விருதுநகர் - தமிழக மாவட்டங்கள்
அச்சுத்தொழில் :
சிவகாசியில் திரும்பிய இடமெல்லாம் அச்சகங்கள் இருக்கின்றன. லித்தோ, ஆப்செட், லேமினேசன் என்று ஆயிரக்கணக்கில் அச்சு சம்பந்தப்பட்ட தொழில்கள் சிவகாசியில் நடைபெறுகின்றன. இங்கு அச்சுத் தொழிலில் புழங்கும் பணம் மட்டுமே ஆண்டுக்கு ஐநூறு கோடிரூபாய்க்கும் மேல் விதவிதமான திருமண அழைப்பிதழ்கள், வாழ்த்து அட்டைகள், காலண்டர்கள், நோட்டு புத்தக அட்டைகள், சினிமா போஸ்டர்கள், பத்திரிகைகளின் மேல் அட்டைகள் ஆகியவை இங்குத் தயாரிக்கப்படுகின்றன.
அமெரிக்காவுக்குக் கூட சிவகாசியிலிருந்து புத்தகங்கள் வாரத்திற்கு ஒரு 'கண்டெய்னர்' என்ற கணக்கில் அனுப்பப்படுகின்றன. மலேசியா, சிங்கப்பூர், கனடா ஆகிய நாடுகளுக்குக் காலண்டர்கள் அனுப்பப்படுகின்றன. இந்திய அளவில் பத்து சதவிகித லாட்டரிச் சீட்டுகள் சிவகாசியில் அச்சடிக்கப்படுகின்றன. சிவகாசியில் வசிக்கும் ஒரு இலட்சம் பேரில் அச்சுத் தொழிலை நம்பியிருப்பவர்கள் மட்டும் 25 ஆயிரம் பேராவர்.
வாழ்த்துக் கார்டுகளைத் தயாரிப்பதில் ஸ்வாகத் நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. மற்றும் ஸ்ரீனிவாஸ் பிரிண்டிங் பிரஸ், ஜவஹர் பைன் ஆர்ட்ஸ், வி.கே.பைன் ஆர்ட்ஸ் போன்ற அச்சகங்களிலும் வாழ்த்துக் கார்டுகள் தயாராகின்றன. இந்த வாழ்த்து அட்டைகள் இந்தியா வெங்கிலும் விற்பனையாவதோடு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. மற்றும் பஸ் டிக்கெட்டுகளும், பாடநூல் நிறுவனப் புத்தகங்களும் அச்சாகின்றன. ஓரியண்ட் லித்தோ பிரஸ், காரனேஷன் லித்தோ ஒர்க்ஸ், நேஷனல் லித்தோ பிரஸ் ஆகியவை முன்னனி அச்சுக் கூடங்களாகும்.
மாடர்ன் இன்டஸ்ட்ரீஸ் மேகசின் :
சிவகாசியில் உள்ள இத்தொழிற்சாலையில் வார்னிஷ், டிஸ்டம்பர், லப்பம், பிரெஞ்சு பாலிஷ் முதலியவை தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவின் பல பகுதிகளுக்கும் இவை ஏற்றுமதியாகின்றன.
பவுண்டரித் தொழில் :
சிவகாசியில் பவுண்டரித் தொழிலும் நன்கு வளர்ச்சி கண்டுள்ளது. திருத்தங்கல் காகா இந்தியன் பவுண்டரியில் அச்சு ஆலைகளுக்கும், நூல் ஆலைகளுக்கும், வேளாண் தொழிலுக்கும் வேண்டிய கருவிகளும், உருக்குப் பொருட்களும், விளையாட்டுக் கருவிகளும் செய்யப்படுகின்றன.
ஜவஹர் மில்ஸ் :
இம்மாவட்டத்தில் செட்டிநாடு பகுதியில் ஜவஹர் மில்ஸ் செயல்படுகிறது.
சூலக்கரை தொழில் பண்ணை :
விருதுநகர் அருகில் சூலக்கரையில் அரசு சார்பில் தொழில் பண்ணை துவங்கப் பட்டுள்ளது. இங்குள்ள நிறுவனங்களில் மறை ஆணிகள், ஆணிகள், உலோகத் தகட்டுப் பொருட்கள், ஜெம்கிளிப்புகள், பின்கள், பாலிதின் பைகள் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன.
கூட்டுறவுச் சங்கங்கள் :
அரசு வழங்கும் சலுகைகளையும் உதவிகளையும் பயன்படுத்தி கீழ்க்கண்ட தொழில் கூட்டுறவுச் சங்கங்கள் இம்மாவட்டத்தில் வளர்ச்சி கண்டுள்ளன :
மரவேலை, தச்சுவேலை கூட்டுறவுச் சங்கம்
உலோகப் பாத்திரங்கள் தொழில் கூட்டுறவுச் சங்கம்
செங்கல் தயாரிப்புக் கூட்டுறவுச் சங்கம்
தீக்குச்சித் தயாரிப்புக் கூட்டுறவுச் சங்கம்
அச்சிடுதல், சாயம் போடும் தொழில் கூட்டுறவுச் சங்கம்
ரெடிமேடு ஆடைகள் தயாரித்தல்
காகித உறைகள் தயாரித்தல்
மீன்வலை நெசவுத் தொழிலாளர் கூட்டுறவு சங்கம்.
மேலும் விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, திருவில்லிப்புத்தூர், சாத்தூர், முதலிய வட்டங்கள் தொழில் வளர்ச்சியில் மிகவும் பின் தங்கி உள்ளதால் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (TIDCO) மற்றும் சிப்காட் (SIPCOT) ஆகிய நிறுவனங்களிடமிருந்து சலுகைகளையும் மானியங்களையும் பெற்று புதியத் தொழில்கள் அமைத்து முன்னேற வாய்ப்புகள் உள்ளன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
விருதுநகர் - Virudhunagar - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தொழில், கூட்டுறவுச், சங்கம், விருதுநகர், சிவகாசியில், அட்டைகள், தமிழக, லித்தோ, tamilnadu, மாவட்டங்கள், ஆகியவை, தயாரிக்கப்படுகின்றன, ஜவஹர், பிரஸ், தமிழ்நாட்டுத், தகவல்கள், இம்மாவட்டத்தில், கருவிகளும், வளர்ச்சி, மில்ஸ், ஆலைகளுக்கும், ஆணிகள், தயாரிப்புக், தயாரித்தல், சலுகைகளையும், சங்கங்கள், அரசு, | , பண்ணை, ஆகிய, அச்சு, தொழில்கள், அச்சுத், இந்தியா, information, virudhunagar, districts, மேல், வாழ்த்து, ஆர்ட்ஸ், ஏற்றுமதியாகின்றன, பைன், வாழ்த்துக், காலண்டர்கள், அனுப்பப்படுகின்றன, பவுண்டரித்