விருதுநகர் - தமிழக மாவட்டங்கள்
ஜி. இராமானுஜம் :
தமிழ்நாட்டில் ஐ.என்.டி.யூ.சி எனும் தொழிற்சங்கத்தை நிறுவிய ஜி. இராமனுஜம் இம்மாவட்டத்துக் கீழராஜ குலராமன் ஊரினராவார்.
மு.கு. ஜகந்நாத ராஜா :
இராஜபாளையத்தைச் சேர்ந்த இவர் பன்மொழிப் புலவர். கற்பனைப் பொய்கை எனும் நூலை இயற்றியுள்ளார். பல தெலுங்குக் கவிதைகளையும் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இது போல் குறிஞ்சிப்பாட்டு, முத்தொள்ளாயிர்ம் ஆகிய இரு தமிழ் இலக்கியங்களையும் தெலுங்கில் மொழிபெயர்த்துள்ளார்.
ரமண மகரிஷி :
திருவண்ணாமலையில் ஆசிரமம் அமைத்துக் கொண்டு, இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆன்மிகம் பரப்பிய ரமண மகரிஷி இம்மாவட்டத்தில் உள்ள திருச்சுழியில் பிறந்தார். இவர் பெயரால் மேலை நாடுகள் பலவற்றிலும் ஆசிரமங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கோட்டி முக்குல அழகராஜ சிங்கப்பராஜா :
இவர் இராஜபாளையத்தைச் சேர்ந்தவர். காங்கோ நாட்டின் சுதந்திரத்தை நிலைநிறுத்த 1961 இல் இந்தியா, ஐக்கிய நாடுகளின் வேண்டுகோளுக் கிணங்க 3000 வீரர்கள் அடங்கிய படையை இவர் தலைமையில் அனுப்பி வைத்தது. காங்கோவில் இவருடைய பணியை அறிந்த ஐ.நா.சபை, பின்னர் இவரை ஐ.நா. படைத்தளபதியாக நியமித்துச் சிறப்பித்தது.
தீபம் நா.பார்த்த சாரதி :
வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள நரிக்குடியைச் சேர்ந்தவர். தீபம் பத்திரிகைக்கு ஆசிரியர். சிறந்த எழுத்தாளர், பேச்சாளர். சமுதாய வீதி என்ற இவருடைய நாவலுக்கு 1972 இல் சாகித்ய அகாதமி பரிசு கிடைத்துள்ளது. சில காலம் தினமணிக் கதிர் வார இதழின் ஆசிரியப் பொறுப்பிலிருந்தார்.
அ.லெ. நடராசன் :
லெனின் வாழ்க்கை வரலாற்றை எழுதி சோவியத் நாடு பரிசு பெற்ற எழுத்தாளர்.
புவிவளம் :
இம்மாவட்டத்தில் மண்ணுக்கடியில் பல்வகைக் கனிமங்கள் இருப்பது பற்றி ஆய்வில் வெளிவந்துள்ளன.
சுண்ணாம்புக்கல் :
சிமெண்டுத் தொழிலுக்கு ஏற்ற இவ்வகை சுண்ணாம்புக்கல் அருப்புக்கோட்டை வட்டத்தில் பாலநத்தம், பாண்டங்குடி முதலிய இடங்களில் மிகுந்த அளவில் கிடைக்கிறது. பிளீச்சிங் பவுடர், கால்சியம் கார்பைடு ஆகியவை தயாரிக்கவும் சுண்ணாம்புக்கற்கள் உதவுகின்றன.
செந்நிறக் கற்பாறைகள் :
அருப்புக்கோட்டை அருகே இவ்வகைப் பாறைகள் மிகுதியாக உள்ளன.
பிளம்பாகோ :
திருச்சுழிக்கு அருகேயுள்ள பந்தல் குடியில் கிரிஸ்டலைன் லைன்ஸ்டோனில் பிளம்பாகோ எனும் அரிய பொருள் கிடைக்கிறது.
கல்தூண்கள் :
விக்கிரகங்கள் மற்றும் பெரிய கல்தூண்கள் செய்யத்தக்க ஒரு வகைக் கருங்கல் இம்மாவட்டத்தில் கிடைக்கிறது. பல ஊர்களுக்கும் இவை லாரிகள் மூலம் அனுப்பபட்டு, கட்டிட வேலைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.
ஜிப்சம் :
மிகக்குறைந்த அளவே இம்மாவட்டத்தில் ஜிப்சம் படிவங்கள் உள்ளன. இதுவும் சிமெண்டு தொழிலுக்குப் பயன்படுகிறது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விருதுநகர் - Virudhunagar - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - tamilnadu, விருதுநகர், இம்மாவட்டத்தில், மாவட்டங்கள், இவர், தமிழக, எனும், கிடைக்கிறது, தமிழ்நாட்டுத், தகவல்கள், பரிசு, சுண்ணாம்புக்கல், அருப்புக்கோட்டை, கல்தூண்கள், | , ஜிப்சம், எழுத்தாளர், பிளம்பாகோ, மகரிஷி, information, districts, virudhunagar, இந்தியா, இராஜபாளையத்தைச், இவருடைய, சேர்ந்தவர், உள்ள, தீபம்