இராமநாதபுரம் - தமிழக மாவட்டங்கள்
பூவரசன்ஹள்ளித் தீவு:
கீழக்கரையிலிருந்து 10 கி.மீ. தொலைவிலிருக்கும் இத்தீவில் பூவரச மரங்கள் நிறைந்து காணப்படுகின்றன.
பிள்ளையார்முனைத் தீவு:
பாலயாமுனைத் தீவு என்ற பெயரும் இதற்குண்டு. பூவரசன்ஹள்ளித் தீவுக்கு அருகில் உள்ளது. இங்கு மனிதர்கள் வசிப்பதில்லை.
முளித் தீவு:
இத்தீவிற்கும் புதுமடத்திற்கும் 10 கி.மீ. தொலைவு. இங்கு மனிதக் குடியிருப்புகள் இல்லை. சுண்ணாம்புப் பாறைகள் இங்கு மிகுதியாதலால், சுண்ணாம்புக் கல் வெட்டி எடுப்பதற்காக மட்டும் தொழிலாளர்கள் செல்கிறார்கள்.
நல்லதண்ணீர்த் தீவு:
இத்தீவு சுளித் தீவிற்கு 3 கி.மீ. தொலைவிலும், வாலிநோக்கத்திலிருந்து 8 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இங்கு சவுக்குத் தோப்புகள் ஏராளம். இத்தீவில் நல்ல குடிநீர் இடுப்பளவு தோண்டினாலே கிடைக்கிறது. இதனாலேயே நல்லத்தண்ணீர்த் தீவு என பெயர் பெற்றுள்ளது.
உப்புத்தண்ணீர் தீவு:
இத்தீவில் கிடைக்கும் ஊற்றுநீர் உப்புக் கரிப்பதால் இப்பெயர் ஏற்பட்டுள்ளது. இத்தீவு சுளித்தீவிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது.
கோட்டைகள்:
இராமநாதபுரம் மாவட்டம் பழங்காலத்தில் மறவர் சீமையாய் வீரத்தின் விளைநிலமாய் இருந்தது. ஆட்சியைக் கைப்பற்றுவதற்காகவும் ஆட்சியை காப்பாற்றுவதற்காகவும் போர்கள் நிகழ்ந்தபோது படைவீரர்களின் மக்களின் ஆட்சியாளர்களின் அரணாய் விளங்கியவை மண்ணாலும் கல்லாலும் அமைந்த கோட்டைகள். வேறெந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் மிக அதிக எண்ணிக்கையில் கோட்டைகள் உள்ளன. இவை கி.பி. 1801 இல் கிழக்கிந்தியக் கம்பெனியாரின் தாக்குதலுக்கு உள்ளாகி நிலைகுலைந்து இடிபாடுகளுடன் இப்போது காணப்படுகின்றன. ஒவ்வொரு வட்டத்திலும் உள்ள கோட்டைகள் பின்வருமாறு:
இராமநாதபுரம் வட்டம்:
இராமநாதபுரம் கோட்டை, சூரன் கோட்டை, திருபுல்லாணிக் கோட்டை, சக்கரக் கோட்டை, அத்தி ஊத்துக் கோட்டை, சித்தார் கோட்டை, குதகக் கோட்டை.
முதுகுளத்தூர் வட்டம்:
செங்கோட்டை, சோனைப்பிரியான் கோட்டை, வேந்தர் கோட்டை, பெரியகூரான் கோட்டை, திருமாலுக்கந்தான் கோட்டை, மாணிக்கநாதன் கோட்டை, ஆலம்பக் கோட்டை, கணக்கன் கோட்டை, கொக்கரன் கோட்டை.
பரமக்குடி வட்டம்:
கீழக்கோட்டை, கீழப்புதுக்கோட்டை, தென்னவன் புதுக்கோட்டை, காமன் கோட்டை, புதனுர் கோட்டை, சங்கன் கோட்டை, சிரகிக் கோட்டை, குமுக்கோட்டை.
கமுதி வட்டம்:
கமுதிக் கோட்டை, மேலமுடி மன்னர் கோட்டை, கீழமுடி மன்னர் கோட்டை.
திருவாடனை வட்டம்:
அடந்தனக் கோட்டை, அவத்தளிக் கோட்டை, அழகர்தேவன் கோட்டை, அஞ்சு கோட்டை, ஆறுமுகக் கோட்டை, ஆணையார் கோட்டை, உறுதிக்கோட்டை, ஏறக்கோட்டை, ஓயிக்கோட்டை, ஏரியூர்க் கோட்டை, கீழக்கோட்டை, கொத்தியார் கோட்டை, செட்டிக் கோட்டை, சாத்தாணிக் கோட்டை, சிறுமலைக் கோட்டை, திட்டுக்கோட்டை, திருப்பாக் கோட்டை, தும்படைக்கா கோட்டை, ரானசிங்க மங்கலம் கோட்டை, பொட்டக் கோட்டை, மொன்னாக் கோட்டை, மண்டலக் கோட்டை, மாதவனிக் கோட்டை, அன்னிக் கோட்டை, பழையன் கோட்டை, பொன்னளிக் கோட்டை, ராணிக் கோட்டை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இராமநாதபுரம் - Ramanathapuram - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - கோட்டை, இராமநாதபுரம், தீவு, வட்டம், இங்கு, கோட்டைகள், tamilnadu, தமிழக, மாவட்டங்கள், இத்தீவில், தகவல்கள், தமிழ்நாட்டுத், districts, ramanathapuram, கீழக்கோட்டை, | , மன்னர், தொலைவிலும், information, காணப்படுகின்றன, உள்ளது, இத்தீவு, பூவரசன்ஹள்ளித்