விருதுநகர் - தமிழக மாவட்டங்கள்
முக்கிய ஊர்கள் :
விருது நகர் :
விருதுநகரின் பழையப் பெயர் விருதுப்பட்டி ஆகும். இங்கு உணவுப் பொருட்கள் வியாபாரமும், மலைத்தோட்ட விளைப்பொருட்கள் வியாபாரமும் பெரிய அளவில் நடைபெறுகின்றன. தெப்பக்குளத்தைச் சுற்றிலும் கடைத்தெரு உள்ளது. தேங்காய் எண்ணெய்யும், காப்பித் தூளில் கலக்கப்படும் சிக்கரியும் அதிக அளவில் விற்பனையாகின்றன. ஏலக்காய் முக்கியச் சந்தைப் பொருளாக விளங்குகிறது. ஏலக்காயிலிருந்து பருப்பை எடுத்தபின் எஞ்சும் தோலை வெளி நாடுகளுக்கு விற்பனை செய்கின்றனர்.
உயர்ரக கருங்கண்ணிப் பருத்தி பல ஊர் ஆலைகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதியாகிறது. நல்லெண்ணெய், மிளகாய் வற்றல் முதலியனவும் இங்கிருந்து ஏற்றுமதியாகின்றன. பல பருத்தி அரைக்கும் ஆலைகள், எண்ணெய் ஆலைகள், உயர்நிலைப்பள்ளிகள், தொழிற்கல்லூரி, சுருட்டு மற்றும் சோப்பு தயாரிக்கும் நிறுவனங்கள்,பருப்பு உடைக்கும் தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள், நெசவா லைகள், மருத்துவமனைகள் முதலியன அமைந்துள்ளன. இங்கிருந்து இரயில் மூலம் வெளியிடங்களுக்கு ஏராளமான சரக்குகள் அனுப்பப்படுவதால், இங்குள்ள இரயில் நிலையத்தில் மிக நீளமான பிளாட்பாரமும், சரக்கு ஏற்ற வசதியாக மார்ஷல் யார்டும் அமைக்கப்பட்டுள்ளன. சூலக்கரை பகுதியில் அரசு தொழிற்பேட்டையும், அதனருகில் தொழிற்பயிற்சிப் பள்ளியும் இயங்குகின்றன.
சிவகாசி :
சிவகாசி |
சாத்தூர் :
இதன் பழைய பெயர் சாத்தனுர் ஆகும். காட்டின் இடையே அமைந்துள்ள சாத்தனுர் கோவிலைச் சுற்றி உருவான நகரம் என்பதால் சாத்தூர் என்று பெயர் உண்டாயிற்று. மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாள் சாத்தூரின் தெற்கெல்லையில் ஒரு பாலத்தையும், விநாயகர் கோவிலையும், ஒரு சத்திரத்தையும் கட்டினாள். பருத்தி அரைக்கும் ஆலைகள், தீப்பெட்டித் தொழிற்சாலைகள், நிப்பு தொழிற்சாலைகள் முதலியன வெள்ளையர் ஆட்சி காலத்திலிருந்தே இங்கு இயங்கி வருகின்றன. தீப்பெட்டித் தொழிலுக்குத் தேவைப்படும் சில இரசாயனப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களும், மற்றும் பல வியாபார நிறுவனங்களும் அமைந்துள்ளன. வெள்ளரிப் பிஞ்சுக்கும், சீனி மிட்டாய், கடலை மாவுச் சேவு இவற்றிற்கும் சாத்தூர் பெயர் பெற்ற ஊராகும்.
அருப்புக் கோட்டை :
விருதுநகர்-மானாமதுரை சந்திப்புக்களுக்கிடையில் உள்ள முக்கியமான ரயில் நிலையம் அருப்புக்கோட்டை ஆகும். மதுரை, எட்டயபுரம், தூத்துக்குடி, விருதுநகர், திருச்சுழி போன்ற பெரிய நகரங்கள் அருப்புக்கோட்டையிலிருந்து சிறிது தொலைவில் உள்ளன. இங்கு மணிலாக்கடலை, கருப்பட்டி, நல்லெண்ணெய் முதலியவற்றின் விற்பனை மொத்த வியாபாரமாக நடைபெறுகிறது. இங்கு நெசவுத் தொழிலும் சிறப்புற்றுள்ளது. இங்கு தயாரிக்கப்படும் சேலைகள், வேட்டிகள் இந்தியாவில் பல இடங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விருதுநகர் - Virudhunagar - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - இங்கு, விருதுநகர், சிவகாசி, பெயர், தொழிற்சாலைகள், தமிழக, தயாரிக்கும், மாவட்டங்கள், tamilnadu, வியாபாரமும், பருத்தி, தீப்பெட்டித், ஆலைகள், அச்சுத், இங்கிருந்து, சாத்தூர், தகவல்கள், ஆகும், தமிழ்நாட்டுத், நடைபெறுகிறது, மேலும், நகரம், ஏராளமாக, | , மொத்த, தொழிலுக்குத், நிறுவனங்களும், சாத்தனுர், அரைக்கும், பெரிய, அளவில், information, districts, virudhunagar, விளங்குகிறது, விற்பனை, அமைந்துள்ளன, முதலியன, அரசு, நல்லெண்ணெய், இரயில்