விருதுநகர் - தமிழக மாவட்டங்கள்
காட்டன் பிரசிங் பாக்டரி :
இத்கைய தொழிற்சாலைகள் மிக பல உள்ளன. இங்கே கழிவுப் பஞ்சு, கோணிச்சாக்குகளிலுள்ள கழிவுப் பொருட்கள், சென்னா இலைகள் ஆகியவற்றை பேல் ஆக்கி ஏற்றுமதி செய்வர்.
சிறுநூல் ஆலைகள் :
காடாத்துணி, ஜமக்காளம் முதலியவற்றை உற்பத்தி செய்யப் பயன்படும் மிகக் குறைந்த எண் நூல்களைத் தயாரிக்கும் சிறு நூல் ஆலைகள் பலவும் உள்ளன.
மதராஸ் சிமெண்ட்ஸ் :
இம்மாவட்டத்தில் ஏற்பட்ட முதல் சிமெண்ட் ஆலை இதுவேயாகும். இதன் அலுவலகம் இராஜபாளையத்திலும், தொழிற்சாலை சாத்தூருக்கு அருகேயுள்ள துலுக்கப்பட்டியிலும் உள்ளன. இங்கு 1961 இல் உற்பத்தி தொடங்கிற்று. ஒருநாள் உற்பத்தி 1000 டன்னுக்கும் மேலாகும். தமிழக அரசு இதில் பங்குகள் வைத்துள்ளது.
தமிழ்நாடு சிமெண்ட்ஸ் :
ஆலங்குளம் எனும் ஊரில், ஏழு கோடி ரூபாய் மூலதனத்தில் 1970 முதல் தமிழ்நாடு சிமெண்ட்ஸ் என்ற பெயரில் சிமெண்ட் தொழிற்சாலையை அரசு நடத்தி வருகிறது. இந்த ஆலைக்காக 16 கி.மீ தொலைவுக்கு இரயில்பாதை போடப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் இந்த ஆலைக்குப் பொருளாதார வசதி ஏற்படுத்தித் தந்துள்ளது. "போர்ட்லேண்டு கிரே" சிமெண்டும், மற்றும் சிமெண்டு குழாய்களும் தயாரிக்கப்படுகின்றன.
ஜெனரல் பர்ப்பஸ் என்ஜினீரிங் ஒர்க்ஷாப் :
தமிழக அரசு இத்தொழிற் கூடத்தைப் பல ஆண்டுகளாக இராஜபாளையத்தில் நடத்தி வருகிறது. இதில் சைக்கிள் சாமான்கள், டியூப் லைட் ஷேடுகள், வேளாண் கருவிகள், மேசை, நாற்காலிகள், மருத்துவத் தளவாடங்கள் முதலியன உற்பத்தியாகின்றன.
தீப்பெட்டித் தொழில் :
தீப்பெட்டி உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் வகிப்பது விருதுநகர் மாவட்டமாகும். சின்ன ஜப்பான் எனப்படும் சிவகாசியே தீப்பெட்டித் தொழிலின் தலைநகரமாகும். சாத்தூரிலும் வேறு பல இடங்களிலும் இத்தொழில் பரவியுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீப்பெட்டித் தொழிற்சாலைகள் உள்ளன. பெரிய தொழிற்சாலைகள் நூற்றுக்கும் அதிகமாகும். பல்லாயிரம் பெண்களும், சிறுவர் சிறுமியரும் வீட்டிலிருந்தே வருவாய் பெற இத்தொழில் உதவுகிறது. சட்டங்களில் தீககுச்சிகளை அடுக்குதலும், தீப்பெட்டிக்கான மேல்பெட்டி, அடிப்பெட்டி இவைகளை ஒட்டுவதும், ஒழுங்குபடுத்தும் முறையில் கட்டைத் தட்டுதலும், தீ அடுப்பில் மெழுகு முக்குதலும், மருந்து தடவுதலும், மருந்து தடவிய கட்டைகளை உலர வைத்தலும், குச்சிகளைப் பெட்டியில் அடைத்தலும், பெட்டிகளை உலர வைத்தலும், பண்ட்ரோல் ஒட்டுதலும், லேபிள் ஒட்டுதலும் பெட்டிகளை டஜனாக பேக் செய்தலும், பின் குரோஸாக பேக் செய்து கட்டாக கட்டுதலும் தீப்பெட்டித் தொழிலின் பல பிரிவுகளாகும். இவை சிறுவர்களும் தாய்மார்களும் வீதிகளில் வீடுகளில் அன்றாடம் மேற்கொள்ளும் பணிகளாகும்.
மெட்ராஸ் சிப் போர்டு பாக்டரி :
இராஜபாளையத்தில் நடைபெறுகிற இத்தொழிற்சாலை செக்கோஸ்லோ வாக்கியா தொழில் கூட்டுறவோடு செயல்படுகிறது. மரத்தூள் களிலிருந்து பலகைகள், தள்ளு கதவுகள், உத்தரப் பலகை, மேசையின் மேற்பகுதிகள் தயாரிக்கப்படுகின்றன.
பாரத் இன்சுலேசன் டேப் கம்பெனி :
பிளாக் அட்ஹெசிவ் மற்றும் குறைந்த மின் அழுத்த இன்சுலேசன் டேப்புகள் இங்குத் தயாரிக்கப்படுகின்றன.
நிப் தொழிற்சாலை :
சாத்தூரில் பவுண்டன் பேனாவுக்குப் பயன்படும் நிப் செய்யும் தொழிற்சாலைகள் ஐம்பதுக்கும் மேற்பட்டவை உள்ளன. 1948 இல் நிப் தயாரிப்பு குடிசைத் தொழிலாக ஆரம்பிக்கப்பட்டு இன்று நவீன இயந்திரங்களால் தயாரிக்கப்படுகினற்ன. இத்தொழில் சாத்தூர் சிறப்பிடத்தைப் பெற்றுள்ளது.
பட்டாசுத் தொழில் :
தீப்பெட்டித் தொழிலைப் போலவே, பட்டாசுத் தொழிலும் இம்மாவட்டத்தில் சிறப்படைந்துள்ளது. சிவகாசியில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டாசுத் தொழிற்சாலைகள் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பை நல்கியுள்ளன. சிவகாசி பட்டாசு இந்தியாவெங்கும் விற்பனையாகிறது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. இதன் மூலம் அரசுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைக்கிறது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விருதுநகர் - Virudhunagar - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தமிழக, தீப்பெட்டித், விருதுநகர், தொழிற்சாலைகள், தொழில், tamilnadu, மாவட்டங்கள், உற்பத்தி, இத்தொழில், தமிழ்நாடு, சிமெண்ட்ஸ், தகவல்கள், பட்டாசுத், நிப், அரசு, தமிழ்நாட்டுத், தயாரிக்கப்படுகின்றன, தொழிலின், மேற்பட்ட, பெட்டிகளை, பேக், இன்சுலேசன், | , ஒட்டுதலும், இராஜபாளையத்தில், வருவாய், மருந்து, வைத்தலும், நூற்றுக்கும், இதில், கழிவுப், ஆலைகள், பாக்டரி, information, virudhunagar, districts, பயன்படும், குறைந்த, ரூபாய், நடத்தி, தொழிற்சாலை, இதன், இம்மாவட்டத்தில், சிமெண்ட், வருகிறது