திருச்சி - தமிழக மாவட்டங்கள்
இலுப்பூர் :
திருச்சிக்குக் கிழக்கில் 26 மைல் தொலைவில் உள்ளது. வணிகத்தில சிறந்து விளங்கும் முஸ்லீம்கள் பெருந்தொகையினராக இங்கு வாழுகின்றனர். கைத்தறி நெசவும் சிறப்பாக நடைபெறுகிறது. பல செளராஷ்டிரக் குடும்பங்கள் இந்நெசவுத் தொழிலில் செயலாற்றுகின்றன. துணிகளுக்குச் சாயம் போடும் தொழிலைக் கைக்கோளர் குடும்பங்கள் செய்து வருகின்றன.
கிளாம்பில் :
திருச்சிக்கு வடகிழக்கில் 17 மைல் தொலைவில் உள்ளது. இங்கு உள்ள மாரியம்மன் கோவில் சிறப்பு பெற்று விளங்குகிறது. பங்குனி மாதத்தில் நடைபெறும் திருவிழாவில் மக்கள் மிகுதியாகக் கூடுகின்றனர். பிராமணர்களில் ஸ்மார்த்தர் என்னும் பிரிவினர் இங்கு
வாழ்கின்றனர்.
லால்குடி :
இவ்வூர் திருச்சிக்கு வடகிழக்கில் உள்ளது. மக்கள் தொகை மிகுதி. வட்ட அலுவலகங்கள் உள்ளன. வாணிகச் சிறப்பினால் போக்குவரத்து மிகுதி. சிவாலயம் உள்ளது. வாழை, வெற்றிலை இரண்டும் செழிப்பாக பயிராவதால் பல இடங்களுக்கும் ஏற்றுமதியாகின்றன. 1952 இல் பிரெஞ்சுக்காரர்கள் வசம் இப்பகுதியிருந்தது.
முத்தரநல்லூர் :
திருச்சிக்கு வடமேற்கில் நான்கு மைல் தூரத்தில் உள்ளது. பிரெஞ்சுக் காரர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் 1753 இல் இங்கு போர் நடந்தது.
பிராட்டியூர் :
திருச்சிக்குத் தெற்கில் ஆறு மைல் தொலைவில் உள்ளது. கள்ளர்கள் மிகுதியாக வாழ்ந்த ஊர். கரட்டை மலையிலுள்ள ஒண்டி கருப்பம்மன் பிரபலமானது.
பிக்ஷண்டார் கோவில் :
இவ்வூர் திருச்சிக்கு வடக்கில் நான்கு மைல் தொலைவில் உள்ளது. கொள்ளிடத்திற்கு வடகரையிலும், திருவரங்கத்திற்குக் கிழக்கில் ஒரு மைல் தொலைவிலும் அமைந்திருக்கிறது.பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இவ்வூரில் பல போர்கள் நடந்துள்ளன. வேளாண்மை நன்கு நடைபெறும் இவ்வூர் கோவிலால் சிறப்புறுகிறது.
திருவரங்கம் :
திருவரங்கம் |
கல்வி :
திருச்சி மாவட்ட கல்வி வளர்ச்சிக்கு 1983 இல் அமைக்கப்பட்ட பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளது. இதில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரிகள் அனைத்தும் பல்கலைக் கழக அங்கீகாரத்தின் கீழ்ச் செயல்பட்டு வருகின்றன. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, திருச்சி பிராந்திய பொறியியல் கல்லூரி, கீரனுர் மூகாம்பிகை பொறியியல் கல்லூரி, உறையூர் அங்காளம்மன் பொறியியல் கல்லூரி, வல்லம் சண்முகா பொறியியல் கல்லூரி இவையும் இப்பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்ட்டுள்ளன.
50க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இப்பல்கலைக் கழகத்தில் உள்ளன. புதுக்கோட்டை செல்லும் வழியில் திருச்சியிலிருந்து சுமார் 13 கி.மீ தொலைவில் இப்பல்கலைக் கழகம் அமைந்துள்ளது. புனித சூசையப்பர் கல்லூரி, சீதாலட்சுமி ராமசாமி பெண்கள் கல்லூரி, புத்தனாப்பட்டி நேரு நினைவுக் கல்லூரி, பிஷப் ஹஂபர் கல்லூரி, ஹோலி கிராஸ் பெண்கள் கல்லூரி முதலிய கல்லூரிகள் தன்னாட்சி உரிமையைப் பெற்றுள்ளன. திருச்சி மேற்றிராசனத்தில் இரண்டு ஆசிரியப் பயிற்சி பள்ளிகளும், கைத்தொழில், நெசவு, தையல் செவிலியர் மற்றும் தாதியர் பள்ளிகளும், 5 உயர்நிலைப்பள்ளிகளும், 6 நடுத்தரப்பள்ளிகளும், 6 துவக்கப்பள்ளிகளும் இயங்குகின்றன.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருச்சி - Tiruchirappalli - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - கல்லூரி, உள்ளது, திருச்சி, மைல், தொலைவில், இங்கு, திருச்சிக்கு, tamilnadu, தமிழக, மாவட்டங்கள், பொறியியல், இவ்வூர், திருவரங்கம், மக்கள், தமிழ்நாட்டுத், கல்லூரிகள், தகவல்கள், இப்பல்கலைக், மிகுதி, பெண்கள், நான்கு, ஆங்கிலேயர்களுக்கும், சிறந்த, புதுக்கோட்டை, கல்வி, பள்ளிகளும், | , விளங்குகிறது, இந்தியா, கிழக்கில், information, districts, tiruchirappalli, குடும்பங்கள், வருகின்றன, பிராமணர்களில், வாழ்கின்றனர், நடைபெறும், கோவில், வடகிழக்கில், தொகை