திருச்சி - தமிழக மாவட்டங்கள்
புகழ் பெற்றோர் :
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், சென்னை ராஜதானியில் உணவுத்துறை அமைச்சராய் இருந்த சுதந்திரப் போராட்ட வீரர் டி.எஸ்.எஸ். ராஜன், தமிழக மாணவர்களுக்கு கோனார் உரையை அறிமுகப்படுத்திய அய்யம்பெருமாள் கோனர், பொதுவுடைமை இயக்கத் தலைவர் தோழர். எம்.கல்யாணசுந்தரம் திரைப்பட நடிகரும் பாடகருமான எம்.கே. தியாகராஜ பாகவதர், நடிகவேள் எம்.ஆர். ராதா, வயலின் மேதை லால்குடி ஜெயராமன், கவிஞர் வாலி, கவிஞர் நா. காமராசன், திரைப்பட பின்னனிப் பாடகர் திருச்சி லோகநாதன் முதலியோர் இம்மாவட்டத்தில் பிறந்து புகழ்பெற்றோராவர்.
தொழில்:
துப்பாக்கித் தொழிற்சாலை :
திருவெறும்பூருக்கு அருகில் சுமார் 800 ஏக்கர் நிலப்பரப்பில் நடைபெறும் இத்தொழிற்சாலை மத்திய அரசின் இராணுவத்துறை கீழ் இயங்குகிறது. இராணுவத்திற்குத் தேவைப்படும் பலவகைத் துப்பாக்கிகள் இங்குத் தயாராகின்றன. இத்தொழிற்சாலை தீவிர பாதுகாப்புடன் செயல்படுகிறது.
இரயில் தொழிற்சாலை :
தென்னிந்திய இரயில்வேயின் தென் வட்டத்துக்குத் திருச்சி டிவிஷன் தலைமையிடமாகும். தென் இரயில்வேயின் மீட்டர் கேஜ் பிரிவுத் தொழிற்சாலை திருக்சியிலிருந்து இரண்டு மைல் தொலைவில் திருவெறும்பூர் அருகிலுள்ள பொன்மலையில் உள்ளது. விழுப்புரத்தில் இயங்கி வந்த ஒரு தொழிற்பிரிவும் இதனுடன் இணைப்பப்பட்டு விட்டதால் 9000 பேருக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியிலுள்ளனர். இரயில்வேக்குத் தேவைப்படும் அனைத்து வேலைகளும் இங்கு நடைபெறுகின்றன.
பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ் (பி.எச்.இ.எல்) :
தமிழகத்தின் மிகப் பெரியத் தொழிற்சாலையான இது ஒரு கனரகத் தொழிற்சாலை. இந்திய அரசு இதை செக்கோஸ்லாவாகிய நாட்டின் கூட்டுறவுடன் நடத்துகிறது. இத்தொழிற்சாலையில் கொதிகலன்கள் (ஙிஷீவீறீமீக்ஷீ) உருவாக்கப்பட்டு, பல நாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. இதனால் அந்நியச் செலாவணி மிகுதியாகக் கிடைக்கிறது. பதினெட்டுக் கோடி ரூபாய் மதிப்புள்ள கொதிகலன்களைத் தயாரிக்கிறது. இது திருவெறும்பூர் இரயில் நிலையத்திலிருந்து இரண்டு மைல் தொலைவில் உள்ளது. ஆயிரக்கணக்கானோர் இதில் பணிபுரிகின்றனர்.
செயற்கை வைரம் :
மாவட்டத் தொழில் மையத்தின் மூலம் செயற்கை வைரத் தொழிற் கூட்டுறவுச் சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தொழிலில் சுமார் 40,000 தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். இச்செயற்கை வைரம் ஆந்திரா, கர்நாடகம், ஒரிசா போன்ற மாநிலங்களுக்கு அனுப்பப் படுகின்றன.
