இராமநாதபுரம் - தமிழக மாவட்டங்கள்
புகழ்பெற்றோர்:
பாஸ்கர சேதுபதியும், முத்துராமலிங்க சேதுபதியும் இராமநாதபுரத்தை ஆண்டவர்கள். சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர்கள். பாஸ்கர சேதுபதி தமிழ், வடமொழிப் புலவர்களையும், இசைக் கலைஞர்களையும் ஆதரித்து புகழ் பெற்றார். முத்துராமலிங்கப் பட்டிணத்தை அமைத்த முத்துராமலிங்க சேதுபதி தமிழறிஞர்களைப் போற்றும் புரவலராய் விளங்கினார். இராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரையைச் சீதக்காதி கேட்காமலேயே வாரிக் கொடுக்கும் கொடை வள்ளலாய்த் திகழ்ந்தார். இம்மாவட்டத்தை சேர்ந்த முத்துராமலிங்கத் தேவர் இந்திய விடுதலைக்காக போராடிய சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். மேலும் பாம்பன் சுவாமிகள், குணங்குடி மஸ்தான், இணையற்ற இமாம், உமறுப்புலவர், இன்குலாப், முகவை இராசமாணிக்கம், நாரா. நாச்சியப்பன் முதலியோர் இம்மாவட்டத்தில் பிறந்து புகழ்பெற்றோர் ஆவர்.
பாம்பன் சுவாமிகள் |
முகவை இராஜமாணிக்கம் காங்கிரஸ் இயக்கத்திலிருந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர். பிறகு பொதுவுடைமைக் கட்சியில் பணியாற்றியும் சிறை சென்றவர். பல நூல்களை எழுதியுள்ளார்.
புவிவளம்:
இராமநாதபுரம் மாவட்டத்தில் மண்ணுக்கடியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பல இடங்களில் பலவகைக் கனிமங்கள் கிடைப்பது அறியவந்துள்ளது.
இல்மைனைட்/கார்னட்
இல்மைனட் சத்துள்ள மணல் கடற்கரை ஊர்களில் கிடைக்கிறது. இது இராமேஸ்வரம் தீவின் வடகரையில் மிகுதியாகக் கிடைக்கிறது. இங்கு கார்னட் கனிமமும் பல ஆயிரம் டன் கிடைக்கிறது.
சுண்ணாம்புக்கல்:
அருப்புக்கோட்டை வட்டத்திலுள்ள பாலநத்தம், பண்டக்குடி ஆகிய இடங்களில் சுண்ணாம்புக்கல் ஏராளமாக இருக்கிறது. சிமெண்ட் தொழிலுக்கும், பிளீச்சிங் பவுடர் தயாரிப்புக்கும், கால்சியம் கார்பைடு செய்வதற்கும் சுண்ணாம்புக்கல் பெரிதும் பயன்படுகிறது.
ஜிப்சம்:
முதுகுளத்தூர் வட்டத்திலுள்ள பேரையூர், அவத்தாண்டை, கோக்கடிப் பகுதிகளிலும், கீழக்கரை, வாலிநோக்கம் ஆகிய ஊர்களிலும் ஜிப்சம் கிடைக்கிறது. இது சிமெண்ட் தொழிலுக்கு மிகவும் பயன்படுவதாகும்.
மஞ்சள்காவி:
மானாமதுரை, சிவகங்கைப் பகுதிகளில் கிடைப்பதை விட மிகக் குறைந்த அளவே மஞ்சள் காவி படிவங்கள் இம்மாவட்டத்தில் கிடைக்கின்றன. எட்டு வகை வண்ணங்களில் பெயிண்ட் தயாரிக்க மஞ்சள் காவி பயன்படுகிறது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இராமநாதபுரம் - Ramanathapuram - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - இராமநாதபுரம், கிடைக்கிறது, மாவட்டங்கள், tamilnadu, தமிழக, ஆகிய, பாம்பன், சுவாமிகள், சுதந்திரப், சுண்ணாம்புக்கல், தகவல்கள், தமிழ்நாட்டுத், என்னும், ஆயிரம், காவி, | , பாடல்களைப், பாடிய, பிறந்த, சிறை, ஜிப்சம், வட்டத்திலுள்ள, சிமெண்ட், இம்மாவட்டத்தில், மஞ்சள், சென்றவர், இடங்களில், கார்னட், பயன்படுகிறது, இணையற்ற, சேதுபதியும், முத்துராமலிங்க, போராட்டத்தில், சேதுபதி, பாஸ்கர, புகழ்பெற்றோர், ramanathapuram, districts, information, புகழ், பெற்றார், இன்குலாப், முகவை, நாரா, இமாம், மஸ்தான், மாவட்டத்தில், ஆவார், குணங்குடி, நாச்சியப்பன்