இராமநாதபுரம் - தமிழக மாவட்டங்கள்
கடலாடி:
கடல் அலைகளின் ஓசை எப்போதும் இவ்வூரில் கேட்பதால் இப்பெயர் பெற்றிருக்கலாம். இங்கிருந்து முதுகுளத்தூருக்கு 15 கி.மீ. கேழ்வரகு இங்கு நிறைய விளைவிக்கப்படுகிறது. கடல் மீனும் நண்டும் முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள்.
கமுதி
இவ்வூரிலிருந்து முதுகுளத்தூர் 12 மைல் தொலைவு உள்ளது. குண்டாற்றின் கரையில் இது அமைந்துள்ளது. 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள கோட்டையால் புகழ் பெற்ற ஊர். 1801 இல் இக்கோட்டை ஆங்கிலேயர் வசமிருந்தது. பிறகு மருது பாண்டியரால் கைப்பற்றப்பட்டது. வீரபாண்டிய கட்டப் பொம்மனும் இதைப் பயன்படுத்தியுள்ளார். இப்பொழுது பாழடைந்த நிலையில் உள்ளது. இங்கு மறவர்களும், நாடார்களும், முஸ்லீம்களும் கிருத்துவர்களும் வாழ்கின்றனர். சுந்தர பாண்டியனால் கட்டப்பட்ட மீனாட்சியம்மன் கோயில் இங்குள்ளது. பருத்தி நிறைய விளைவிக்கப்படுகிறது. செவ்வாய்கிழமைகளில் சந்தை கூடுகிறது.
தொண்டி:
தொண்டி |
திருவாடானை:
இவ்வூர் வழியேதான் தொண்டிக்குச் செல்ல வேண்டும். 1605 முதல் 1650 வரை சேதுபதிகளின் தலைநகராய் திருவாடானை இருந்தது. இவ்வூர் சிறப்புக்குக் காரணமாக விளங்கும் சிவன் கோயில் தேவக்கோட்டை நகரத்தார்களால் திருப்பணி செய்யப்பட்டது. இது சம்பந்தரால் பாடப்பெற்ற தலமாகும்.
பரமக்குடி:
மதுரையிலிருந்து 47 மைல் தொலைவிலும், சிவகங்கையிலிருந்து 26 மைல் தொலைவிலும், இராமநாதபுரத்திலிருந்து 23 மைல் தொலைவிலும், முதுகுளத்தூ ரிலிருந்து 16 மைல் தொலைவிலும் பரமக்குடி அமைந்துள்ளது. வைகை ஆற்றின் கரையில் வளமாக விளங்குகிறது; பல அரசு அலுவலகங்கள், வணிக நிலையங்கள் நிறைந்த ஊர். கிருத்துவர்கள் பெரும் தொகையினராய் வாழ்கின்றனர். இவர்கள் வழிபடும் கத்தோலிக்க தேவாலயமும் இந்துக்கள் வழிபடும் சிவாலயமும் நகரைச் சிறப்பிக்கின்றன. வெளியூர்களில் நகை வியாபாரத்தில் சிறந்து விளங்கும் அநேக ஆயிர வைசிய இனத்துப் பெருமக்கள் இவ்வூரைச் சேர்ந்தவர்களே. நெசவுத் துறையில் ஈடுபடும் செளராஷ்டிர இனத்தினரும் உள்ளனர். வேளாண்மைப் பள்ளியும், வேளாண்மைப் பண்ணையும் இங்கு அரசினரால் நடத்தப்படுகின்றன. ரயில் நிலையம் உள்ளது. வியாழன்தோறும் சந்தை கூடுகிறது. இராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர் வட்ட மக்கள் இச்சந்தைக்கு வந்து போகிறார்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இராமநாதபுரம் - Ramanathapuram - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - மைல், இராமநாதபுரம், தொலைவிலும், tamilnadu, இங்கு, தமிழக, மாவட்டங்கள், பரமக்குடி, உள்ளது, தொண்டி, தமிழ்நாட்டுத், கடல், தகவல்கள், இத்துறைமுகம், அரபு, இங்குள்ள, திருவாடானை, விளங்கும், வழிபடும், வேளாண்மைப், | , இவ்வூர், கரையில், நிறைய, information, districts, ramanathapuram, விளைவிக்கப்படுகிறது, முதுகுளத்தூர், சந்தை, கோயில், வாழ்கின்றனர், அமைந்துள்ளது, கூடுகிறது