இராமநாதபுரம் - தமிழக மாவட்டங்கள்
வேளாண்மை:
இராமநாதபுரம் மாவட்டத்தில் வைகை, பாலாறு, மணிமுத்தாறு, வைப்பாறு, சருகணியாறு, பெரியாறு, உப்பாறு, குண்டாறு, அர்ச்சுனா ஆறு, விரிசலையாறு போன்ற பெரிய ஆறுகளும், கிருதமால் ஆறு, கானல் ஓடை, தேனாறு, சீவலப்பேரியாறு, மன்னார்கோட்டை நதி, விஜயநதி போன்ற சிறிய ஆறுகளும் ஓடி விவசாயத்தைச் செழிப்பாக்குகின்றன. இதுதவிர குளங்கள், கிணறுகள், கண்மாய்கள் வேளாண்மை சிறப்புற நடைபெற உதவுகின்றன. 21 அடி கி.மீ. நீளமும், 57 கோடி கன அடி கொள்ளளவும் உடைய இராஜசிங்கமங்கலம் ஏரியால் சுமார் 5000 ஏக்கர் நிலப்பரப்பே நீர் பெறுகிறது. பரமக்குடி, முதுகுளத்தூர், திருவாடானைப் பகுதிகள் களர் நிலம் மிகுந்ததால் மழை பெய்த பிறகே நாற்று நடுவார்கள். இங்கு மழை அதிகம் தேவைப் படாத பயிர்களான மல்லி, மிளகாய், பருத்தி, வரகு முதலியவற்றை மிகுதியாக பயிரிடுகின்றனர்.
வைகை பாயும் பகுதிகளிலும், பெரியாற்று நீர் பாயும் சில சிறு பகுதிகளிலும், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்திலும், மழை வளத்தோடு கிணற்று வசதியும் உடைய சில பகுதிகளிலும் நெல் பயிராகிறது. கம்பு, கேழ்வரகு, நெல் தவிர ஏனைய தானியங்கள் மாவட்டமெங்கும் பயிராகின்றன. இராமநாதபுரம், பரமக்குடி வட்டங்களில் மிளகாய் விளைவிக்கப்படுகிறது. இம்மாவட்டத்தில் 2,14,999 ஹெக்டெர் நிலப்பரப்பில் விவசாயம் நடைபெறுகிறது. நெல் பயிரிடும் மொத்தப் பரப்பு 1,32,805 ஹெக்டெர். முக்கிய பயிர்கள் பருத்தி, நெல், சோளம், கம்பு, நிலக்கடலை, பருப்பு வகைகள், கேழ்வரகு ஆகியன.
தொழில்:
இராமநாதபுரம் மாவட்டம் தொழிற்வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டமாகும். டெக்ஸ்டைல் ஸ்பின்னிங் ஆலைகள் நான்கும் வேதிப் பொருட்கள் ஆலைகள் இரண்டும் இங்கு முக்கியத் தொழிற்சாலைகள். சிறுதொழில் மையம் ஒன்று உள்ளது. 672 சிறுதொழில் ஆலைகள் உள்ளன. இராமநாதபுர மாவட்ட கூட்டுறவு நூற்பாலை கமுதி வட்டம் அரசன்குளத்தில் உள்ளது. இந்த ஆலையில் தரமான 40,60 மற்றும் 42 நூல் ரகங்கள் தயாராகின்றன. 12,320 கதிர்கள் கொண்ட இவ்வாலைக்கு தமிழ்நாடு அரசு 125 இலட்சம் பங்கு மூலதனம் தந்துள்ளது. நித்திய கல்யாணி டெக்ஸ்டைல் மில்ஸ் திருவாடானை வட்டம் சின்னகீரமங்கலத்தில் அமைந்துள்ளது. கப்பல் பழுது பார்க்கும் பட்டறை ஒன்று மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ளது.
கைத்தொழில் கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு பல சலுகைகளையும் உதவிகளையும் வழங்குகிறது. இதைப் பயன்படுத்தி இராமநாதபுர மாவட்டத்தில் வளர்ச்சியுற்ற தொழில்கள் பின்வருமாறு:
மரவேலை, தச்சுவேலை கூட்டுறவு சங்கம், உலோகப் பாத்திரங்கள் தொழில் கூட்டுறவு சங்கம், செங்கல் தயாரிப்புக் கூட்டுறவு சங்கம், தீக்குச்சி தயாரிப்புக் கூட்டுறவு சங்கம், அச்சிடுதல், சாயம் தோய்த்தல் தொழில் கூட்டுறவு சங்கம், ஆயத்த ஆடைகள் தயாரித்தல், காகித உறைகள் தயாரித்தல், மீன்வலை நெசவுத் தொழிலாளர் கூட்டுறவு சங்கம்.
