விருதுநகர் - தமிழக மாவட்டங்கள்
சுகாதாரம் :
அரசு மருத்துவமனைகள்-8, ஆரம்ப சுகாதார மையங்கள்-36
வங்கிகள் : 160
காவல் நிலையங்கள் : 43 (காவலர்கள்-1504)
தபால் நிலையங்கள் : 286
தொலைபேசிகள் : 23,924
திரையரங்குகள் : 80
பதிவுப்பெற்ற வாகனங்கள் : 34,570
சாலை நீளம் : 2,457கி.மீ
நியாயவிலைக் கடைகள் : 576
வழிபாட்டுத் தலங்கள் :
திருவில்லிப்புத்தூரிலுள்ள ஆண்டாள் ஆலயம், திருச்சுழியிலுள்ள ரமண மகரிஷி பிறந்த இடம், இருக்கன்குடியிலுள்ள மாரியம்மன் ஆலயம், இராஜபாளையத்திலுள்ள ஐயனார் கோவில் ஆகியன இம்மாவட்டத்தின் முக்கிய வழிபாட்டுத் தலங்களாகும். ஆண்டாள் ஆலயத் தேர்த்திருவிழாவும், மாரியம்மன் கோவில் திருவிழாவும் முக்கியத் திருவிழா க்களாகும்.
மாரியம்மன் கோவில் :
இது விருது நகரில் உள்ளது. விருது நகர் மக்காளலும் சுற்றுவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சிற்றுர்களில் உள்ளவர்களாலும் பெரிதும் போற்றப்படும் கோவிலாகும். பங்குனியில் 21 நாள் விழா நடைபெறுகிறது தேர்த்திருவிழாவிற்கு முதல் நாள் தீச்சட்டி விழா நடைபெறுகிறது.
சிவகாசி கோவில்கள் :
சிவன் கோவில் திருவிழா வைகாசி ரோகணியில் நடைபெறும். பங்குனியில் மாரியம்மன் கோவில் திருவிழாவும், சித்ரா பெளர்ணமி அன்று பத்ரகாளியம்மன் விழாவும், சித்திரை விழாவையொட்டி பொருட்காட்சியும் நடைபெறும். சுப்ரமணியர் கோவிலின் தைப் பெருவிழா ஒன்பது நாள் உற்சவம் நடத்திக் கொண்டாடப்படுகிறது.
சாத்தூர் கோவில்கள் :
சாத்தூரின் கிழக்கிலுள்ள சாத்தூரப்பன் கோவில், சிவகாமசுந்தரி -சிதம்பரேஸ்வரர் கோவில், வைப்பாற்றின் கரையில் நாயக்க மன்னர் காலத்தில் கட்டப்பட்ட வெங்கடா சலபதி பெருமாள் கோவில் முதலியன சிறப்புமிக்க கோவில்களாகும்.
வேணுகோபால்சாமி கோவில் :
அருப்புக்கோட்டை வட்டத்தில் உள்ள பாளையப்பட்டியில் இக்கோவில் இருக்கிறது. வைகாசியில் திருவிழா நடைபெறுகிறது. இவ்விழாவின் போது இங்கு மாட்டுத் தாவணிச் சந்தை கூடுகிறது.
வரதராசப் பெருமாள் கோவில் :
புதுப்பட்டிக் கிராமத்தில் 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோவில் புகழ்பெற்ற வைணவக் கோவிலாகும்.
திருமேனிநாதர் ஆலயம் :
திருமேனிநாதர் ஆலயம் |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விருதுநகர் - Virudhunagar - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - கோவில், ஆலயம், மாரியம்மன், tamilnadu, மாவட்டங்கள், இக்கோவில், தமிழக, விருதுநகர், நடைபெறுகிறது, விழா, நாள், பங்குனியில், திருவிழா, தகவல்கள், தமிழ்நாட்டுத், கட்டப்பட்ட, காலத்தில், பெருமாள், உள்ள, | , ஆகிய, திருமேனிநாதர், virudhunagar, நடைபெறும், districts, நிலையங்கள், திருவிழாவும், வழிபாட்டுத், விருது, உள்ளது, ஆண்டாள், information, கோவிலாகும், கோவில்கள்