திருச்சி - தமிழக மாவட்டங்கள்
தலைநகரம் : | திருச்சிராப்பள்ளி |
பரப்பு : | 4,509 ச.கி.மீ |
மக்கள் தொகை : | 2,722,290 (2011) |
எழுத்தறிவு : | 2,038,981 (83.23 %) |
ஆண்கள் : | 1,352,284 |
பெண்கள் : | 1,370,006 |
மக்கள் நெருக்கம் : | 1 ச.கீ.மீ - க்கு 604 |
தென்னகத்தின் மத்தியில் திருச்சி மாவட்டம் அமைந்துள்ள காரணத்தால், தென்னகத்தின் மீது படையெடுத்து வெற்றி கொண்ட அத்தனைப் பேரரசுகளின் ஆதிக்கத்திலும் பரந்தும் குறுகியும் இம்மாவட்டம் விளங்கியது. சேர, சோழ, பாண்டியர்களாலும், விஜய நகரப் பேரரசாலும் பாளையக்காரர்களாலும் திருச்சி மாவட்டம் ஆளப்பட்டது. ஆங்கிலேயர்களின் நிலையான ஆட்சி அமைந்த பிறகே, இம்மாவட்டத்தில் அமைதியும் வளர்ச்சியும் ஏற்படத் தொடங்கின. 1948இல் புதுக்கோட்டை சமஸ்தானம் திருச்சி மாவட்டத்தில் இருந்தது. இப்பகுதி 1974 இல் திருச்சியிலிருந்து பிரிக்கப்ட்டு தனி மாவட்டமாக அமைந்தது. நில அடிப்படையில் தமிழகத்தின் மையமாக விளங்கும் திருச்சி மாவட்டம் 1995, செப்டம்பர் 30ஆம் தேதி திருச்சி, கரூர், பெரம்பலூர் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.
எல்லைகள் :
வடக்கில் பெரம்பலூர் மாவட்டத்தையும், கிழக்கில் பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களையும், தெற்கில் புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் மதுரை மாவட்டங்களையும், மேற்கில் கரூர், திண்டுக்கல் மாவட்டங்களையும் திருச்சிராப்பள்ளி மாவட்டம் எல்லைகளாகக் கொண்டுள்ளது.
பொதுவிவரங்கள் :
வருவாய் நிர்வாகம் :
கோட்டங்கள்-3(திருச்சி, லால்குடி, முசிறி); வட்டங்கள்-7
(திருச்சி, மணப்பாறை, முசிறி, லால்குடி, துறையூர், ஸ்ரீரங்கம்,
மணச்சநல்லூர்).
உள்ளாட்சி நிறுவனங்கள் :
மாநகராட்சி-1 (திருச்சிராப்பள்ளி); ஊராட்சி ஒன்றியம்-14
(திருவெறும்பூர், அந்தநல்லூர், மணிகண்டம், மணப்பாறை, மருங்காபுரி,
வையம்பட்டி, லால்குடி, புள்ளம்பாடி, மணச்சநல்லூர், முசிறி,
தொட்டியம், தாத்தையங்கார் பேட்டை, துறையூர் மற்றும் உப்பியாபுரம்)
பெயர்க்காரணம் :
திரிசிரன் என்னும் அரக்கன் மூன்று
சிரங்களைக் கொண்டவன். அவ்வரக்கன் இவ்வூரில் பூசித்ததனால்
திருச்சிராப்பள்ளி என்னும் பெயர் ஏற்பட்டது. இது தென்னாட்டு கைலை
மலை என்றும் புகழப்படுவது. திருச்சி மலைக்கோட்டையில் காணப்படும்
குகையில் சிரா என்னும் சமணத் துறவி தங்கியிருந்து தவமிருந்ததாக
அக்குகையில் உள்ள பதினோராம் நூற்றாண்டுக் கல்வெட்டு கூறுகிறது.
சிரா துறவியின் பள்ளி சிராப்பள்ளி என்றாகி அதுவே இவ்வூருக்கு
பெயராகி உள்ளது என்றும் கருதப்படுகிறது.
வழிபாட்டுத் தலங்கள் :
தாயுமான சுவாமி கோவில் :
தாயுமான சுவாமி கோவில் |
பஞ்சவர்ண நாதர் கோவில் :
திருச்சிராப்பள்ளிக்கு மேற்கே 1 1/2 கி.மீ தொலைவில் உள்ள உறையூரில் இக்கோவில் உள்ளது. திருமுக்கீச்சரம் என்றும், கோழியூர் என்றும் இவ்வூரை அழைப்பர். ஐந்து காலங்களில் ஐந்து வர்ணமாக இக்கோயிலில் குடிகொண்ட சிவன் வீற்றிருத்தலால் பஞ்சவர்ணநாதர் என்று பெயர் வந்தது. இது மூவேந்தரும் சேர்ந்து வந்து வணங்கிய சிறப்பு கொண்டது.
திருச்சி - Tiruchirappalli - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - திருச்சி, மாவட்டம், திருச்சிராப்பள்ளி, tamilnadu, என்றும், கோவில், மாவட்டங்கள், தமிழக, பெரம்பலூர், மாவட்டங்களையும், என்னும், முசிறி, லால்குடி, தமிழ்நாட்டுத், தகவல்கள், தாயுமான, | , உள்ளது, உள்ள, சுவாமி, tiruchirappalli, வந்தது, வந்து, தாயுமானவர், சிரா, ஐந்து, பெயர், மக்கள், மூன்று, தென்னகத்தின், கரூர், information, மணப்பாறை, புதுக்கோட்டை, மணச்சநல்லூர், துறையூர், districts