விருதுநகர் - தமிழக மாவட்டங்கள்
ஆத்துப்பட்டி :
திருச்சுழி-அருப்புக்கோட்டைச் சாலையில் இவ்வூர் உள்ளது. இங்கு ஒரு நூலாலை இருக்கிறது. பருத்தி, வேர்க்கடலை முக்கிய பயிர்கள்.
பந்தல்குடி :
அருப்புக் கோட்டையிலிருந்து 13 கி.மீ தொலைவில் எட்டயபுரம் சாலையில் இவ்வூர் உள்ளது. இங்கு பருத்தி அரைக்கும் ஆலைகள் உள்ளன. துவரை, உளுந்து, பருத்தி ஆகியன முக்கிய பயிர்கள்.
ஆமணக்கநத்தம் :
அவுரிச்செடி இங்கு நிறைய விளைகிறது. இச்செடி தூத்துக்குடிக்குக் கொண்டுச் செல்லப்பட்டு, அங்கிருந்து பல இடங்களுக்கும் ஏற்றுமதியாகிறது.
குல்லூர்ச் சந்தை :
இவ்வூர் விருதுநகருக்கு அருகிலிருப்பதால் வாணிகத்தில் சிறப்புற்றுத் திகழ்கிறது. தறி நெசவுத் தொழில் செய்யும் தேவாங்கர் அதிகமாக வாழும் ஊராகும். இங்கு உற்பத்தியாகும் துணிகள் பல இடங்களுக்கும் ஏற்றுமதியாகின்றன.
கஞ்சநாயக்கன்பட்டி :
அருப்புக்கோட்டை அருகே இவ்வூர் அமைந்துள்ளது. இது பல வகை தானிய வேளாண்மையில் சிறந்து விளங்குகிறது. கழிவுத்தாள், வைக்கோல் முதலியவற்றைக் கொண்டு அட்டை செய்யும் தொழில் இங்கு நடைபெறுகிறது.
பாளையப்பட்டி :
அருப்புக்கோட்டை இரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள இவ்வூர் குறுநில மன்னர்களால் ஆளப்பெற்றது. மிளகாய், சீனிக்கிழங்கு, நெசவு முதலியவற்றுக்குப் பெயர் பெற்ற ஊர். இவ்வூரில் பல மல்லிகைப் பூந்தோட்டங்கள் செழிப்பாக உள்ளன. இங்கிருந்து பல ஊர்களுக்கும் மல்லிகைப்பூ அனுப்பப்படுகிறது.
அழகிய நல்லூர் :
காரியாப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு மேற்குக் கோடியில் அமைந்துள்ள இவ்வூரின் பண்டைய பெயர் குட்டலோட்டி என்பதாகும். நெல், மிளகாய், பருத்தி ஆகியன இங்கு மிகுதியாகப் பயிரிடப்படுகின்றன. இவ்வூரில் நிறைய மயில்களும் காணப்படுகின்றன.
ஜோகில் பட்டி :
விஜயநகரப் பகுதியிலிருந்து குடியேறிய ரெட்டியார் சமூக மக்கள் இவ்வூரில் அதிகமாக வாழ்கின்றனர். கல்குறிச்சியிலிருந்து ஒரு கி.மீ தொலைவில் உள்ள இவ்வூரில் பாறை, கல் உடைக்கும் தொழில் சிறப்பாக நடைபெறுகிறது.
கல்குறிச்சி :
மதுரை, விருதுநகர் ஆகிய பெரிய நகரங்கள் இவ்வூருக்கு அருகில் அமைந்துள்ளன. நெசவாளர் குடும்பங்கள் மிகுந்துள்ளதால் நெசவுத்தொழில் இங்கு சிறப்பாக நடை பெறுகிறது.
மல்லாங்கிணறு :
இவ்வூர் நாடக்கக் கலை வளர்ச்சிக்கு முக்கிய இடமாக விளங்கி வருகிறது. இதற்கருகில் உள்ள சூரம்பட்டியில் எலும்பு முறிவுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
வரலொட்டி :
விருது நகரிலிருந்து 6 கி.மீ தொலைவில் இவ்வூர் உள்ளது. இங்குள்ள சிவன் கோவில் புதைந்து காணப்படுகிறது. அதனருகில் 15 அடி நீளமும் 12 அடி அகலமும் கொண்ட ஐந்து கிணறுகள் உள்ளன. இவற்றைப் பாண்டியன் கிணறு என்பர். கிணற்றின் சுற்று மதிலில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இவ்வூர் வழியே பாலவநத்தத்துக்குச் செல்லும் சாலை ராணிமங்கம்மாளால் அமைக்கப்பட்தாகச் சொல்லப்படுகிறது.
ரமண மகரிஷி |
அரசு அலுவலகங்கள் பல உள்ள இவ்வூரைச் சுற்றிலும் மதுரை, விருதுநகர், அருப்புக் கோட்டை நகரங்கள் அமைந்துள்ன. தேவாரம் பாடப்பெற்ற தலமாகும். இக்கிராமம் குண்டாற்றின் கரையில் அமைந்து செழிப்பாக உள்ளது. ரமண மகரிஷி இவ்வூரில் பிறந்தவராவர். வணிகத் துறையில் நாடார்கள் சிறப்புற்று விளங்குகின்றனர். இங்குள்ள மண்வளப் பாதுகாப்பு அலுவலகம் வேளாண்மை வளர்ச்சிக்குரிய உதவிகளை ஆற்றி வருகிறது. இங்குள்ள தென்னிந்திய திருச்சபையின் தேவாலயம் கிறித்துவர்களின் சிறந்த வழிபாட்டுத் தலமாக உள்ளது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விருதுநகர் - Virudhunagar - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - இவ்வூர், இங்கு, விருதுநகர், உள்ளது, இவ்வூரில், தமிழக, உள்ள, பருத்தி, tamilnadu, மாவட்டங்கள், இங்குள்ள, தொழில், முக்கிய, தொலைவில், தமிழ்நாட்டுத், தகவல்கள், மிளகாய், பெயர், செழிப்பாக, மதுரை, | , வருகிறது, அருகில், நகரங்கள், சிறப்பாக, மகரிஷி, நிறைய, சாலையில், பயிர்கள், information, districts, virudhunagar, அருப்புக், ஆகியன, அருப்புக்கோட்டை, அதிகமாக, செய்யும், இடங்களுக்கும், நடைபெறுகிறது