விருதுநகர் - தமிழக மாவட்டங்கள்
வேளாண்மை :
சாத்தூர் வட்டத்தில் அர்ச்சுனா ஆறு, வைப்பாறு ஆகிய ஆறுகளும், திருவில்லிப்புத்தூர் வட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து வரும் சிற்றாறுகளும், இராஜபாளையம் வட்டத்தில் அர்ச்சுனா ஆறு, கல்லணை ஆறு ஆகிய ஆறுகளும், அருப்புக் கோட்டை வட்டத்தில் குண்டாறு, கிருதுமால் எனும் சிற்றாறுகளும் பாய்ந்து இம்மாவட்டத்தின் வேளாண்மையைச் செழிப்பாக்குகின்றன. வராகசமுத்திரம், பெரிய குளம், நத்தம்பட்டிக்கண்மாய் ஆகிய பெரிய ஏரிகள் இம்மாவட்டத்தில் இருக்கின்றன. வற்றாயிருப்பிலிருந்து 11கி.மீ தொலைவில் பிளவைக்கல் என்னுமிடத்திலுள்ள அணையால் 5000 ஏக்கருக்கு நிலையான பாசன வசதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 2.13 இலட்சம் ஹெக்டேர் நிலத்தில் விவசாயம் செய்யப்படுகிறது. நெல், பருத்தி, கரும்பு, மிளகாய், பருப்பு வகைகள் இம்மாவட்டத்தின் முக்கிய விளைபொருட் களாகும்.
வாணிகம் :
விருதுநகர் மாவட்டத்தில் பனைமரங்கள் அதிகமாக உள்ளதால், பனை ஓலைகளுக்கு வர்ணம் தீட்டி பெட்டி, கூடை, விசிறி, பாய் போன்ற பொருட்கள் செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இங்கு தென்னை அதிகமாக வளர்க்கப் படுவதையொட்டி பல உப தொழில்கள் பெருக வாய்ப்புகள் ஏராளம் உள்ளன. தேய்காய் பல ஊர்களுக்கும் ஏற்றுமதியாகிறது. மளிகைப் பொருட்கள், எண்ணெய் வகைகளுக்கு விருதுநகர் பெரிய கேந்திரமாக விளங்குகிறது. தோட்டப் பொருட்களுக்கும் காபிக்கும் இவ்வட்டமே சிறந்த மையமாக திகழ்கிறது. இராஜபாளையம், விருதுநகர், சாத்தூர் ஆகியவை பஞ்சு உற்பத்தியில் மிகுந்த ஏற்றம் பெற்றுள்ளன. மல்லி, மிளகாய் முதலியன தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும் இங்கிருந்து அனுப்பப்படுகின்றன. அருப்புக் கோட்டைகளில் கடலை உடைக்கும் எந்திரங்கள் ஏராளம். இதனால் கடலை ஏற்றுமதியிலும், கடலை எண்ணெய், கடலைப் புண்ணாக்கு, கடலைப் பொட்டு ஆகியவற்றின் வாணிபத்திலும் அருப்புக் கோட்டை சிறந்துள்ளது. கைத்தறி சேலை, வேட்டிகளுக்கு அருப்புக்கோட்டை திருவில்லிப்புத்தூர் வட்டங்கள் புகழ் பெற்றவை. வெள்ளி, தங்கம், வைர வியாபாரங்களுக்கும் இம்மாவட்டம் பெயர் பெற்று விளங்குகிறது.
பட்டாசு தயாரிப்பு இம்மாவட்டத்தின் சிறப்பான பெருந்தொழிலாகத் திகழ்கிறது. பட்டாசு வாணிகம் இம்மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. இவ்வாணிகம் அகில இந்திய அளவில் நடக்கிறது. வெளிநாடுகளுக்கும் பட்டாசுகள் ஏற்றுமதி செய்யப்பட்டு, அந்நியச் செலாவணியையும் அதிக அளவில் ஈட்டித்தருகிறது.