கமுதியில் நிறுவப்பட்டுள்ள தொழிற்கூடத்தில் ஓரளவு எழுத்தறிவு பெற்றவர்களுக்குத் தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது. தையல், தச்சு, லேத் போன்றத் தொழில்களில் பயிற்சி தரப்படுகிறது. 14 இலட்சம் ரூபாய் செலவில் பரமக்குடியில் துவங்கப்பட்டுள்ள தொழிற்கூடத்திலும் பலவித தொழிற்பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. சோப்புத் தொழில், தோல் பதனிடுதல், தோல் பொருட்கள் தயாரித்தல், செக்கு எண்ணெய் தயாரித்தல், சுண்ணாம்பு தயாரித்தல், தச்சுக் கொல்லுத் தொழில்கள், கைமுறைக் காகிதத் தொழில்கள், தேனீ வளர்ப்பு, நார் , பிரம்பு மற்றும் மூங்கில் தொழில்கள் போன்ற கதர் கிராமத் தொழில்களும் இம்மாவட்டத்தில் நடைபெறுகின்றன. இம்மாவட்டத்தில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பனை ஓலையைக் கொண்டு பாய் முடைதல், அழகுப் பொருட்கள் செய்தல் ஆகியத் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். தென்னை மட்டைகளிலிருந்து நார்கள் எடுத்து வெளி மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
தொழில் வாய்ப்பு:
கடற்கரைப் பகுதிகள் செம்பனை எண்ணெய் (பாமாயில்) தயாரிக்கப் பயன்படும் செம்பனைகள் வளர உகந்தவை. இப்பனைகளை வளரச் செய்து, இவற்றிலிருந்து எண்ணெய் தயாரிக்கும் ஆலை நிறுவவும் வாய்ப்புள்ளது. மண்டபம் பகுதிகளில் மல்லிகை அதிகம் பயிராகிறது. இப்பூக்களில் இருந்து சென்ட் தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவவும் வாய்ப்பிருக்கிறது. இம்மாவட்டத்தில் ஏராளமாக கிடைக்கும் கடல் பொருட்களைக் கொண்டு, சங்கு வளையல்கள், காதணிகள், மாலைகள் போன்றவற்றை தயாரிக்கும் தொழில்கூடங்களை அமைக்கலாம். கிளிஞ்சல்களைக் கொண்டு சுண்ணாம்புத் தயாரிக்கும் தொழிற்சாலைகளை நிறுவவும் வாய்ப்புள்ளது. தொழிற்துறை மென்மேலும் வளரவும், புதியத் தொழில் முனைவோர், தொழில் வல்லுநர், மூலப்பொருள், மனித வளம் இவற்றை ஒன்றிணைத்து புதியத் தொழில்கள் தொடங்க ஆலோசனைகள் தந்தும் முதலீடு வழங்கியும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகமும் (ஜிமிஞிசிளி), சிப்காட்டும் உதவி வருகின்றன. இராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர், பரமக்குடி, இராமநாதபுரம், திருவாடானை, கமுதி ஆகிய வட்டங்கள் தொழில் துறையில் பின்தங்கிய வட்டங்களாக அரசு அறிவித்துள்ளபடியால், மேற்கண்ட நிறுவனங்களிடமிருந்து ஆலோசனைகளையும், சலுகைகளையும், உதவிகளையும் பெற்று தொழில் தொடங்கலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இராமநாதபுரம் - Ramanathapuram - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தொழில், இராமநாதபுரம், கூட்டுறவு, சங்கம், தொழில்கள், தயாரித்தல், நெல், இம்மாவட்டத்தில், மாவட்டங்கள், தமிழக, தயாரிக்கும், tamilnadu, அரசு, மாவட்டத்தில், போன்ற, நிறுவவும், தகவல்கள், பொருட்கள், ஆலைகள், தமிழ்நாட்டுத், பகுதிகளிலும், கொண்டு, எண்ணெய், பரமக்குடி, வட்டம், தமிழ்நாடு, சலுகைகளையும், உதவிகளையும், | , கமுதி, தோல், வாய்ப்புள்ளது, திருவாடானை, இராமநாதபுர, இலட்சம், தொழில்களில், புதியத், தயாரிப்புக், ஹெக்டெர், உடைய, நீர், முதுகுளத்தூர், பகுதிகள், ஆறுகளும், வைகை, ramanathapuram, districts, information, வேளாண்மை, இங்கு, அதிகம், பின்தங்கிய, டெக்ஸ்டைல், சிறுதொழில், ஒன்று, கேழ்வரகு, கம்பு, மிளகாய், பருத்தி, பாயும், பயிராகிறது, உள்ளது