன, மூவரை, சதுரகிரி, இந்திய, பருத்தி, பெற்ற, பெயர், | , இம்மலையில், மீது, இயற்கை, information, districts, virudhunagar, நீர்வளம், வற்றாயிருப்பிலிருந்து, சிறிய, சற்று, சுமார், ஒருவரின், கொட்டுகிறது