தொழில் வளர்ச்சி :
விருதுநகர் மாவட்டம் தொழில் வளர்ச்சியில் ஓரளவு முன்னேறியுள்ளது. பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் பல சிறந்த தொழில் நிறுவனங்கள் இம்மாவட்டத்தில் நன்கு செயல்பட்டு வருகின்றன.
இராஜபாளையம் மில்ஸ் :
இம்மாவட்டத்திலுள்ள நூலாலைகளில் இதுவே பெரியதாகும். இதைத் தொடங்கியவர் பி.ஏ.சி. இராமசாமி ராஜா என்பவர் ஆவார். முரட்டு நூல்கள் முதல் மிக மெல்லிய நூல்கள் வரை இங்கு தயாராகின்றன.
இராமசாஜூ சர்ஜிகல் காட்டன் மில்ஸ் :
இது என்.கே. இராமராஜூ என்பரால் இராஜபாளையத்தில 1942 இல் தொடங்கப் பெற்று நடந்து வருகிறது. காயங்களுக்கு கட்டுவதற்கு உதவும் பேண்டேஜ் துணி முதலியன இங்கு தயாராகின்றன. தமிழ்நாடு, ஆந்திர அரசுகளும் இதில் பங்குகள் வாங்கியுள்ளன. மேலும் இராஜபாளையத்தில் ஜானிகிராம் மில்ஸ், அழகப்பா காட்டன் மில்ஸ், ஜெயராம் மில்ஸ், ஸ்ரீ ஷண்முகா மில்ஸ், ஸ்ரீ பாரதி காட்டன் மில்ஸ், மற்றும் சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் முதலியனவும் இயங்கி வருகின்றன. அருப்புக்கோட்டை வட்டத்தில் மல்லாங்கிணறு என்னும் ஊரிலும் நூலாலைகள் தொடங்கப்பட்டு இயங்கி வருகின்றன. திருவில்லிப்புத்தூரில் கூட்டுறவு துறை நூல் ஆலை தொடங்கப் பட்டுள்ளது.
விருதுநகர் டெக்ஸ்டைல்ஸ் மில்ஸ் :
1946 இல் தொடங்கப் பெற்ற இந்த ஆலை பல வண்ணங்களில் கவர்ச்சியும் மென்மையும் உடைய பூப்போட்ட சேலைகளையும் துணிகளையும் உற்பத்தி செய்கிறது.
விருதுநகர் கோன் தொழிற்சாலை :
கோன் என்பது நூல்களைச் சுற்றி வைக்கப் பயன்படும் அட்டைக் குழாய் ஆகும். இக்குழாய்களை செய்யும் தொழிற்சாலை விருதுநகரில் ஹார்வி குடும்பத்தாரால் தொடங்கப்பட்டது. புனலூர் ஆலையிலிருந்து அட்டைகளை வரவழைத்து குழாய்கள் செய்கின்றனர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விருதுநகர் - Virudhunagar - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - விருதுநகர், மில்ஸ், வட்டத்தில், இம்மாவட்டத்தின், tamilnadu, தமிழக, மாவட்டங்கள், அருப்புக், இராஜபாளையம், பெரிய, தொழில், வருகின்றன, காட்டன், இங்கு, தொடங்கப், தமிழ்நாட்டுத், கடலை, ஆகிய, தகவல்கள், முதலியன, அருப்புக்கோட்டை, பெற்று, பட்டாசு, கடலைப், நூல்கள், கோன், தொழிற்சாலை, | , இயங்கி, ஸ்ரீ, திகழ்கிறது, தயாராகின்றன, அளவில், பொருட்கள், ஆறுகளும், திருவில்லிப்புத்தூர், வரும், அர்ச்சுனா, சாத்தூர், virudhunagar, districts, information, சிற்றாறுகளும், கோட்டை, ஏராளம், எண்ணெய், விளங்குகிறது, செய்யப்பட்டு, அதிகமாக, இம்மாவட்டத்தில், மிளகாய், வாணிகம், சிறந்த