நூலாலைகள் :
திருச்சி வட்டத்தில் நமனசமுத்திரம் என்னும் ஊரில் உள்ள புதுக்கோட்டை டெக்ஸ்டைல்ஸ் சுமார் 13000 கதிர்கள் கொண்டது. குளித்தலை வட்டத்தில் மணப்பாறைப் பகுதியில் உள்ள தியாகேசர் ஆலையில் சுமார் 31000 கதிர்கள் உள்ளன. திருச்சி ராம்ஜி நகரில் உள்ள திருச்சிராப்பள்ளி மில்ஸ் சுமார் முக்கிய துணி நெய்யும் ஆலைகளாகும். இவ்வாலைகளால் சுமார் 4000 குடும்பங்கள் பிழைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவை தவிர இம்மாவட்டத்தில் சிறுதொழில் நிலையங்கள் ஏராளமாக உள்ளன.
பொறியியல் துறை கருவிகள் செய்யும் நிறுவனங்கள் சிறு நூலாலைகள், கரும்பு ஆலைகள், மாவு மில்கள், உணவு பொருள் தயாரிப்பகங்கள், சாராயம் தயாரித்தல், புகையிலை, பருத்தி ஆடை நெசவகங்கள், சாக்கு தயாரிப்பு, கைத்தறி உபகரணங்கள், மரச்சாமான்கள் தயாரித்தல், காகிதம், காகிதத்தால் தயாரிக்கப்படும் பொருள்கள், தோல் பொருட்கள், ரப்பர், பிளாஷ்டிக் பொருட்கள், ரசாயனப் பொருட்கள், உலோகமல்லாத பொருட்கள், பீடித்தொழில், அல்லாய் தொழில்கள், இரும்பு உபகரணங்கள், மிஷின் பாகங்கள், மின்சாரப் பொருட்கள், பேருந்து, லாரி இவற்றின் சில உதிரி பாகங்கள் எனப் பல தொழிலகங்கள் உள்ளன. பாய்லர் தொழிற்சாலைக்குத் தேவைப்படும் உதிரிப் பொருட்களைத் தயாரிக்க முந்நூறுக்கும் மேற்பட்ட சிறு தொழிலகங்கள் செயல்படுகின்றன.
கோவை, மதுரை, சேலம் மாவட்டங்களுக்கு அடுத்ததாக திருச்சி மாவட்டம் தொழில் வளர்ச்சியில் சிறந்து விளங்குகிறது. நிலப்பரப்பு, கிடைக்கும் மூலப்பொருட்கள், மனிதவளம் இவற்றை கருத்தில் கொண்டு பார்த்தால், இம்மாவட்டத்தில் புதியத் தொழில்கள் தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் ஏராளம். தொழில் தொடங்குவதற்குத் தேவையான மூலதனங்களையும், சலுகைகளையும் வழங்கக் கூடிய தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம், தமிழ்நாடு சிறுதொழில் மேம்பாட்டுக் கழகம், மாவட்டத் தொழில் மையம், கதர் கிராமத் தொழில்வாரியம் போன்ற நிறுவனங்களைத் தொழில் முன்வோர்களும், தொழில் வல்லுனர்களும் தக்கத் திட்டத்தோடு அணுகினால், பல புதியத் தொழில்கள் இம்மாவட்டத்தில் தோன்றி பொருள்வளம் பெருகி வேலையில்லாப் பிரச்சினையும் ஓரளவு தீரும். ாவட்டத்தில் தோன்றி பொருள்வளம் பெருகி வேலையில்லாப் பிரச்சினையும் ஓரளவு தீரும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருச்சி - Tiruchirappalli - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - திருச்சி, தொழில், சுமார், பொருட்கள், தமிழக, இம்மாவட்டத்தில், tamilnadu, தொழிற்சாலை, மாவட்டங்கள், தேவைப்படும், தகவல்கள், தொழில்கள், தமிழ்நாட்டுத், உள்ள, பாகங்கள், உபகரணங்கள், கதிர்கள், சிறுதொழில், சிறு, தயாரித்தல், தொழிலகங்கள், பெருகி, பிரச்சினையும், ஓரளவு, தீரும், | , வேலையில்லாப், பொருள்வளம், தமிழ்நாடு, கழகம், தோன்றி, புதியத், தொழிலாளர்கள், இத்தொழிற்சாலை, இரயில், இரயில்வேயின், தென், கவிஞர், திரைப்பட, tiruchirappalli, districts, information, இரண்டு, மைல், வைரம், மாவட்டத், போன்ற, நூலாலைகள், செயற்கை, மேற்பட்ட, தொலைவில், திருவெறும்பூர், உள்ளது, வட்டத்தில்