விருதுநகர் - தமிழக மாவட்டங்கள்
குலசேகர நல்லூர் :
குலசேகரப் பாண்டியன் பெயரால் ஏற்பட்ட இவ்வூரில், அவனால் கட்டப்பட்ட பிள்ளையார் கோவிலும், கல்வெட்டுகளும் உள்ளன.
பண்ணை மூன்றடைப்பு :
வேளாண்மைச் செழிப்புற நடைபெறும் இவ்வூரில் பல மன்னர்களின் பண்ணைகள் அமைந்துள்ளன. வாழை, கரும்பு, வெற்றிலைக் கொடிக்கால் விளைச்சல் அதிகமாக நடைபெறுகிறது.
பள்ளிமடம் :
திருச்சுழிக்கு எதிரே, குண்டாற்றின் மறுகரையில் இவ்வூர் அமைந்துள்ளது. காட்டுக் காளையர் கோவில் என்பது இவ்வூரின் இன்னொரு பெயர். சமணர் பள்ளி ஒன்று இங்கு இருந்திருக்கிறது. ஆற்றங்கரையில் காளைநாதர், சொர்ணவல்லி அம்மன் கோவில்கள் உள்ளன. கோட்டை ஒன்று இருந்ததிற்கான தடயங்களும் காணப்படுகின்றன.
நரிக்குடி :
நரிக்குடி ஊராட்சி ஒன்றியத் தலைநகரான இவ்வூரில் மருதுபாண்டியரால் கட்டப்பட்ட மருதுவிநாயகர் கோவிலும், மீனாம்பிகைக் கோவிலும், சத்திரமும் உள்ளன. மருது பாண்டியர்க்கு இவ்வூரில் திருவுருவச்சிலை அமைக்கப்பட்டு, ஆண்டுதோறும் விழா எடுத்துச் சிறப்பிக்கப்படுகிறது. சத்திரத்திற்குள் தேவதைக்கு முறைப்படி பூசைகள் நடைபெறுகின்றன. சின்னச்சாமி முத்தழகு என்னும் மருதுபாண்டியர் அமைச்சர்களின் உருவச் சிலைகளும் இச்சத்திரத்தில் இருக்கின்றன.
மானுர் :
இவ்வூரில் உள்ள சுப்பிரமணியர் கோவிலில் பங்குனி உத்திரத்தன்று தேரோட்டம் சிறப்பாக நடைபெறுகிறது.
வீரசோழம் :
நரிக்குடியிலிருந்து 5 கி.மீ சுற்றியுள்ள காடுகளில் மயில்கள் அதிகம் காணப்படுகின்றன. இவ்வூரிலுள்ள பள்ளிவாசலில் மயில்களுக்குத் தீனி போடுவார். பல ஊர்களுக்கும் இங்கிருந்து மயில்கள் அனுப்பப்படுகின்றன.
பிள்ளையார் தொட்டியங்குளம் :
பிள்ளையாருக்கு வேண்டிக்கொண்டு அவர் உருவத்தைப் பூமியில் புதைத்து வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்வர். இதனால் இவ்வூர் இப்பெயர் பெற்றது. மேலும் இவ்வூர் திருவிடை நல்லூர் எனவும் திருவளர் நல்லூர் எனவும் வழங்கப்படுகிறது.
தளவாய்புரம் :
17ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட இவ்வூர் தளவாய் அரியநாத முதலியார் பெயரால் நிலவுகிறது. சேற்றுரிலிருந்து தென்கிழக்கே 3 கி.மீ தொலைவில் உள்ள இவ்வூரில் நெசவுத் தொழில் சிறப்பாக நடைபெறுகிறது.
அய்யனார் கோவில் :
இராஜப்பாளையத்திலிருந்து 13 கி.மீ தொலைவில் மலைப் பகுதியில் அமைந்துள்ளது. சாலை வசதி பெற்றுள்ளது. இங்கு நரகத்து அய்யனார் கோவிலும், சிறிய அருவியும் உள்ளன. அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் பாய்கிறது. பருவகாலத்தில் கூடுதலாக தண்ணீர் விழுகிறது. இதிலிருந்து குழாய் மூலமாக இராஜப்பாளையம் நகருக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளுக்கு களிப்பூட்டும் இடமாகும்.
புனல்வேலி :
பொட்டல்பட்டிக்கு அருகில் அமைந்துள்ள இச்சிற்றுர் நெசவுத் தொழிலால் சிறப்புற்று விளங்குகிறது.
வற்றிராயிருப்பு :
இயற்கை எழில் சூழலில் இவ்வூர் அமைந்துள்ளது. உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானியான டாக்டர். கே.எஸ். கிருஷ்ணன் இவ்வூரினர் ஆவார். இவ்வூரில் சிவன் கோவில், நல்லதங்காள் கோவில் முதலியன உள்ளன. நல்லத் தங்காள் கோவில் விழா மதுரைத் தையற்காரர்களால் கொண்டாடப் பெறுகிறது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விருதுநகர் - Virudhunagar - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - இவ்வூரில், கோவில், இவ்வூர், கோவிலும், விருதுநகர், மாவட்டங்கள், தமிழக, tamilnadu, நடைபெறுகிறது, அமைந்துள்ளது, தமிழ்நாட்டுத், நல்லூர், தகவல்கள், எனவும், மயில்கள், சிறப்பாக, உள்ள, வழங்கப்படுகிறது, தொலைவில், அய்யனார், நெசவுத், விழா, | , தண்ணீர், காணப்படுகின்றன, information, பிள்ளையார், கட்டப்பட்ட, ஏற்பட்ட, districts, virudhunagar, பெயரால், இங்கு, ஒன்று, நரிக்குடி