திருச்சி - தமிழக மாவட்டங்கள்
செல்லாண்டி அம்மன் கோவில் :
திருச்சிக்கு மேற்கே 1 1/2 கி.மீ தொலைவில் உள்ள உறையூரில் வெக்காளி அம்மன் ஆலயத்திற்கு செல்லும் வழியில் இக்கோயில் உள்ளது. இவ்வம்மனைக் கிராமக் காவல் தெய்வமாக எண்ணி பூசிக்கின்றனர். ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் ஆறு நாட்கள் அம்பாளுக்கு விழா எடுக்கப்படுகிறது. 1958 இலிருந்து நடைபெறாமல் நின்றிருந்த இக்கோயில் உற்சவம் 1981 முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
தான்தோன்றீசுவரம் :
திருச்சி-உறையூர் சாலையில் இக்கோயில் உள்ளடங்கி அமைந்துள்ளது. இங்கு பெரிய இராஜகோபுரம் இல்லாத காரணத்தால் பலரும் அறிந்திட வாய்ப்பில்லை என்றாலும், காலத்தாலும், வரலாற்றாலும் சிறப்புப் பெற்றக் கோயிலாகும். இக்கோயில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் இவற்றுடன் கூடியதாக உள்ளது. இறைவர் இலிங்கத் திருமேனியாகக் காணப்படுகிறார். அம்பாள் நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள். வாயிலின் இருபுறமும் பெரிய பழைய இரு துவார பாலகர் சிலைகள் உள்ளன.
புனித சூசையப்பர் கோயில் :
பொன்மலைப் பகுதியில் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலின் ஆதிக்கத்தில் எட்டு பள்ளிகளும், நான்கு துறவற மடங்களும், ஆறு இல்லற நிறுவனங்களும், எட்டு இல்லற திருச்சபைகளும், பன்னிரண்டு கிருத்துவ ஆலயங்களும் உள்ளன.
உலக இரட்சகர் கோயில் :
இக்கோவில் காட்டூரில் உள்ளது. ஐந்து பள்ளிகளும், எட்டுக் கோவில்களும், துறவற மடம் ஒன்றும், இல்லற நிறுவனங்கள் மூன்றும், இல்லற சபைகள் பன்னிரண்டும் கொண்டு சிறந்து விளங்குகிறது. கத்லோலிக்க மக்கள் சுமார் 7000 பேர் உள்ளனர்.
புனித பதுவை அந்தோனியார் தேவாலயம் :
இத்தேவாலயம் இலுப்பூரில் கட்டப்பட்டுள்ளது. சுமார் 2000 கத்தோலிக்கர் உள்ளனர். சுமார் 11 கிராமங்களில் கோவில்கள் உள்ளன. மேலும் இதன் ஆட்சி பொறுப்பில் ஒரு நடுத்தரப்பள்ளியும், துவக்கப்பள்ளியும் நடந்து வருகின்றன.
நத்ஹர்வலி தர்கா :
நத்ஹர்வலி தர்கா |
குடவரைக் கோவில்கள் :
லலிதாங்குரப் பல்லவ கிருகம் :
லலிதாங்குரப் பல்லவ கிருகம் |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருச்சி - Tiruchirappalli - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - திருச்சி, இக்கோயில், இல்லற, நான்கு, tamilnadu, மாவட்டங்கள், கோயில், தமிழக, லலிதாங்குரப், தர்கா, சுமார், உள்ளது, பகுதியில், பல்லவ, தகவல்கள், தமிழ்நாட்டுத், கிருகம், நத்ஹர்வலி, இதன், கோவில்கள், | , கல்வெட்டும், தாமரை, செதுக்கப்பட்டுள்ளன, குடவரைக், கருவறையில், உருவம், நூற்றாண்டைச், உள்ளனர், கட்டப்பட்டுள்ளது, உள்ள, வழியில், அம்மன், information, tiruchirappalli, districts, அமைந்துள்ளது, பெரிய, பள்ளிகளும், துறவற, எட்டு, இக்கோவில், மண்டபம், புனித, விளங்குகிறது