இராமநாதபுரம் - தமிழக மாவட்டங்கள்
உத்திரகோசமங்கை:
இது இராமநாதபுரத்துக்கு தென்மேற்கே 10 மைல் தொலைவில் உள்ளது. இது ஒரு காலத்தில் பாண்டியர் தலைநகராய் விளங்கியது. நாயக்க மன்னர் கல்வெட்டுகள் இவ்வூர் கோவில்களில் உள்ளன. மாணிக்கவாசகரால் பாடப்பெற்றத் தலம். இங்கு ரயில் நிலையம் உள்ளது.
திருப்புல்லனை:
இராமநாதபுரத்திலிருந்து ஏழு மைல் தொலைவில் இவ்வூர் உள்ளது. இவ்வூர் பெருமாள் கோயில் பிரசித்திப் பெற்றது. இதற்கருகில் உள்ள மோர்க்குளம் என்னும் ஊரில் உப்பளம் இருக்கிறது.
மண்டபம்:
மண்டபம் |
வடக்கிழக்குப் பருவக்காற்றால் பெரும் புயல் வீசும். பல சிறு தீவுகள் தென்மேற்குப் பருவக்காற்றால் நேரும் அபாயத்தைத் தடுத்து நிறுத்துகின்றன. சுற்றியிருந்த காடுகளை அழித்து குடியேறியவர்கள் வெற்றிலை பயிரிட்டதால் வெற்றிலை மண்டபம் என்ற பெயரும் உண்டு. படகு கட்டும் துறை இங்கிருக்கிறது. இரயில் நிலையமும் உள்ளது. மண்டப முகாம் ஒரு காலத்தில் இலங்கை அரசின் கீழிருந்தது. ஐந்து மைல் நீள சாலையும், பல கட்டிடங்களும், குடியிருப்புகளும் கொண்ட இவ்விடம் தற்போது தமிழக அரசு பொறுப்பில் உள்ளது. இங்குள்ள அருங்காட்சியகம் காண்பதற்கு அரிய பல உயிரினங்களைக் காட்சிக்கு வைத்துள்ளது. செயற்கை முத்து தயாரிக்கும் தமிழ்நாடு முத்து நிறுவனம் தமிழக அரசால் இங்கு நடத்தப்படுகிறது.
பாம்பன் கால்வாய்:
பாம்பன் கால்வாய் |
பாம்பன்
இங்கு கத்தோலிக்க தேவாலயம் உள்ளது. விவேகானந்தர் நினைவுத் தூண் ஒன்றும் நடப்பட்டிருக்கிறது. மீனவர்களும் நெசவாளர்களும் இங்கு அதிகமாக வாழ்கின்றனர். இந்திய அரசின் வானிலை ஆய்வு மையம் செயல்படுகிறது.
தனுஷ்கோடி
தனுஷ்கோடி |
இராமேஸ்வரம் நகர்:
இராமேஸ்வரம் தீவின் நீளம் 15 மைல். இதில் எட்டு மைல் வரைக்கும் இத்தீவு ஆறு மைல் அளவு அகலமாக இருக்கிறது. எஞ்சிய ஏழு மைல் நீளத்திற்கு தீவின் அகலம் ஒரு மைல்தான். மீன்பிடிப்பது முக்கியத் தொழில். சங்கு எடுப்பதும் படகு ஓட்டுவதும் பிற தொழில்கள். இத்தொழில்களில் இங்குப் பெருமளவு வாழும் முஸ்லீம்கள் சிறந்து விளங்குகின்றனர். முத்து வாணிகமும் சிறப்பாக நடைபெறுகிறது. மணல்மேடுகளில் விளையும் வெண்தாழம்பூ மிகுதியாகவும், மலிவாகவும் கிடைக்கிறது. கடலில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு கண்ணைக் கவரும் அழகியப் பொருட்களைச் செய்து விற்கின்றனர். இங்கு வெளிநாட்டு பயணிகள் வருகை அதிகம். சத்திரங்களும் ஜட்கா வண்டிகளும் மிகுதியாகக் காணப்படுகின்றன. இராமேஸ்வரம் தீர்த்தம், தேங்காய், புளி, சரளைக்கல், சோழி, சங்கு, மீன் முதலியன இங்குள்ள முக்கிய ஏற்றுமதிப் பொருட்களாகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இராமநாதபுரம் - Ramanathapuram - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - இங்கு, மைல், உள்ளது, தமிழக, இராமேஸ்வரம், மண்டபம், மாவட்டங்கள், கால்வாய், tamilnadu, பாம்பன், இராமநாதபுரம், தீவின், தனுஷ்கோடி, முத்து, ரயில், இவ்வூர், தமிழ்நாட்டுத், தகவல்கள், தொலைவில், சங்கு, கடல், இங்குள்ள, கொண்டு, | , இருக்கிறது, காலத்தில், information, districts, ramanathapuram, என்னும், பெயர், படகு, வெற்றிலை, பருவக்காற்றால், அரசின்