விருதுநகர் - தமிழக மாவட்டங்கள்
ஆமத்தூர் :
இவ்வூரில் துவரை, உளுந்து, மொச்சை ஆகியன பயிரிடப்படுகின்றன.
கன்னிச்சேரி :
இவ்வூரில் ஆனி மாதம் முழுதும் மாட்டுச் சந்தை நடைபெறுகிறது.
சேடப்பட்டி :
கைத்தறி நெசவாளர்கள் அதிகமாக வாழும் ஊர்.
பவானி :
விருதுநகருக்கு வடமேற்கே உள்ள இச்சிற்றுரில் பழத் தோட்டங்கள் ஏராளமாக உள்ளன.
துலுக்கப்பட்டி :
விருதுநகருக்குத் தெற்கே 15 கி.மீ தொலைவில் திருநெல்வேலிச் சாலையில் இவ்வூர் உள்ளது. இதனருகே உள்ள எட்டூர் பகுதிகளில் சுண்ணாம்புக்கல் கிடைப்பதால் இங்கு பெரிய சிமெண்டு ஆலை நடைபெறுகிறது.
மருளுத்து :
செழிப்பான ஊர். நெல், வாழை, காய்கறிகளுக்குப் பெயர் பெற்ற சிற்றுர்.
வடமலைக்குறிச்சி :
இவ்வூரில் பயிர்தொழில், சாலைகள், பள்ளி, மருத்துவ நிலையம் ஆகிய பலவும் ஸ்காட்லாந்து நாட்டு மக்களின் உதவியுடன் சிறப்படைந்து வருகின்றன.
சூலக்கரை :
சாத்தூர்-சிவகாசி சாலைகளுக்கு இடையில் இத்தொழில் நகரம் அமைந்துள்ளது. விருதுநகர் டெக்ஸ்டைல்ஸ் நெசவு ஆலையும், விருதுநகர் எஃகுக் கம்பித் தொழிற் சாலையும், பெரியதொரு தொழிற்பேட்டையும் இங்குச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
சங்கரலிங்கபுரம் :
இங்கே தேவாங்கச்ச செட்டியார்கள் மிகுதியாக வாழ்கின்றனர். இவர்களால் நெசவுத் தொழில் சிறப்புற்றுத் திகழ்கிறது. சாத்துக்குடி அளவிலான வெங்காயம் இங்கு விளைவிக்கப்படுகிறது. கோடையில் தினையும் அவுரிச் செடியும் பயிரிடப்படுகின்றன. உரம் தயாரிக்கவும், வர்ணம் தயாரிக்கவும் உதவும் இந்த அவுரிச் செடிகளை வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர்.
புகழ்பெற்றோர் :
பி.எஸ்.குமாரசாமிராஜா :
1898-இல் இவர் இராஜபாளையத்தில் பிறந்தார். அன்னிபெசன்ட் அம்மையாரின் ஹோம் ரூல் இயக்கம், பிரம்ம ஞானசபை ஆகியவற்றில் பங்காற்றி சிறை சென்றார். 1948 முதல் 1952 வரை சென்னை மாநில முதல்வராக பணியாற்றினார். பிறகு நான்காண்டுகள் ஒரிசா மாநில ஆளுநராக பதவி வகித்தார்.
காமராசர் |
விருதுநகரில் 1903 இல் காமராசர் பிறந்தார். 1930-இல் இராஜாஜியுடன் உப்பு சத்தயாகிரகத்தில கலந்து கொண்டு இரண்டு ஆண்டுகள் சிறைதண்டனை பெற்றார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரானார். 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் பங்கேற்றதால் மூன்றாண்டு காலம் சிறையில் இருந்தார். 1954 இல் தமிழ்நாட்டின் முதல்வரானார். 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 2-இல் காமராசர் மறைந்தார். அவரது தொண்டுள்ளத்தைப் பாராட்டி இந்திய அரசு 'பாரத ரத்னா' விருது வழங்கி கெளரவித்தது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விருதுநகர் - Virudhunagar - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - விருதுநகர், காமராசர், tamilnadu, மாவட்டங்கள், தமிழக, இவ்வூரில், தகவல்கள், தமிழ்நாட்டுத், தயாரிக்கவும், அவுரிச், பிறந்தார், | , வருகின்றன, மாநில, பயிரிடப்படுகின்றன, districts, virudhunagar, information, நடைபெறுகிறது, உள்ள, இங்கு