திருச்சி - தமிழக மாவட்டங்கள்
பருவநிலை :
திருச்சி மாவட்டம் தமிழகத்தின் மத்தியில் அமைந்துள்ளதால், கடற்கரை கிடையாது. இதனால் கோடையில் ஜஂன் மாதம் வரை வெயில் உக்கிரமாக இருக்கும். தென்மேற்குப் பருவக்காற்றால் மழை கிடைக்கிறது. ஆகஸ்டு வரை மழை பெய்கிறது. வடகிழக்கு பருவக்காற்றால் அக்டோபர் முதல் டிசம்பர் வரை பலத்த மழை பெறுகிறது.
கனிமவளம் :
இம்மாவட்டத்தில் கனிமப்பொருட்கள் மிகுதியாகக் கிடைக்கின்றன. மேக்னெடிக் இரும்பு, செலிசைப், கிலிமினைட், கார்டைரைட், மாக்னசைட், காங்கர், பாஸ்பேடிக் நோடுல்ஸ் முதலியன பல இடங்களில் கிடைக்கின்றன. வீடு கட்ட உதவும் கருங்கல் மிகுதியாக உடைக்கப்படுகிறது.
மீன்வளம் :
கடற்கரை இல்லாததால், ஸ்ரீரங்கம், லால்குடி, எஸ்.ஆடுதுறை, கொடலைக் கருப்பூர், திருமழலாடி, கரூர், மேலமாயலூர், வடுக நாகம்பட்டி, துறையூர் ஆகிய ஒன்பது முக்கிய இடங்களில் மீன் வளர்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஊரிலும் மீனவர் கூட்டுறவுச் சங்கம் உள்ளது. பிடிக்கப்படும் மீன்கள் கெடாமல் இருக்கக் குளிர் பதன அமைப்புகளும் பல இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.
நீர்வளம் :
திருச்சி மாவட்டத்தை வளங்கொழிக்க வைக்கும் முக்கிய ஆறு காவிரி. காவிரியுடன் அய்யாறு, அமராவதி, நொய்யாறு, மருதையாறு, வெள்ளாறு போன்றவை வந்து சேர்கின்றன. இவையல்லாமல் சின்னாறு, காட்டாறு, கம்பையாறு, ருத்ராட்சா ஆறு, அரியாறு, கொடிங்கால், வாணியாறு, கோரையாறு, குண்டாறு, அம்புலியாறு, பாம்பாறு முதலிய சிற்றாறுகளும் இம்மாவட்டத்தில் பாய்ந்து வளப்படுத்துகின்றன. கல்லணையும் மேலணையும் இம்மாவட்டத்தின் புராதன அணைக் கட்டுகளாகும். திருச்சி வட்டத்தில் முக்கொம்பூர் எனுமிடத்தில காவிரியிலிருந்து கொள்ளிடம் தனியாகப் பிரிகிறது. காவிரியின் முக்கிய கிளை நதிகள் கொள்ளிடம், வெண்ணாறு, உய்யகொண்டான்
ஆறு, குடமுருட்டி, வீரசோழன், விக்ரமனாறு, அரசலாறு முதலியனவாகும். வெண்ணாற்றிலிருந்து வெட்டாறு, வடலாறு, கோரையாறு, பாமனியாறு, பாண்டவயாறு, வெள்ளையாறு முதலியவைப் பிரிகின்றன. உய்யக் கொண்டான் ஆறு திருச்சி நகர்புறத்தில் பல பாசனக் குளங்களுக்கு நீர் தருகிறது.
கல்லணை :
கல்லணை |
மேலணை :
மேலணை 1836 ஆம் ஆண்டு கொள்ளிடம் பிரியுமிடத்தில் கட்டப்பட்டது. மேலணைப் பகுதியில், காவிரி இரண்டாகப் பிரிவதற்கு முன் கிடைக்கும் தண்ணீர் சீராகக் கட்டுப் படுத்தபட்டு டெல்டா பிரதேசம் முழுவதற்கும் பாசன வசதி கிடைக்கிறது. அளவுக்கு மீறிய வெள்ள காலத்தில் இந்த அணையின் வழியாக விநாடிக்கு 98,000 கன அடி தண்ணீர் கொன்னிடத்திற்குள் பாய்ந்து விடும். இதனால் கல்லணைக்கு வரும் ஆபத்து தடுக்கப்பட்டது.
வேளாண்மை :
நீர்வளம், மண்வளம், காலநிலை, மனித வளம், விற்பனை வசதி, கடன் வசதி இவை மிகுந்த அளவில் இம்மாவட்டத்தில் இருப்பதால், இயற்கையிலேயே வேளாண்மையில் உயர்ந்த நிலையை எட்டியுள்ளது. இம்மாவட்டத்தின் முக்கிய பயிர்கள் நெல், சோளம், கம்பு வரகு, சாமை, மக்காச்சோளம் முதலியன வாகும். பருப்பு வகைகளில் துவரம்பருப்பு அதிகமாக விளைவிக்கப்படுகிறது. எள், நிலக்கடலை, பருத்தி, புகையிலை முதலியனவும் முக்கிய விளைப்பயிர்களாகும். மற்றும் மிளகாய், ஆமணக்கு, வெங்காயம், காய்கறிகள் ஆகியனவும் விளைவிக்கப்படுகின்றன.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருச்சி - Tiruchirappalli - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - திருச்சி, முக்கிய, கல்லணை, tamilnadu, தமிழக, மாவட்டங்கள், வசதி, கொள்ளிடம், இம்மாவட்டத்தில், காவிரி, இடங்களில், தமிழ்நாட்டுத், தகவல்கள், districts, காவிரியின், அணையின், கட்டப்பட்டது, | , tiruchirappalli, தண்ணீர், மேலணை, இம்மாவட்டத்தின், கோரையாறு, முதலியன, கிடைக்கின்றன, இதனால், கிடைக்கிறது, கடற்கரை, information, பருவக்காற்றால், நீர்வளம், உள்ளது, பாய்ந்து