திருச்சி - தமிழக மாவட்டங்கள்
கீழ்க் குடவரைக் கோயில் :
இது திருச்சி மலை மீதுள்ள வீதியில் தென்மேற்கு மூலையில் உள்ளது. மலையின் சரிவில் தெற்கு நோக்கி உருவாக்கப்பட்டுள்ளது. தூண்கள் கீழே சதுரமாகவும் நடுவில் எட்டு பட்டை கொண்டதாகவும், மேலே தாடி, கவசம் போன்ற உறுப்புகளைக் கொண்டதாகவும் உள்ளன. குடவரையின் முன்னால் கல்லால் அமைந்துள்ள விட்டங்களின் நுனியில் பூதகணங்கள் செதுக்கப்பட்டுள்ளன. தூண்களுக்கு இடையில் வட்டமான போதிகைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாயில் காப்போர் உருவம் பல்லவர் பாணியில் விளங்குகிறது. இரு கருவறைகளும் இரு மண்டபங்களும் உள்ளன. கருவறையில் எந்தத் தெய்வவுருவும் இல்லை. கீழ்ப்பகுதியில் உள்ள கருவறையில் திருமால் நான்கு கரங்களுன் காட்சியளிக்கிறார். பக்கத்தில் இரு தேவர்களின் உருவங்கள் செதுக்கப்ட்டுள்ளன. மண்டபத்தின் பின் சுவரில் ஐந்து புதைச் சிற்பங்கள் உள்ளன. பின் சுவரில் நான்கு கைகளுடன் நின்ற நிலையில் விநாயகர் உருவம் காணப்படுகின்றன. இதையடுத்து சிவன் உருவம் உள்ளது. இது ஏழாம் நூற்றாண்டைச்
சேர்ந்ததாகும்.
திருப்பைஞ்ஞஂலி குடவரைக் கோயில் :
திருச்சியிலிருந்து சுமார் 16 கி.மீ தொலைவில் திருப்பைஞ்ஞஂலி கிராமம் உள்ளது. ஞஂலி என்னும் கோயில் கருவறையில் வடபுறச் சுவரில் பிச்சையெடுக்கும் பெருமானின் திருவுரு காணப்படுகின்றனது. இக்கோயில் பிரகாரத்தில் மேற்கு நோக்கிக் குடவரை உருவாக்கப்பட்டுள்ளது. சதுரமான கருவரை, சிறிய மண்டபம் முதலியவற்றைக் கொண்டுள்ளது. இறைவன் சோமாஸ்கந்த வடிவில் புதைச் சிற்பமாகக் காணப்படுகிறார். சுகாசனத்தில அமர்ந்த நிலையில் ஆறேறு சடையன் நான்கு கைகளுடன் காணப் படுகிறான். இங்குள்ள பாறை வேங்கையின் நிறம் போன்று தோற்றமளிக்கிறது. குழந்தை முருகன் உருவம் தாய் தந்தையுடன் ஒருசேர நிற்பது போல் சோமஸ்கந்த வடிவமைக்கப் பட்டுள்ளது தனிச்சிறப்பாகும். இது ஒன்பதாம் நூாற்றாண்டைச் சேர்ந்தது.
முக்கிய ஊர்கள் :
உறையூர் :
சங்க காலத்திலும், பின்னர் சங்கம் மருவிய காலத்திலும் உறையூர் சோழப் பேரரசின் தலைநகராய் விளங்கியது. ஒன்பது பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்த சோழநாட்டில் ஒரு பிரிவாக உறையூர் வளம் பெற்றிருந்தது. உறையூரைப் பதினைந்தது சோழ மன்னர்கள் தலைநகராகக் கொண்டு ஆண்டனர். அவர்களில் தித்தன், நெடுங்கிள்ளி, கரிகாலன், கோப்பெருஞ்சோழன் முதலானோர் முக்கியமானவர்கள். தற்போது திருச்சி நகராட்சியின் ஒரு பகுதியாக உறையூர் விளங்குகிறது. உறையூர் நகரின் பரப்பளவு 23.26 ச.மைல்கள். இது கடல் மட்டத்திற்கு மேல் 78 மீ உயரத்தில் உள்ளது. சோழர்காலத்திலிருந்து இன்று வரை உறையூர் என்னும் பெயரே சிறப்பாக வழங்கப்படுகிறது. உறையூருக்கும் தென்னுருக்கும் இடையில் தில்லைநகர், சாலைநகர், நெசவாளர் காலனி என்னும் குடியிருப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதால் உறையூர் நவீனப் பொலிவு பெற்று விளங்குகிறது. மிகத் தொன்று தொட்டே இவ்வூர் நெசவுத் தொழிலில் சிறந்து விளங்கி வருகிறது. மற்றொரு முக்கியத் தொழில் சுருட்டு தயாரிப்பது. உறையூர்ச் சுருட்டுகள் உலகப் புகழ் பெற்றவை. இவ்வூரில் தேவாங்கச் செட்டியார்களும், செளராஷ்டிரர்களும் மிகுதியாக வாழ்கின்றனர். கோவலன், கண்ணகி, கவுந்தி அடிகள் மூவரும் உறையூர் சென்றதாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது.
திருச்சி நகரம் :
திருச்சி |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருச்சி - Tiruchirappalli - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - திருச்சி, உறையூர், உள்ளது, உருவம், மாவட்டங்கள், tamilnadu, தமிழக, விளங்குகிறது, என்னும், சுவரில், நான்கு, கருவறையில், தமிழ்நாட்டுத், கோயில், தகவல்கள், மண்டபத்தில், நகரம், காலத்திலும், tiruchirappalli, | , மைல், சர்ச், தொலைவிலும், districts, கல்லூரியும், நிலையில், குடவரைக், இடையில், கொண்டதாகவும், information, பின், உருவாக்கப்பட்டுள்ளது, கைகளுடன், புதைச், திருப்பைஞ்ஞ&